சர்ச்சையை அடுத்து யோகிபாபுவிற்கு திடீர் திருமணம்!

05 Feb, 2020 | 02:49 PM
image

விஜய முருகன் இயக்கத்தில் யோகி பாபு, அஞ்சலி, வரலட்சுமி சரத்குமார் உள்ளிட்டோர் நடித்து வரும் படம் காக்டெய்ல். இந்த திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் யோகி பாபு முருகன் வேடத்தில் தோன்றியதை அடுத்து, என்ன தமிழ் கடவுள் முருகனை கிண்டல் செய்கிறீர்களா, என ரசிகர்கள் கேள்வியெழுப்பியிருந்தார்கள்.

ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் சர்ச்சை பெரிதானதைதொடர்ந்து “காக்டெய்ல்“ படத்தின் தயாரிப்பாளரான பி.ஜி. முத்தையா இது குறித்து விளக்கம் அளித்து அறிக்கை வெளியிட்டார். மேலும் இனி இது போன்று நடக்காது என்று உத்தரவாதம் அளித்துள்ளார். 

இந்நிலையில், தமது திருமணம் தொடர்பில் இதுவரை மௌனம் காத்த யோகி பாபுவுக்கும், மஞ்சு பார்கவிக்கும் இன்று காலை குலதெய்வம் கோவிலில்  எளிமையாக திருமணம் நடந்துள்ளது.

தமது திருமணம் புகைப்படத்தை டுவிட்டரில் வெளியிட்டு யோகி பாபு கூறியிருப்பதாவது,

 இன்று காலை (05.02.2020) எனது குலதெய்வ கோவிலில் வைத்து #மஞ்சுபார்கவிக்கும் எனக்கும் திருமணம் நடைபெற்றது என்பதை அனைவருக்கும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். வரும் மார்ச் மாதம் சென்னையில் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெறவுள்ளது என்று கூறியுள்ளார்.

யோகி பாபுவின் டுவீட்டை பார்த்த திரையுலக பிரபலங்களும், ரசிகர்களும் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். 

“இந்த தை மாதம் உங்களுக்கு திருமணம் நடக்கும்“ என்று நடிகர் ரஜினிகாந்த் சொன்னார் என யோகி பாபு தர்பார் இசை வெளியீட்டு விழாவில் தெரிவித்திருந்தார்.  ரஜினி கூறியபடியே யோகி பாபுவுக்கு திருமணம் நடந்துவிட்டது என்று கூறி ரஜினி ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

ஃபர்ஸ்ட் லுக்  “காக்டெய்ல்“ 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

புதிய முயற்சியாக முதலில் இரண்டாம் பாகத்தை...

2024-04-18 17:34:41
news-image

சாதிய அரசியலை அலசும் அண்ட்ரியாவின் 'மனுசி'

2024-04-18 17:31:38
news-image

நடிகர் மன்சூர் அலிகான் வைத்தியசாலையில் அனுமதி...

2024-04-18 13:17:36
news-image

சுப்பர் ஸ்டார் ரஜினியின் பாராட்டைப் பெற்ற...

2024-04-17 17:43:13
news-image

இயக்குநர் ஷங்கரின் இல்ல திருமண வரவேற்பில்...

2024-04-17 17:37:23
news-image

சீயான் விக்ரம் நடிக்கும் 'தங்கலான்' திரைப்படத்தின்...

2024-04-17 17:39:11
news-image

வல்லவன் வகுத்ததடா - விமர்சனம்

2024-04-17 17:39:57
news-image

மோகன் நடிக்கும் 'ஹரா' படத்தின் டீசர்...

2024-04-16 17:39:18
news-image

கெட்ட வார்த்தைகளை பேசி ரசிகர்களை வசப்படுத்தி...

2024-04-16 17:43:10
news-image

தமிழர்களின் பாரம்பரிய கலைக்கு ஆதரவளிக்கும் ராகவா...

2024-04-16 17:45:02
news-image

டிஜிட்டல் தள ரசிகர்களின் வரவேற்பை பெறுமா...

2024-04-16 17:45:54
news-image

மே மாதத்தில் வெளியாகும் வரலட்சுமி சரத்குமாரின்...

2024-04-16 17:41:35