சுதந்திர தின உரையினை செயல் வடிவமாக்குங்கள் - மங்கள வலியுறுத்தல் 

Published By: Vishnu

04 Feb, 2020 | 03:33 PM
image

(நா.தனுஜா)

72 ஆவது சுதந்திரதின நிகழ்வில் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ நிகழ்த்திய உரை மிகவும் சிறப்பானதாக இருந்ததாகக் குறிப்பிட்டிருக்கும் பாராளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர, உரையில் குறிப்பிட்ட விடயங்களை ஜனாதிபதி நடைமுறைப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தியிருக்கிறார்.

அத்தோடு 1948 ஆம் ஆண்டிலிருந்து ஆரம்பிக்கப்பட்ட பயணம் சிறந்த உரைகளை நிகழ்த்திய நன்நோக்கம் கொண்ட தலைவர்களைக் கொண்டிருக்கிறது. ஆனால் இது செயற்பட வேண்டிய தருணமாகும் என்றும் அவர் சுட்டிக்காட்டியிருக்கிறார்.

இன்று சுதந்திர சதுக்கத்தில் இடம்பெற்ற நாட்டின் 72 ஆவது சுதந்திரதின வைபவத்தில் உரை நிகழ்த்திய ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ, 'இலங்கையின் பிரஜைகள் அனைவருக்கும் சுதந்திரமாகவும், பாதுகாப்பாகவும் வாழ்வதற்கான உரிமை இருக்கிறது. 

அதேபோன்று அவர்களுக்கு இருக்கக்கூடிய சுதந்திரமாகச் சிந்தித்தல், தனிப்பட்ட அபிப்பிராயங்களைக் கொண்டிருப்பதற்கான சுதந்திரம், கருத்துச்சுதந்திரம் ஆகிய உரிமைகளை உறுதிசெய்வதற்கு நாம் முனைப்புடன் செயலாற்றுவோம்' என்று உறுதியளித்ததுடன், மேலும் பல விடயங்கள் குறித்தும் பேசியிருந்தார்.

இந்நிலையில் ஜனாதிபதியின் உரை தொடர்பில் முன்னாள் அமைச்சரும், பாராளுமன்ற உறுப்பினருமான மங்கள சமரவீர அவரது டுவிட்டர் பக்கத்திலேயே மேற்கண்டவாறு கூறினார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அநுராதபுர திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:47:53
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38