மின்துண்டிப்புக்கள் தொடர்பில் மின்சார சபையிடம் அறிக்கை கோரும் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு 

Published By: R. Kalaichelvan

04 Feb, 2020 | 02:56 PM
image

(செ.தேன்மொழி)

பொதுமக்களுக்கு முன் அறிவித்தல் இன்றி மேற்கொள்ளப்பட்ட மின்துண்டிப்புக்கள் தொடர்பில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு இலங்கை மின்சார சபையிடம் கோரிக்கை விடுத்துள்ள பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிக்கை கிடைக்கப் பெற்றதன் பின்னர் நடவடிக்கை எடுக்க எதிர்பார்த்திருப்பதாகவும் தெரிவித்துள்ளது.

வத்தளை , ஜா - எல , கந்தானை ,களனி , மஹரகம,பொரலஸ்கமுவ, நுகேகொட , மிரிஹான மற்றும் ஹிக்கடுவ ஆகிய பகுதிகளுக்கு முன் அறிவித்தலின்றி மின் துண்டிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டு பிரதேச மக்களால் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிற்கு முறைபாடுகள் அளிக்கப்பட்டுள்ளன. 

இந்நிலையில் இந்த விடயம் தொடர்பில் இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் பெருநிறுவன தொடர்பாடல் பிரிவின் பணிப்பாளர் ஜனாத் ஹேராத்தை தொடர்பு கொண்டு வினவியபோது அவர் கூறியதாவது,

வத்தளை , ஜா - எல , கந்தானை ,களனி , மஹரகம,பொரலஸ்கமுவ, நுகேகொட , மிரிஹான மற்றும் ஹிக்கடுவ ஆகிய பகுதிகளுக்கு நேற்று முன்தினம் திங்கட்கிழமை முன் அறிவித்தலின்றி மின் துண்டிக்கப்பட்டுள்ளதாக எமக்கு முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளன. சுமார் இரண்டு மணித்தியாலயங்கள் வரை மின் துண்டிப்பு நீடிக்கப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளன. இந்நிலையில் இந்த விடயம் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

சாதாரணமாக மின் துண்டிப்பு செய்ய முன்னர் அது தொடர்பில் பொதுமக்களை தெளிவுப்படுத்துவது கட்டயமாகும். இவ்வாறு பொது மக்களுக்கு எந்தவித அறிவிப்பையும் வழங்காது வெறுமனே மின் துண்டிப்பை மேற்கொள்ள முடியாது. அவ்வாறு மேற்கொள்ளப்பட்டால் அது சட்டவிரோத செயலாகவே கருதப்படும். இந்த விடயம்  தொடர்பில் மின் பரிமாற்றம் மற்றும் விநியோகம் தொடர்பான அனுமதிப்பத்திரத்தின் 10 ஆவது சரத்திலும் கூற்றப்பட்டுள்ளது.

இலங்கை மின்சாரசபையினால் மேற்கொள்ளப்பட்ட இந்த மின் துண்டிப்புகள் தொடர்பில் அறிக்கையொன்றை சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளோம். இவ்வாறு அறிக்கை கிடைக்கப்பெற்றதன் பின்னர் இது தொடர்பில் நடவடிக்கை எடுக்கவும் எதிர்பார்த்திருக்கின்றோம்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கட்டுத்துப்பாக்கி வெடித்ததில் குடும்பஸ்தர் காயம் -...

2024-04-18 16:18:49
news-image

"வசத் சிரிய - 2024" புத்தாண்டு...

2024-04-18 16:25:36
news-image

அட்டன் – கொழும்பு மார்க்கத்தில் மாத்திரமே...

2024-04-18 16:20:52
news-image

கண்டி நகரில் தீவிரமடையும் குப்பை பிரச்சினை!

2024-04-18 16:31:50
news-image

காத்தான்குடி பாலமுனை கடற்கரையில் பெண் ஒருவரின்...

2024-04-18 15:52:14
news-image

பிட்டிகல பகுதியில் துப்பாக்கிச் சூடு ;...

2024-04-18 15:42:00
news-image

'டைம்' சஞ்சிகையின் ஆளுமை மிக்க 100...

2024-04-18 15:23:39
news-image

இலங்கையில் அதிகளவில் மரணங்கள் ஏற்பட்டமைக்கு காரணம்...

2024-04-18 15:43:57
news-image

பட்டிருப்பு வலயக் கல்விப் பணிப்பாளரின் இடமாற்றத்தை...

2024-04-18 15:29:41
news-image

பாதாள உலக குழுக்களைச் சேர்ந்த மேலும்...

2024-04-18 14:55:25
news-image

லொறி - கெப் மோதி விபத்து...

2024-04-18 13:30:31
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு நீதி...

2024-04-18 16:36:22