இனங்­களுக்கிடையிலான ஐக்­கி­யமே சுதந்­தி­ரத்தை அர்த்­த­முள்­ள­தாக்கும்

Published By: Digital Desk 3

04 Feb, 2020 | 01:05 PM
image

இலங்கை இன்று 72 ஆவது சுதந்­திர தினத்தைக் கொண்­டா­டு­கின்­றது. இந் நிலையில் சுதந்­திரம் எந்­த­ள­வுக்கு நாட்­டு­மக்­களின் எதிர்­பார்ப்­பு­களை  நிறை­வேற்றி இருக்­கின்­றது, சுதந்­திரக் காற்­றினை  சுவா­சிக்கும் வாய்ப்பு எல்லா இன மக்­க­ளுக்கும் உரி­ய­வாறு கிடைத்­ததா, சுதந்­திரம் சிறு­பான்­மை­யி­னரின்  நலன்­க­ளுக்கு  வலு­சேர்த்­ததா? என்­றெல்லாம் சிந்­திக்­க­ வேண்டியிருக்­கின்­றது. இத­னி­டையே சுதந்­திரம் குறித்து  கருத்து தெரி­வித்­துள்ள  புத்­தி­ஜீ­விகள்  'மனப்­பாங்கு ரீதி­யான சுதந்­திரம் ஈட்­டப்­ப­டா­த­வரை ஒரு­நாடு சுதந்­தி­ரத்தின் ஆரோக்­கி­ய­மான அறு­வ­டையைப் பெற­மு­டி­யாது' என்று தெரி­வித்­துள்­ளமை குறிப்­பி­டத்­தக்­க­வி­ட­ய­மாக உள்­ளது.

சுதந்­திரம் என்­பது மிகவும்  முக்­கி­யத்­துவம் மிக்க ஒரு விட­ய­மாக உள்­ளது. தனி­ம­னி­த­னா­யினும் சரி,  சமூ­க­மா­யினும் சரி, அல்­லது ஒரு நாடா­யினும் சரி அடி­மைத்­த­ளையில் இருந்து  விடு­ப­டு­வதில்  ஆர்வம் செலுத்­து­வ­தனை அவ­தா­னிக்கக் கூடி­ய­தாக உள்­ளது. ஒரு மனிதன் மனி­தனாக வாழ்­வ­தற்கு அவ­னுக்­குள்ள அத்­தி­யா­வ­சிய அனு­ம­திகள் உரி­மை­க­ளாகும். அவற்றை அனு­ப­விக்­கக்­கூ­டிய வாய்ப்பு காணப்­ப­டு­மாயின் அது சுதந்­திரம் எனப்­படும் சாதா­ரண நிலையில்  சுதந்­திரம் எனும்­போது, தான் விரும்­பு­கின்ற எந்த ஒரு செய­லையும் தங்­கு ­த­டை­யின்றி செய்யும் நிலையைக் குறிக்கும் என்­பதும்  புத்­தி­ஜீ­வி­களின் கருத்­தாக உள்­ளது. இயற்­கை­யான சமூ­கத்தில் பூரண சுதந்­தி­ரத்­தோடு மனிதன் வாழ்ந்தான். எனினும் நாக­ரிக வளர்ச்­சியால் இது கட்­டுப்­ப­டுத்­தப்­பட்­டது என்­கிறார் கலா­நிதி க.பிர­பா­கரன். மேலும் இயற்கை சமு­தா­யத்தில்  பூரண சுதந்­தி­ரத்­தோடு வாழ்ந்த மனிதன் சிவில் சமு­தா­யத்தில் அதில் ஒரு பகு­தியை இழந்தான். இயற்கை சமு­தா­யத்தில் அனைத்து மனி­தரும் சுதந்­தி­ர­மாக வாழ்ந்­ததை ஏற்­க­மு­டி­யாது. சமு­தா­யத்தில் பலம் உள்­ளவன் மட்டும்  சுக­மாக வாழ, பல­மற்­றவன் அடக்கி ஒடுக்­கப்­பட்டான் என்றும் கலா­நிதி பிர­பா­கரன் கூறு­கின்றார்.

சுதந்­தி­ரத்தைப் பாது­காக்கும் வழி­முறைகள் பல­வுள்­ளன. அர­சி­ய­ல­மைப்பில் அடிப்­படை உரி­மை­களை சேர்த்­தி­ருத்தல், சுதந்­தி­ர­மான நீதித்­துறை, சட்­ட­வாட்சிக் கோட்­பாடு, அர­சி­ய­லமைப்பு சட்­டங்கள், மனித உரிமை ஆணைக்­குழு, வெகு­சன தொடர்பு சாத­னங்கள் என்­பன அவற்றுள் சில­வாகும். உரி­மையும் கட­மையும் எத்­துணை தொடர்­பு­டை­யதோ அந்­த­ள­வுக்கு சமத்­து­வமும் சுதந்­தி­ரமும்  தொடர்­பு­டை­ய­தாகக்  கரு­தப்­ப­டு­கின்­றது. சமத்­துவம் இல்­லா­விட்டால் ஒரு­வ­ருக்குக் கிடைக்கும்  சுதந்­திரம்  மற்­றொ­ரு­வ­ருக்கு இல்­லாது போகும். எனவே சுதந்­தி­ரத்­துக்கு சமத்­துவம் அவ­சியம். ஆக­வேதான் உரி­மைக்­காகப் போரா­டுவோர் உரி­மைக்குக் கொடுக்கும் முக்­கி­யத்­து­வத்தை சுதந்­திரம் மற்றும் சமத்­துவம் என்­ப­­வற்­றுக்கும் வழங்­கு­கின்­றனர் என்­ப­த­னையும் அர­சியல் அறி­ஞர்கள் சுட்­டிக்­காட்டி இருக்­கின்­றனர். ஒரு மனிதன் இன்­னொரு மனி­தனை அடக்­கி­யாள முற்­ப­டுதல் கூடாது. இதைப்­போன்றே ஒரு சமூகம் இன்னொரு சமூ­கத்தை அடக்­கி­யாள முற்­ப­டுதல் கூடாது. அடங்­கிக்­கி­டக்க வேண்­டிய அவ­சி­யமும் இல்லை. மற்­றைய மனி­தனின் விருப்­ப­மின்றி அதனை நிரு­வ­கிப்­ப­தற்கு எந்­த­வொரு மனி­த­னுக்கும் தகுதி கிடை­யாது என்ற  ஆபி­ரஹாம் லிங்­கனின் கூற்று ஆய்ந்து சிந்­திக்­கத்­தக்க ஒரு விட­ய­மாக உள்­ளது.

எமக்கு சுதந்­திரம் ஏன் இருக்க வேண்டும்? எமது அடிப்­படை உரி­மை­க­ளுடன் மோதலை  ஏற்­ப­டுத்தும் சமத்­து­வ­மின்மை, பார­பட்­ச­மாக நடத்­தப்­ப­டுதல் என்­பவை நிறைந்த எமது சமூக அமைப்பை மாற்­றி­ய­மைக்­கவே சுதந்­திரம் வேண்டும் என்று சுதந்­தி­ரத்தின் அவ­சி­யத்தை இந்­திய அர­சி­ய­ல­மைப்பின் சிருஷ்­டி­ கர்த்­தா­வான பீ.ஆர்.அம்­பேத்கார் விளக்­கு­கின்றார். சுதந்­திரம் என்­பது வெறு­மனே வாய்ச்­சொல்லில் கூறி­ ம­கிழும் விட­ய­மல்ல. அதன் செயற்­பாடு ஆக்­க­பூர்­வ­மா­ன­தா­கவும் அர்த்­த­முள்­ள­தா­கவும் அமைதல் வேண்டும். சுதந்­தி­ரத்தின் நன்­மை­யினை அனைத்து மக்­களும் பெற்­றுக்­கொள்ள வேண்டும். அதை­வி­டுத்து ஒரு சாரார் மட்­டுமே அல்­லது ஒரு இனம் மட்­டுமே சுதந்­தி­ரத்தின் பயன்­களை அனு­ப­விக்­கு­மானால் அந்த சுதந்­தி­ரத்­தினால் எவ்­வி­த­மான பயனும் கிடை­யாது.

இலங்­கையின் நிலை

இலங்கை 1948 ஆம் ஆண்டு பெப்­ர­வரி மாதம் 04 ஆம் திகதி சுதந்­தி­ரம் அடைந்தது.இத­ன­டிப்­ப­டையில் நாடு இன்று 72 ஆவது சுதந்­திர தினத்­தைக் ­கொண்­டா­டிக் ­கொண்­டி­ருக்­கி­றது.  சுதந்­திரமானது  நாட்டு மக்­களின் எதிர்­பார்ப்­பு­களை எத்­த­ளவு நிறை­வேற்­றி­யுள்­ளது அல்­லது ஒரு கவிஞன் கூறி­ய­தைப்போல் ‘‘பட்டு வேட்­டிக்கு ஆளப்­பட்ட நிலையில் கட்­டி­யி­ருந்த கோவ­ணமும் கள­வாடப்பட்­டு ­விட்­டதா?’’ என்­றெல்லாம் சிந்­திக்க வேண்டியிருக்­கின்­றது. இலங்கை 1948 இல் சுதந்­தி­ரத்தைப் பெற்­றுக்­கொண்ட போதும் அதன் பிற்­கால செயற்­பா­டுகள், முன்­னெ­டுப்­புக்கள்  தொடர்பில் அதி­ருப்­தி­யான வெளிப்­பா­டுகள் முன்­வைக்­கப்­ப­டு­வ­த­னையே  எம்மால் அவ­தா­னிக்கக் கூடி­ய­தாக இருக்­கி­றது. கால­னித்­துவ ஆட்சி ஒன்றிலிருந்து நாடொன்று விடு­ப­டு­கின்­றது எனும்­போது, அது தனது  சுய­வெ­ளிப்­பாட்டின் முக்­கிய கட்­டத்தை எய்­தி­விட்­டது என்­பதும் கிடைக்கும் அர­சியல் சுதந்­தி­ரத்தின் பின்னர் அது தன்னை செழு­மையும் சிறப்பும் உள்ள ஒரு நாடாக்­குவதற்­கான முயற்­சி­களில் இறங்­கப்­போ­கின்­றது என்­பதும் பொது­வான எதிர்­பார்ப்­பாகும். எனினும் இலங்­கையின் வர­லாறோ அந்த எதிர்­பார்ப்­பு­களை மறு­த­லிப்­ப­தா­கவே அமைந்­தி­ருக்­கின்­றது என்று வருத்­தப்­பட்டுக் கொள்­கின்றார் பேரா­சி­ரியர் கா.சிவத்­தம்பி.

இலங்­கையின் சுதந்­தி­ரத்தை  விளங்­கிக்­கொண்ட முறை­மையில் உள்ள அடிப்­ப­டைத் ­த­வறு இந்த நாட்டை, நாட்டின் வர­லாற்றை சீர்­குலைத்திருக்­கின்­றது. பிரித்­தா­னிய கால­னித்­துவம் விட்­டுச்­சென்ற அர­சியல் எண்­ணக்­க­ருக்­க­ளுக்கு வெளியே வர­மு­டி­யாமல் ஆட்­சி­யா­ளர்கள் இருக்கும் வரையில் எம்மை இன்று நோக்கும் பிரச்­சினை தீரப்­போ­வதே இல்லை என்றும் சிவத்­தம்பி உள்ளம் குமு­று­கின்றார்.

சுதந்­திரம் வேண்டி நாட்டு மக்கள் ஒன்­று­பட்டுக் குரல் கொடுத்­தனர். எனினும் சுதந்­தி­ரத்தின் பின்னர் நாட்டில் விரி­சல்­களும் வேற்­று­மை­களும் தலை­தூக்கியிருக்­கின்­றன. சுதந்­தி­ரத்தின் பயன்­களை சக­லரும் பெற்றுக் கொள்­ளாத ஒரு நிலையில் சுதந்­திரம் என்­பது  இந்­நாட்டில் சிங்­க­ளவர்களுக்கு மட்டும் தானா? என்று சிறு­பான்மை மக்கள் கேள்வி எழுப்பிக் கொண்­டிக்­கின்­றனர் என்­கிறார் பேரா­தனை பல்­க­லைக்­க­ழ­கத்தைச் சேர்ந்த பேரா­சி­ரியர் எஸ். விஜ­யச்­சந்­திரன். சிறு­பான்­மை­யி­னரை பொறுத்தவரையில் இந்­நாட்டில் சுதந்­திரம் மறுக்­கப்­பட்ட ஒரு நிலையே காணப்படு­கின்­றது. தேசிய கீதத்தை தமிழில் பாடக்­கூ­டாது. சிங்­க­ளத்­தி­லேயே பாட வேண்டும் என்ற கருத்து பிழை­யான ஒன்­றாக உள்­ளது. சுதந்­தி­ரத்­துக்காகப் போரா­டிய சிறு­பான்­மை­யி­னரைப் புறந்­தள்­ளு­வ­தா­கவே இந்­நிலை அமைந்­துள்ளது. சுதந்­திர இலங்­கையில் சிறு­பான்­மை­யி­னரும் சிங்­க­ள­வரும் ஐக்­கி­யத்­து­டனும் புரிந்­து­ணர்­வு­டனும் வாழும் நிலைக்கு  வித்­தி­டுதல் வேண்டும். இது சுதந்­தி­ரத்தை அர்த்­த­முள்­ள­தாக மாற்றியமைக்கும். ஒரு இனத்தின் எண்­ணிக்கை முக்­கி­ய­மல்ல, எண்­ணிக்கை எது­வாக இருந்­தாலும் நாம் இலங்­கையர், இலங்கை எமது தாய்­நாடு என்று ஒவ்­வொ­ரு­வரும் நாட்­டுப்­பற்­றுடன் வாழு­கின்ற நிலைக்கு வித்­தி­டப்­ப­டுதல் வேண்டும். இலங்­கையில் உள்ள அனைத்து இனங்­களும் சம­மாக உரி­மை­க­ளையும் சுதந்­தி­ரத்­தி­னையும் அனு­ப­விக்கும் நிலை ஏற்­ப­டுத்­தப்­ப­டுதல் வேண்டும்.

மொழி, அபி­வி­ருத்தி, அர­சியல், கலை, கலா­சாரம், சமூக நிலை­மைகள், கல்வி உள்­ளிட்ட சகல துறை­க­ளிலும் சக­ல­ருக்கும் சம­மான வாய்ப்­புகள் வழங்­கப்­ப­டுதல் வேண்டும். இது சாத்­தி­யப்­ப­டா­த­வி­டத்து, சிறு­பான்மை மக்கள் சுதந்­தி­ரத்­துக்­கான ஒரு போராட்­டத்­தினை உள்­நாட்­டுக்­குள்­ளேயே முன்­னெ­டுக்க வேண்­டி­ய­நிலை மேலோங்­குதல் தவிர்க்க முடி­யா­த­தாகி விடும் என்­ப­தையும் மறுப்­ப­தற்­கில்லை. சுதந்­தி­ரத்தின் குறிக்கோள் உரி­ய­வாறு நிறை­வேற்­றப்­ப­டுதல் வேண்டும் என்­பதும் பேரா­சி­ரியர் விஜ­யச்­சந்­தி­ரனின் கருத்­தாக உள்­ளது.

பிரித்­தாளும் நட­வ­டிக்கைகள் 

சுதந்­தி­ரத்­துக்கு முன்­ன­தான காலப் ­பகு­தியில் சிறு­பான்மை மக்கள் பல்­வேறு நெருக்­கீ­டு­க­ளுக்கும் முகம்­கொ­டுக்க வேண்­டிய நிலை ஏற்­பட்­டது. வர்த்­தக ரீதி­யாக முஸ்­லிம்­களை ஒடுக்கும் நட­வ­டிக்­கை­களும் முடுக்­கி­விடப்பட்­டி­ருந்­தன. இந்­திய வம்­சா­வ­ளி­யி­ன­ருக்கு வாக்­கு­ரிமை வழங்­கக்­கூ­டாது என்ற  கருத்­துக்கும் அழுத்தம் கொடுக்­கப்­பட்­டது. கொழும்பில் வசிக்கும் இந்­தி­யரை விட தோட்­டத்துக் கூலிக்கு நான் மிகவும் அஞ்­சு­கின்றேன்.  இந்­தியத் தொழி­லாளி காலை 6 மணிக்கு வேலைக்குப் போய் மாலை ஆறு­ம­ணிக்கே தனது கூலி லயன்­க­ளுக்குத் திரும்­பு­கின்றார். இத்­தீவில் நிகழ்­வன பற்றி அவ­னுக்கு என்ன தெரியும்? எனவே அர­சியல் விட­யங்­களில் வாக்­க­ளிக்கும் தகைமை அவ­னுக்கு இல்லை என்றே கூறுவன்' என்று தோட்டத் தொழி­லா­ளர்­க­ளுக்கு எதி­ராக பல குரல்கள் மேலோங்கிக் காணப்­பட்­டன. சி.டபிள்யூ.டபிள்யூ. கன்­னங்­கர இந்­தி­யரின் வாக்­கு­ரி­மையை எதிர்க்­காதோர் துரோ­கிகள் என்று மறை­மு­க­மாகக் குறிப்­பிட்டுக் கூறி­யி­ருந்தார். டொனமூர் ஆணைக்­கு­ழு­வி­ன­ரு­டைய சிபாரிசு அபாய அறி­வித்­த­லாக அமைந்­தது. இந்­தியத்  தொழி­லா­ளர்­க­ளுக்கு வாக்­கு­ரி­மை­ய­ளிக்கும் பிரே­ரணை என்று டி.எஸ்.சேனா­நா­யக்க பகி­ரங்­க­மா­கவே தெரி­வித்­தி­ருந்தார்.

இவ்­வா­றாக இந்­தியத் தமிழ் மக்கள் பல்­வேறு எதிர்ப்­பு­களின் பின்னர் வாக்­கு­ரி­மையைப் பெற்­றுக்­கொள்ளும் நிலைமை உண்­டா­னது. சுதந்­தி­ரத்­துக்கு முன்­ன­தாக இன்னும் பல நிலை­க­ளிலும் இந்­திய வம்­சா­வளி மக்கள் சிக்­கல்கள் பல­வற்­றையும் எதிர்­நோக்கி இருந்­தனர்.

1948 இல் இலங்கை சுதந்­தி­ரத்தை பெற்­றுக் ­கொண்­ட­வுடன் மலை­யக மக்கள் உள்­ளிட்ட சிறு­பான்மை மக்கள் தமது வாழ்வில் புதிய ஒரு அத்­தி­யாயம் எழு­தப்­ப­டப்­போ­கின்­றது. எனினும் தாம் இது­கா­ல­வரை அனு­ப­வித்த எல்லா துன்­பங்­க­ளுக்கும் ஒரு முடிவு கிடைக்­கப்­போ­கின்­றது என்றும் எண்­ணி­யி­ருந்­தனர். எனினும் அவர்­களின் எண்­ணத்தில் மண் விழுந்­த­துதான் மிச்­ச­மாக இருந்­தது. சுதந்­தி­ரத்தை விளங்­கிக்­கொண்­ட­தில் இருந்த தவறு ஆட்­சி­யா­ளர்­களை பிழை­யான வழிக்கு இட்­டுச் ­சென்­றது. தனது அர­சியல் இருப்­பினை உறுதி செய்து கொள்ள ஆட்­சி­யா­ளர்கள் இன­வா­தத்தை கையி­லெ­டுத்து பிழை­யான நட­வ­டிக்­கை­களை மேற்­கொண்­டார்கள். மக்­களை இன­வாதம் என்­கின்ற ஆயு­தத்தால் கூறு­போட்டு குளிர்­கா­யவும் தொடங்­கி­னார்கள். நாடு சுதந்­தி­ர­ம­டைந்­ததும் இந்­திய வம்­சா­வளி மக்­களின் பிர­ஜா­வு­ரி­மை­யையும் வாக்­கு­ரி­மை­யையும் பறிப்­பதில் ஆட்­சி­யா­ளர்கள் கவனம் செலுத்தி, இதில் வெற்­றியும் கண்­டனர். இதனால் ஏற்­பட்ட தழும்­புகள் இன்னும் மறைந்­த­தாக இல்லை. மலை­யக சமூ­கத்­துக்கும் ஏனைய சமூ­கங்­க­ளுக்­கு­மி­டை­யி­லான பாரிய இடை­வெளி நிலைக்கும் பிரஜாவு­ரிமை மற்றும் வாக்­கு­ரிமை பறிப்பு நிலைமை உந்து சக்­தி­யா­னது என்­பது நீங்கள் அறிந்த ஒரு விட­ய­மே­யாகும்.

1956 இல் கொண்டு வரப்­பட்ட தனிச் சிங்க­ள ­சட்டம் இந்­நாட்டின் சிறு­பான்­மை­யி­ன­ருக்கு இன்­னொரு அடி­யாக விழுந்­தது. ‘சிங்­க­ளமும் தமிழும் அரச கரு­ம­ மொ­ழி­க­ளாக இருப்­பதில் எனக்கு எந்­த­வித­மான தனிப்­பட்ட எதிர்ப்பும் கிடை­யாது. இதனால் எத்­த­கைய தீங்கோ, அபா­யமோ, இடர்­பாடோ ஏற்­படும் என்றும் நான் கரு­த­ வில்லை என்று 1944 இல் எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்­டா­ர­நா­யக்க தெரி­வித்­தி­ருந்தார். எனினும் தனது அர­சியல் இருப்­பினை உறு­திப்­ப­டுத்­திக்­கொள்ளும் நோக்கில் தனது நிலையை மாற்­றிக்­கொண்டு 1956  இல் தனிச்­ சிங்­கள சட்டம் கொண்டு வரப்­ப­டு­வ­தற்கு பண்­டா­ர­நா­யக்க கார­ண­கர்த்­தா­வாக இருந்தார்.

சுதந்­தி­ரத்தின் பின்னர் இடம்­பெற்ற ஒப்­பந்­தங்கள் இந்­திய வம்­சா­வ­ளி­யி­ன­ருக்கு பாத­க­மாக அமைந்­தன. வன்­செயல்­க­ளினால் சிறு­பான்மை சமூ­கத்­தினர் பெரிதும் பாதிப்­பு­க­ளுக்குள்­ளா­னார்கள். இலங்­கையில் நில­விய கொடிய யுத்தம் இந்­நாட்டின் அபி­வி­ருத்­திக்கு ஆப்பு வைத்­தது. யுத்­தத்தின் மேலெ­ழும்­பு­கைக்கு பல்­வேறு புறக்­க­ணிப்­புகள் உந்து சக்­தி­யாக அமைந்­தன என்­பதும் தெரிந்த ஒரு விட­ய­மே­. யுத்­தத்தின் கார­ண­மாக நாட்டின் அபி­வி­ருத்­திக்கு தோள் கொடுக்கக் கூடிய பல இளை­ஞர்கள் இரு தரப்­பி­லும் கொன்­றொ­ழிக்­கப்­பட்­டனர். இது இலங்­கையின் வர­லாற்றில் கறை­படிந்த ஒரு அத்­தி­யா­ய­மாக மாறிப் போனது. இன­வா­தத்தின் கார­ண­மாக நாடு பல்­வேறு பின்­ன­டை­வு­களை சந்­திக்­கவும் சர்­வ­தே­சத்தின் முன் தலை­கு­னி­யவும் நேர்ந்­தது. எனினும் இன­வா­தி­களின் போக்­­கா­னது விரி­சல்­க­ளுக்கு வித்­தி­டு­வ­து­மான செயற்­பா­டுகள் இன்றும் தொடர்ந்­து­கொண்­டுதான் இருக்­கின்­றன.

இலங்­கையில் இன­வாத விதைப்­பு­நிலை குறித்தும் இதனால் ஏற்­பட்ட பாதிப்­புகள் குறித்தும் இரா. நித்­தி­யா­னந்தன் போன்­ற­வர்கள் தொடர்ச்­சி­யாக எழு­தியும் பேசியும் வந்­துள்­ளனர் என்­பது குறிப்­பி­டத்­தக்க விட­ய­மாக உள்­ளது. 

இலங்­கையின் சுதந்­தி­ர­கால அர­சியல், சமூக, பின்­ன­ணியில் நாம் விளங்­கிக்­கொள்­வது இலங்­கையின் வர்க்க அடுக்­க­மை­வா­னது ஒன்றையொன்று சுரண்­டியும் மேலா­திக்கம் செலுத்­தியும் வந்­த­போது அந்தச் சுரண்­டலை தொடர்ச்­சி­யாகப் பேணு­வ­தற்கும் அர­சியல் அதி­கா­ரத்­தினை தொடர்ச்­சி­யாக தக்­க­வைத்துக் கொள்­வ­தற்கும் இலங்கை மக்­க­ளுக்கு இன­வாத வழி­காட்­டப்­பட்­டது. இது­வரை இருந்த அர­சி­யல்­வா­திகள் மக்­க­ளுக்கு அவ்­வா­றான ஒரு வழி­யையே காட்­டிச்­சென்­றார்கள். ஆனால் மக்கள் தொடர்ந்து நலன்­க­ளுக்­காக போரா­டிக் ­கொண்­டி­ருக்­கின்­றார்கள் என்ற புத்­தி­ஜீ­விகளின் கருத்து முற்­றிலும் ஏற்றுக் கொள்ளக் கூடியதாகவே உள்­ளது. 

இழு­ப­றிகள் 

இலங்கை சுதந்­தி­ரத்தைப் பெற்­றுக்­கொண்ட போதும் இச்­சு­தந்­திரம் ஒரு சாரா­ருக்கே உரி­ய­தாக விளங்­கு­கின்­றது. சுதந்­தி­ரத்தின் இலக்­குகள் மாறிச் செல்­கின்­றன. அனைத்து இன மக்­க­ளையும் நாடு அர­வ­ணைத்து அபி­வி­ருத்­திக்கு வலு­சேர்க்­கின்­றதா? என்ற கேள்­விக்கும் திருப்­தி­யான விடைகள் இன்னும் கிடைக்­க­வில்லை. நாடும் நாமும் எங்கு சென்று கொண்­டி­ருக்­கிறோம் என்று நாட்டை நேசிக்கும் பலரும் கேள்வி எழுப்பிக் கொண்­டி­ருக்­கின்­றனர். சுதந்­தி­ரத்தின் பின்னரான நிலைமைகள் திருப்திதராத நிலையில், ஒருவரை இன்னொருவர் சந்தேகக்கண் கொண்டு பார்க்கின்ற அளவுக்கு நிலைமைகள் மோசமடைந்துள்ளன. சிறுபான்மை சமூகத்தினரின் உரிமைகளை மழுங்கடித்து அவர்களை சகல துறைகளிலும் நிர்வாணப்படுத்துவதில் இனவாதிகள் குறியாக இருந்து வருகின்றனர். அரசாங்கத்தின் நல்லிணக்க முயற்சிகளுக்கு இனவாதிகளின் செயற்பாடுகள் முட்டுக்கட்டையாக இருந்து வருகின்றன. 

இலங்கை என்ற பெரு அலகை திரித்து விளங்கியுள்ள சிங்களத்துவ இனவாதம், நாட்டை சின்னாபின்னமாக்கியுள்ளது. காலனித்துவ எதிர்ப்புப் போராட்டத்தை அறிந்திராத அந்தக் குறைபாடு காரணமாக இன்று நாட்டின் எதிர்காலத்தையே விலைபேசுகின்றது. பின் காலனித்துவ வரலாறு என்பது காலனித்துவ வரலாறுகளில் இருந்தும் விடுவிக்கும் வரலாறாகவே இருத்தல் வேண்டும். எனினும் காலனித்துவ காலத்திலும் மோசமாகிப் போன பின்காலனித்துவ நிலைமையினையே இங்கு காணமுடிகின்றது என்ற பேராசிரியர் கா. சிவத்தம்பியின் கூற்று முற்றிலும் உண்மையானதே. 

சுதந்திரத்தின் நன்மைகளை நாட்டு மக்கள் அனைவரும் சமமாகப் பெற்றுக் கொள்ளவேண்டும். நாடு சுதந்திரமடைந்தாலும் நவ காலனித்துவம் சிறுபான்மையினரின் கழுத்தினை இறுக்கிக்கொண்டிருக்கின்றது. 1948 இல் இலங்கை பெற்றுக்கொண்ட சுதந்திரம் உண்மையான சுதந்திரம் அல்ல என்றும் மனப்பாங்கு ரீதியாக இலங்கை சுதந்திரத்தை பெற்றுக் கொள்ளவில்லை என்றும் பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் மனப்பாங்கு ரீதியான சுதந்திரம் ஈட்டப்படாத வரை ஒரு நாடு சுதந்திரத்தின் ஆரோக்கியமான அறுவடையைப் பெற முடியாது என்ற என்.எம்.எச்.எம். ஷம்ஸின் கருத்து நியாயமானதே. 

துரைசாமி நடராஜா

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இந்தியப் பெருங்கடலில் 'சீனா - குவாட்'...

2024-04-18 10:36:33
news-image

'ஆரம்பிக்கலாமா?' : தமிழை கையிலெடுத்துள்ள பிரதமர்...

2024-04-17 19:36:36
news-image

சர்வதேச நீதிமன்றத்தில் ஆர்மேனியா - அஸர்பைஜான்...

2024-04-17 19:37:33
news-image

சிங்களவர்களாக ஒருங்கிணையும் இந்தியத் தமிழர் –...

2024-04-17 18:00:59
news-image

பிரித்தானியாவில் ஆளுங்கட்சி தோல்வி? சொந்த தொகுதியில்...

2024-04-17 11:04:13
news-image

பரந்த கோட்பாடுகளில் இருந்து நடைமுறையில் பிரச்சினைகள்...

2024-04-16 16:00:03
news-image

ஈரானின் அதிரடி தாக்குதல் ; இஸ்ரேல்...

2024-04-16 10:56:59
news-image

ஜனாதிபதி தேர்தலில் அரசியல் கணக்குகள்

2024-04-16 01:48:16
news-image

ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தேசிய கட்சியாக...

2024-04-15 19:01:13
news-image

மறுமலர்ச்சியை ஏற்படுத்த வணிக மறுமலர்ச்சி அலகு

2024-04-15 18:55:41
news-image

ரோஹிங்யா முஸ்லிம்களின் உதவியை நாடும் மியன்மார்...

2024-04-15 18:51:43
news-image

சிறிய அயல் நாடுகளின் சோதனைக் காலம்?

2024-04-15 18:49:22