தாய்லாந்தில் ஆரம்ப பாட­சா­லைக்கு சொந்தமான வேன்னொன்று விபத்துக்குள்ளானதில் பாட­சாலை ஆசி­ரி­யர்கள் 11 பேர் உயி­ரி­ழந்­துள்­ளனர். 

தாய்­லாந்தின் சவோன்புரிஸ் மியாங் மாவட்ட வீதியில் கடந்த வௌ்ளிக்­கி­ழமை இர­வு இந்த விபத்து நிகழ்ந்தது. 

தனியார் ஆரம்ப பாட­சா­லைக்கு சொந்தமான வேன் வேகமாகச் சென்று கொண்டிருந்த போது அதன் டயர் எதிர்பாராதவிதமாக திடீரென வெடித்தது. இதனால், சாரதி­யின் கட்டுப்பாட்டை இழந்த அந்த வாகனம் கவிழ்ந்து தீ பற்­றி­யுள்­ளது. 

இச்சம்பவத்தில், வேனில் பயணம் செய்த பாட­சா­லை ஆசிரியர்கள் 11 பேர் தீயில் கருகி உயிரிழந்தனர். வேன் சாரதி உட்­ப­டட 4 பேர் தீக்காயங்களுடன் வைத்­தி­ய­­சா­லை­யில் சிகிச்சை பெற்றுவருவதாக அந்நாட்டு உள்துறை அமைச்சகத்தின் பேரிடர் தடுப்புத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.