கவரவில பாடசாலைக்கு தரம் உயர்ந்த அதிபரை நியமிக்க கோரி மீண்டும் போராட்டம்

Published By: Digital Desk 4

03 Feb, 2020 | 05:08 PM
image

ஹட்டன் கல்வி வலயத்திற்குட்பட்ட கவரவில தமிழ் வித்தியாலயத்தில் இடம்பெற்ற போராட்டத்திற்கு அமைய இன்று  புதிய அதிபரை ஹட்டன் கல்வி வலய பணிமனையினால் நியமிக்கப்பட்டதற்கு அப்பாடசாலையின் பழைய மாணவர்கள் மற்றும் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்து இன்று காலை 9.40 மணியளவில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இப்போராட்டத்தின் போது பெற்றோர் கருத்து தெரிவிக்கையில்,

வித்தியாலயத்தில்  தற்போது  சிறந்த நிர்வாகத்தை மேற்கொள்ளுவதற்கு அதிபர் ஒருவர் இல்லாத நிலை எழுந்துள்ளது. மேலும் கடந்த காலங்களில் எமது பாடசாலையில் பணியாற்றிய அதிபரின் நிருவாகத்தில் ஏற்பட்ட குழப்ப நிலைமைகள் காரணமாக பாடசாலையின் ஆசிரியர் ஒருவர் தற்கொலைக்கு முயற்சித்துள்ளதுடன் க.பொ.த உயர் தரம் வரை உள்ள நமது பாடசாலைக்கு 3ஆம் நிலை அதிபரை நியமித்துள்ளமை கண்டிக்கத்தக விடயம்.

என்றும் கடந்த காலத்தில் எமது பாடசாலையில் நிதி மோசடி தொடர்பில் இதுவரை எவ்வித நடவடிக்கையும் ஹட்டன் கல்வி பணிப்பாளர் எடுக்காமல் இருப்பது பணிப்பாளரின் அசமந்த போக்கை வெளிப்படுத்துவதாகவும் இந்நிதி மோசடி தொடர்பில் உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரி இப்போராட்டத்தை முன்னெடுப்பதாக தெரிவித்தனர்.

மேலும் கடந்த காலங்களில் மாகாண கல்வி திணைகள அதிகாரிகள், மாகாண கல்வி அமைச்சின் அதிகாரிகள், ஹட்டன் கல்வி வலய பணிப்பாளர் உள்ளிட்டோர் தகுதி வாய்ந்த ஒரு அதிபரை பாடசாலைக்கு நியமித்திருந்தால் இன்று இவ்வாறானதொரு போராட்டத்தை முன்னெடுப்பதற்கு தேவை ஏற்பட்டிருக்காது.

தற்போது அவசர அவசரமாக நியமிக்கப்பட்டுள்ள அதிபரை மீள் அழைப்பு செய்து விட்டு முதல் நிலை அல்லது இரண்டாம் நிலை தகுதியுள்ள அதிபர் ஒருவரை நியமிக்குமாறு கோருகின்றோம். 

அவ்வாறானதொரு அதிபர் மாற்றத்தை செய்ய முடியாவிட்டால் தயவு செய்து எமது மாணவர்களின் விடுகை பத்திரத்தை வழங்கி வேறு பாடசாலையில் இணைப்பதற்கான அனுமதியை ஹட்டன் கல்வி வலயம் மேற்கொண்டு தரவேண்டும் என குறிப்பிட்டனர்

இப்போராட்டத்தின் போது கோட்டம் மூன்றுக்கு பொறுப்பான நடராஜ் எதிர்வரும் 5ஆம் திகதியன்று புதிய அதிபரை நியமிப்பதாக குறிப்பிட்டதுடன் 2.40 மணியளவில் இப்போராட்டம் நிறைவுபெற்றது.

அத்துடன் இப்போராட்டத்தினால் மஸ்கெலியா சாமிமலை போக்குவரத்து சிறிது நேரம் பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்து. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27