மதுபோதையில் பொலிஸார் மீது அவதூறாகப் பேசிய நபருக்கு விளக்கமறியல்

Published By: R. Kalaichelvan

03 Feb, 2020 | 05:11 PM
image

சாரதி அனுமதிபத்திரமின்றி மதுபோதையில் மோட்டார் சைக்கிளில் சென்ற நபர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

கெபித்திக்கொள்ளாவை மாவட்ட நீதிபதி மாளிந்த ஹர்ஷன டி அல்விஸ் முன்னிலையில் இன்று ஆஜர்ப்படுத்திய போதே எதிர்வரும் 12 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டுள்ளார். 

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, 

சம்பவ தினமான கடந்த ஞாயிற்றுக்கிழமை கெபித்திகொள்ளாவை - பதவிய பிரதான வீதியில் குறித்த சந்தேக நபர் மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். அங்கு சோதனை நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த பொலிசார் சந்தேக நபரை மோட்டார் சைக்கிளை நிறுத்துமாறு சமிஞ்சை காட்டிய போதிலும் அதனை  பொருட்படுத்தாமல்  சென்றுள்ளார். 

இதனை தொடர்ந்து குறித்த மோட்டார் சைக்கிளை பின் தொடர்ந்து சென்ற பொலிஸார் குடிபோதையில் இருந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுநரை கைது செய்துள்ளனர்.

அதன்போது சந்தேக நபர் பொலிஸார் மீது அவதூறாகப் பேசி பொலிஸாரின் கடமைகளுக்கு இடையூறு ஏற்படுத்தியதாக பொலிஸார் தெரிவித்தனர்.

எவ்வாறாயினும் சந்தேக நபரை பொலிசார் கைது செய்த நிலையில் , தனக்கு அதிகமாக முதுகுவலி காணப்படுவதாக சந்தேக நபர் தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து சந்தேக நபரை பொலிசார் பதவிய ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு சென்றனர்.

சந்தேக நபரை இன்று நீதிமன்றில் ஆஜர்ப்படுத்திய நிலையில் விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

   

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பழுகாமம் கண்டுமணி மகாவித்தியாலயத்திற்கு முன்னால் ஆர்ப்பாட்டம்

2024-04-18 14:31:10
news-image

பாதாள உலக குழுக்களைச் சேர்ந்த மேலும்...

2024-04-18 14:17:05
news-image

லொறி - கெப் மோதி விபத்து...

2024-04-18 13:30:31
news-image

குறைவடைந்த தங்கத்தின் விலை!

2024-04-18 13:47:45
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-18 12:44:55
news-image

யாழ். பல்கலைக்கழக பொன்விழா ஆண்டில் முதலாவது...

2024-04-18 13:20:49
news-image

கைதிக்குச் சூட்சுமமான முறையில் போதைப்பொருள் கொண்டு...

2024-04-18 13:26:03
news-image

சுற்றுச் சூழல் பாதிப்புக்களை தெரிவிக்க தொலைபேசி...

2024-04-18 13:32:52
news-image

உக்ரைன் போருக்கு இலங்கையர்களை அனுப்பிய ஓய்வு...

2024-04-18 12:23:02
news-image

தேர்தல்களை பிற்போடுவதை கடுமையாக எதிர்ப்போம் -...

2024-04-18 11:52:31
news-image

கடலில் குழந்தை பிரசவித்த நயினாதீவு பெண்

2024-04-18 11:40:05
news-image

மைத்திரிபால சிறிசேனவிற்கு தடை உத்தரவு நீடிப்பு!

2024-04-18 12:12:09