தேசிய கீத விவகாரம்: சுதந்­திர தினத்தில் தமிழ் மக்­களின் சுதந்­தி­ரத்தைப் பறிக்கும் செய­லாகும்..!

Published By: J.G.Stephan

03 Feb, 2020 | 12:55 PM
image

இலங்­கையின் தேசிய மொழி­களில் ஒன்­றாக தமிழ்­மொழி அங்­கீ­க­ரிக்­கப்­பட்டு, இது­வரை காலமும் தமிழில் தேசிய கீதம் பாடப்­பட்டு வந்­துள்­ளது. இருந்தும் இம்­முறை சுதந்­திர தினத்­தன்று தமிழில் தேசிய கீதம் பாடு­வது தடை செய்­யப்­பட்­டுள்­ளமை தமிழ் மக்­களின் சுதந்­தி­ரத்தைப் பறிக்கும் செய­லாகும் என தொழி­லாளர் தேசிய முன்­னணி பொதுச் செய­லா­ளரும் நுவ­ரெ­லியா மாவட்டப் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான எம். தில­கராஜ் தெரி­வித்­துள்ளார்.

தொழி­லாளர் தேசிய சங்­கத்தின் தலை­வரும் முன்னாள் அமைச்­ச­ரு­மான பி. திகாம்­ப­ரத்தின் ஆலோ­ச­னைக்கு ஏற்ப, அட்டன் ருவான்­புர வட்­டா­ரத்தைச் சேர்ந்த ரொத்தார்ஸ் குடி­யி­ருப்பு பகு­தியில் கம்­பெ­ர­லிய வேலைத் திட்­டத்தின் ஊடாக 20 இலட்சம் ரூபா செலவில் செப்­ப­னி­டப்­பட்­டுள்ள “கொங்­கிரீட்” பாதையை கைய­ளிக்கும் நிகழ்வு நேற்று முன்­தினம் சனிக்­கி­ழமை இடம்­பெற்­றது. இதில் பிர­தம அதி­தி­யாகக் கலந்து கொண்டு பேசும் போதே மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார். நிகழ்வில் மத்­திய மாகாண சபை முன்னாள் உறுப்­பி­னர்கள் சோ. ஸ்ரீதரன், எம். ராம், மாநிலப் பிர­தி­நிதி எஸ். மது­ரை­வீரன் உட்­பட பலர் கலந்துகொண்­டார்கள்.



அவர் தொடர்ந்து பேசு­கையில்,

அட்டன் நக­ருக்கு மிக அருகில் ரொத்தார்ஸ் குடி­யேற்றப் பகுதி இருந்தும், எல்லை மீள்­நிர்­ணயம் செய்­யப்­பட்­ட­போது இந்தப் பிர­தேசம் அம்­ப­க­முவ பிர­தேச சபை­யுடன் இணைக்­கப்­பட்­டுள்­ளது. எல்லை மீள்­நிர்­ணயம் செய்­யப்­பட்ட குழுவில் முன்னாள் அமைச்சர் உதயன் கம்­மன்­பி­லவும் இருந்தார். அவ­ருக்கும் அட்டன் நகர மீள் எல்லை நிர்­ண­யத்­துக்கும் எந்த வித­மான சம்­பந்­தமும் கிடை­யாது. இத்­த­கை­ய­வர்கள் மேற்­கொண்ட நட­வ­டிக்கை எமது மக்­க­ளுக்குத் தான் பெரும் பாதிப்பை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது.

எனவே, மீண்டும் எல்லை மீள்­நிர்­ணயம் செய்­யப்­படும் போது, ரொத்தார்ஸ், பொன்­னகர், ஆரி­ய­கம போன்ற குடி­யேற்றப் பகு­தி­களை மீண்டும் அட்டன் நகர சபை­யுடன் இணைத்துக் கொள்ள நட­வ­டிக்கை எடுக்­கப்­படும். அதற்­கான ஒத்­து­ழைப்பை இங்­குள்ள மக்கள் தர வேண்டும். அதே­நேரம் அடுத்த உள்­ளூ­ராட்சி மன்றத் தேர்­த­லுக்கு முன்னர் இது தொடர்­பாக குரல் எழுப்ப வேண்டும்.

ஐக்­கிய தேசிய முன்­ன­ணி­யுடன் இணைந்து தமிழ் முற்­போக்கு கூட்­டணி தேர்­தல்­களை சந்­தித்து வந்­துள்­ளது. அந்தக் கட்­சியின் உள்ளே காணப்­பட்ட முரண்­பா­டுகள் ஓர­ளவு குறைந்­துள்­ளன. எனவே, தேர்தல் காலத்தில் நிலை­மை­களை அனு­ச­ரித்து அதற்கு ஏற்ற வகையில் வியூகம் அமைத்து தமிழ் முற்­போக்கு கூட்­டணி தனது வேட்­பா­ளர்­களை களம் இறக்கத் தயா­ரா­க­வுள்­ளது. 

இந்த நாட்டில் ஜனா­தி­பதித் தேர்தல் நடை­பெற்ற பின்னர் சிறு­பான்மை மக்கள் மத்­தியில் பெரும் எதிர்­பார்ப்பு காணப்­பட்­டது. ஆனால், இன்று அந்த நம்­பிக்கை படிப்­ப­டி­யாக குறைந்து வரு­கின்­றது. வழ­மை­யாக அனுஷ்டிக்­கப்­பட்டு வந்த தேசிய தைப்­பொங்கல் விழா ரத்துச் செய்­யப்­பட்­டி­ருந்­தது. அதேபோல் இந்த நாட்டின் தேசிய மொழி­களில் ஒன்­றாக தமிழ் மொழி அங்­கீ­க­ரிக்­கப்­பட்டு தமி­ழிலும் பாடப்­பட்டு வந்த தேசிய கீதம் இம்­முறை சுதந்­திர தினத்­தன்று தமிழில் பாடு­வ­தற்குத் தடை விதிக்­கப்­பட்­டுள்­ளது. இது சுதந்­திர இலங்­கையில் சுதந்­திர தினத்­தன்று தமிழ் மக்­களின் சுதந்­தி­ரத்தைப் பறிக்கும் செய­லாக அமைந்­துள்­ளது. 

ஜனா­தி­பதித் தேர்தல் முடிந்து மூன்று மாத காலத்தில் நடை­பெற்று வரு­கின்ற விட­யங்­களை மக்கள் கூர்ந்து கவ­னிக்க வேண்டும். அதற்கு ஏற்ற நட­வ­டிக்­கை­களை மக்­களே மேற்­கொள்ள வேண்டும். கடந்த நாலரை ஆண்­டு­களில் எமது தலைவரும் முன்னாள் அமைச்சருமான திகாம்பரம் தலைமையில் நாம் மேற்கொண்டு வந்த அபிவிருத்தித் திட்டங்களை மக்கள் சீர்தூக்கிப் பார்த்து பாராளுமன்றத் தேர்தலில் தமிழ் முற்போக்கு கூட்டணியை வெற்றி பெறச் செய்து மேலும் மலையகம் அபிவிருத்தி காண வழிவகுக்க வேண்டும் என்றார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22