வுஹானிலிருந்து அழைத்து வரப்பட்ட மாணவர்களில் யாருக்கும் இதுவரையில் வைரஸ் தொற்று இனங்காணப்படவில்லை 

Published By: Vishnu

02 Feb, 2020 | 09:06 PM
image

(எம்.மனோசித்ரா)

வுஹான் நகரத்திலிருந்து நேற்று நாட்டுக்கு அழைத்து வரப்பட்ட மாணவர்கள் எவருக்கும் இது வரையில் வைரஸ் தொற்றுக்குள்ளான அறிகுறிகள் எவையும் இணங்காணப்படவில்லை என்று இராணுவ தலைமையக ஊடகப்பிரிவு இன்று உறுதிப்படுத்தியது. 

வுஹான் நகரத்திலிருந்து அழைத்து வரப்பட்டு தியத்தலாவை இராணுவ முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ள 4 சிறுவர்கள் உள்ளிட்ட 33 மாணவர்களின் உடல் நிலை பற்றி இராணுவ தலைமையக ஊடகப்பிரிவை தொடர்பு கொண்டு வினவிய போது அதிகாரியொருவர் ' தியத்தலாவை இராணுவ முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ள மாணவர்களின் உடல் நலத்தில் எவ்வித பாதிப்புப்பும் இல்லை ' என்று உறுதிப்படுத்தினார். 

மேலும் குறித்த மாணவர்களுக்கான மருத்துவ பரிசோதனையை மேற்கொண்ட கொழும்பு இராணுவ வைத்தியசாலையின் , தடுப்பு மருத்துவம் மற்றும் மனநல சுகாதார சேவைகள் மற்றும் பொது சுகாதார நிபுணரான பிரதி பணிப்பாளரான சுதேச வைத்தி ஆலோசகர் வைத்தியர் செமஹே தெரிவிக்கையில், ' இது வரையிலும் மேற்கொள்ளபட்ட பரிசோதனையில் எந்த விதமான நோய் அல்லது வைரஸ் தொற்றுக்குள்ளான அறிகுறிகளும் கண்டறியப்படவில்லை.' என்று தெரிவத்தார். 

தியத்தலாவையில் அமைக்கப்பட்டுள்ள இராணுவ முகாம் தொடர்பில் இராணுவ ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளதாவது : 

கொரோனா வைரஸ் பாதிப்புக்குள்ளான வுஹான் நகரத்திலிருந்து சனிக்கிழமை காலை 7.45 மணியளவில் மத்தள சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்த 4 சிறுவர்கள் உட்பட 33 மாணவர்களை இராணுவ இரசாயன பகுப்பாய்வு மருத்துவ நிபுணர்களால் 11.40 மணியளவில் தியதலாவையில் அமைக்கப்பட்டுள்ள இராணுவ முகாமில் தங்க வைக்கப்பட்டனர். 

ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவின் ஆலோசனைக்கமைய பதில் பாதுகாப்பு தலைமை அதிகாரி மற்றும் இராணுவத் தளபதியான லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வாவின் வழிக்காட்டலின் கீழ் சுகாதார அமைச்சு மற்றும் பாதுகாப்பு அமைச்சின் ஒத்துழைப்புடன் இவர்களுக்கான மருத்துவ வசதிகள் ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளன.

தடுப்பு மருந்து மற்றும் உள நல சேவை பிரிவின் ஒழுங்கமைப்புடன் சுதேச வைத்திய ஆலோசகர், கொழும்பு தடுப்பு மருந்து மற்றும் உள நல சேவை பிரிவின் உதவி பணிப்பாளர் கேணல் வைத்தியர் சவீன் கமஹே தலைமையில், மத்திய பாதுகாப்பு படைத் தலைமையகம், தியதலாவை வைத்திய சாலையின் அதிகாரிகளால் இம் மாணவர்களுக்கான அனைத்து அடிப்படை வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளன.  

அத்தோடு வைத்திய உபகரணங்கள், றுiகுi தொடர்பாடல் வசதிகள், வெப்பமானிகள், வைத்திய ஒலி உபகரணங்கள் மற்றும் ஒவ்வொருவருக்குமான பாதுகாப்பு உபகரணங்கள் உட்பட 100 x 20 சதுர அடியை கொண்ட சீல் செய்யப்பட்ட மருத்துவ கட்டிடம் வடிவமைக்கப்பட்டுள்ளன.

இலங்கை இராணுவமானது சீனாவில் வசித்து வந்த இம் மாணவர்களுக்கு நம்பிக்கையூட்டும் வகையில் அனைத்து சுகாதார மருத்துவ வசதிகளையும் வழங்கியுள்ளது. மனிதர்களுக்கு மரணத்தை ஏற்படுத்த கூடிய கொடிய வைரஸை ஒழிக்க அனைவரையும் ஒத்துழைக்குமாறு இராணுவம் கேட்டுக்கொண்டுள்ளது.  

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்