மட்டு மாவட்டத்தின் அபிவிருத்திக்கு பின்லாந்து அரசு சகலவழிகளிலும் உதவும் - இலங்கைக்கான  பின்லாந்து தூதுவர் 

Published By: Digital Desk 4

02 Feb, 2020 | 03:14 PM
image

மட்டக்களப்பு மாவட்டம் எல்லாவகையான வளமும் உள்ள  மாவட்டத்தினை மேலும் பெறுமதிசேர்க்க அபிவிருத்தியினை மேற்கொள்வதற்கு பின்லாந்து அரசாங்கம் சகலவழிகளிலும் உதவுவதற்கு ஆயத்தமாக உள்ளதாக இலங்கைக்கான பின்லாந்து தூதுவர் ஹரி மெகரீனன் தெரிவித்தார்.

கடல் தொழில் நீரியல் வழங்கல் அமைச்சினால் இலங்கைக்கான பின்லாந்து தூதுவராலயத்தற்கு விடுக்கப்பட்ட வேண்டுகோளின் அடிப்படையில் மட்டக்களப்பு; வாழைச்சேனை மீன்பிடித் துறைமுகத்தினை அபிவிருத்திசெய்யும் நோக்கில் இலங்கைக்கான பின்லாந்து தூதுவர் ஹரி மெகரீனன் மட்டு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி கலாமதி பத்மராஜா மாவட்டசெயலகத்தில் சந்தித்து மாவட்டம் தொடர்பான அபிவிருத்திகள் தொடர்பான கலந்துரையாடல்  இவ்வாறு அவர் தெரிவித்தார் 

இலங்கைக்கான பின்லாந்து தூதுவரின் மட்டக்களப்பு விஜயத்தில் தான் முதலாவதாக இம் மாவட்டத்தில் பல்லினசமூகங்களும் ஒன்றிணைந்து வாழுகின்ற  மாவட்டத்தினை நான் பார்க்கிறேன்.  

அத்தோடு மாவட்டத்தில் இருக்கின்ற மீன் வளத்தினை நவீனமுறையில் அபிவிருத்தியினை மேற்கொண்டு பெறுமதிவாய்ந்த சந்தையினை உருவாக்க மீனவர்களுக்கான முளுமையான பயன்பாட்டினையும் பெற்றுக் கொடுப்பதற்கு தனது அரசு முழுமையான ஒத்துழைப்பினையும் அரசாங்கத்திற்கு ஊடாகசெய்து கொடுக்கப்படும்..

மட்டக்களப்பு மாவட்டமானது கிழக்கு பகுதியை எடுத்துக் கொண்டால் அழகான நீலநிறமாக காட்சியளிக்கின்ற கடல் மிகுந்த பிரதேசமாகவும் மேற்குப் பகுதியைப் பார்த்தால் அழகிய பசுமைநிறைந்த வயல் வெளிகளை காணக் கூடியதாக இருக்கின்றதுடன் சகலவிதமான பழ வகைகளும் இம் மாவட்டதில் கிடைக்கின்றது. 

எல்லா வகையான வளமும் உள்ள இம் மாவட்டத்தினைமேலும் பெறுமதிசேர்க்க அபிவிருத்தியினை மேற்கொள்வதற்கு பின்லாந்து அரசாங்கம் சகலவழிகளிலும் உதவுவதற்கு ஆயத்தமாக உள்ளதாக  அவர் தரிவித்தார்.

இவ்  கலந்துரையாடலில் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி கலாமதிபத்மராஜா, மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் திருமதி.சசிகலா புண்ணியமூர்த்தி மற்றும் பகுதி தலைமை உத்தியோகத்தர் ஜஸிம் பாகிர்.; மாவட்டமீன் பிடித் திணைக்கள உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்;.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

முதலை கடித்து முதியவர் மரணம் ;...

2024-04-20 11:03:42
news-image

மரக்கறிகளின் விலை உயர்வு!

2024-04-20 11:00:02
news-image

நியூசிலாந்தின் வெலிங்டனில் இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தை நிறுவ...

2024-04-20 10:36:43
news-image

இராணுவ வீரர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு !

2024-04-20 10:53:53
news-image

செம்மணியில் துடுப்பாட்ட மைதானம் அமைந்தால் அயல்...

2024-04-20 10:56:36
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் உண்மையான சூத்திரதாரிகள்...

2024-04-20 10:34:03
news-image

நுவரெலியாவில் போதைப்பொருட்களுடன் வெளிநாட்டுப் பெண் உட்பட...

2024-04-20 10:43:33
news-image

சந்தேகத்துக்கிடமான முறையில் ஒருவர் உயிரிழப்பு: அம்பலாந்தோட்டையில்...

2024-04-20 10:56:00
news-image

நயினாதீவு நாகபூஷணி அம்மன் ஆலய ஆதீனக்...

2024-04-20 10:03:15
news-image

அமெரிக்காவில் நடைபெறவுள்ள திருமணமான அழகுராணிகளுக்கான போட்டியில்...

2024-04-20 11:14:06
news-image

ஐஸ் போதைப்பொருளுடன் பொலிஸ் கான்ஸ்டபிள் கைது!

2024-04-20 10:57:09
news-image

உயிர்த்த ஞாயிறுதினத்தாக்குதல் விவகாரம் : பேராயர்...

2024-04-20 08:50:08