ஆஸ்திரேலியாவையொட்டியுள்ள இந்திய பெருங்கடலில் 7.1 ரிச்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

குறித்த நிலநடுக்கம் தொடர்பிலான சேத விபரங்கள் இதுவரை வெளியிடப்படவில்லை.

நிலநடுக்கத்தால், ஆஸ்திரேலியாவுக்கு சுனாமி அச்சுறுத்தல் எதுவும் இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.