(வத்துகாமம் நிருபர்)

உணவு விஷமாகியதால் சுகவீனமுற்று கேகாலை வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள வயோதிபத் தம்பதியினரின் உணவில் நஞ்சு கலக்கப்பட்டுள்ளதா என்பதை கண்டறிய பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

கேகாலை உந்துகொடைப் பிரதேசத்தைச் சேர்ந்த 87 வயதுடைய பொடிமஹத்தயா என்பவரும் 78 வயதுடைய அவரது மனைவி டிங்கிரி மெனிக்கே என்பவரும் நோய்வாய்ப்பட்டு கேகாலை வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

இவர்கள் வீட்டில் தயாரித்த உணவை உட்கொண்ட பின்னரே சுகவீனமுற்றதாக தெரியவந்துள்ளது. 

அதேவேளை, இவர்களது வீட்டில் வளர்க்கப்பட்டு வரும் நாய், பூனை மற்றும் செல்லப்பிராணிகள் சிலவும் இவ் உணவை உட்கொண்ட பின்னரே உயிரிழந்துள்ளன.

இதன்படி, உணவு நஞ்சாகியதா அல்லது நஞ்சூட்டப்பட்டுள்ளதாக என்பதை கண்டறிய பொலீஸாரும் வைத்தியசாலை அதிகாரிகளும் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.