வைத்தியர்களை கௌரவிக்க 5.2 மில்லியன் டொலருக்கு விளம்பரம்..! 

Published By: Digital Desk 3

01 Feb, 2020 | 03:41 PM
image

அமெரிக்காவைச் சேர்ந்த ஒருவர், தன்னுடைய வளர்ப்பு நாயை காப்பாற்றிய  வைத்தியர்களை கௌரவிக்கும் விதமாக 5.2 மில்லியன் டொலர் செலவில் விளம்பரம் வெளியிட்டு அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார்.

அமெரிக்காவின் பிரபலமான கார் உதிரிப் பாகங்கள் தயாரிப்பு நிறுவனம் வெதர்டெக். இதன் முதன்மை நிர்வாக அலுவலராக பணிபுரியும் டேவிட் மேக்நெய்ல் என்பவர், ‘ரெட்ரீவர்’ ரக நாய் ஒன்றை வளர்த்து வருகிறார். சமீபத்தில் அந்த நாய்க்கு, இதயத்தில் கட்டி மற்றும் ரத்தக் குழாய் புற்று நோய் இருப்பது தெரிய வந்தது.

இதைத் தொடர்ந்து, விஸ்கன்ஸின் கால்நடை வைத்தியசாலையில் அந்த நாய்க்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. சிகிச்சைக்கு பின் நாய் பூரண நலம் பெற்றது. தான் ஆசையாக வளர்க்கும் நாய் பூரண நலம் பெற்றதால் மகிழ்ச்சியடைந்த டேவிட் மெக்நெய்ல், அதன் உயிரைக் காப்பாற்றிய வைத்தியர்களை கௌரவிக்க விரும்பினார்.

இதையடுத்து, சூப்பர் பவுல் கால்பந்தாட்ட போட்டியில், நாய்களுக்கான புற்றுநோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் 5.2 மில்லியன் டொலர் செலவில் விளம்பரம் வெளியிட்டுள்ளார். தன் வளர்ப்பு நாயின் மீது டேவிட் மேக்நெயல் வைத்துள்ள அன்பு, அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right