பாராளுமன்ற தேர்தலில் இளைஞர்கள் பெண்கள் உள்வாங்கப்படவேண்டும் - எம்.ஏ சுமந்திரன்

Published By: Digital Desk 4

01 Feb, 2020 | 11:08 AM
image

பாராளுமன்ற தேர்தலில் இளைஞர்கள் பெண்கள் உள்வாங்கப்படவேண்டும் இதற்கு தற்போது பாராளுமன்ற உறுப்பினர்களாக இருப்பவர்கள் இடம் கொடுக்க வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ சுமந்திரன் தெரிவித்தார்

பாராளுமன்ற தேர்தலில் இலங்கைத் தமிழரசுக்கட்சியின் ஆசனப்பகிர்வு தொடர்பில் கேட்டபோது அவர் இதனைத் தெரிவித்தார்

இவ் விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்

பாராளுமன்றத் தேர்தலில் புதியவர்கள் உள்வாங்கப்படவேண்டும் என்பது காலத்தின் தேவை குறிப்பாக இளைஞர்கள் பெண்கள் உள்வாங்கப்படவேண்டும். வாக்காளர்களில் 54 சத விதம் பெண்கள் இருக்கும் நிலையில் அவர்களுக்கு தேர்தலில் நியமனம் கொடுக்காதது தவறு ஐம்பதிற்கு ஐம்பது கொடுக்காது விட்டாலும் மாவட்ட ரீதியில் இருவர், மூவருக்கு இடம் கொடுக்கப்பட வேண்டும்.

கடந்த பாராளுமன்ற தேர்தலின் போது தமிழரசு கட்சியின் அரசியல் குழு கூட்டத்திலும் இவ்விடயத்தை குறிப்பிட்டேன் நடவடிக்கை எடுக்கப்படவில்லை இம்முறையும் கூறியுள்ளேன் நடவடிக்கை எடுக்கப்படும் புதியவர்கள் உள்வாங்குகின்றபோது தற்போதுள்ளவர்களையும் புதியவர்களையும் ஒரே இடத்தில் வைத்து அவர்களுக்குள்ள தகுதிகள் தராதரங்களை பார்த்து திறமையானவர்களுக்கு வேட்பாளர் நியமனம் வழங்கப்படவேண்டும்.

கடந்த முறை தேர்தலின் போது குறித்த விடையத்தைச் சுட்டிக்காட்டியிருந்த நிலையில் தற்போதுள்ள பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு நியமனங்களை வழங்கிவிட்டு வெற்றிடமாக இருக்கின்ற இடத்திற்கு வெல்லக்கூடியவர்களை நிறுத்தப்படவில்லை. கட்டாயம் தோற்பவர்களையத்தான் தேர்தலில் நிறுத்தியுள்ளார்கள்.

பத்துப் பேரை நியமிக்கின்றபோது ஏழு பேர்தான் தேவை என்றால் மிகுதி மூன்றுபேர் தோற்கடிக்கப்படவேண்டும் தோற்கின்றவர்கள் நாங்களாக இருக்கக்கூடாது என்பதற்காக வேண்டுமென்றே இவ்வாறான நிகழ்வு நடைபெறுகின்றது எங்களுடைய விடுதலைப் பாதையை அடைவதற்கு அதற்காக உழைப்பவர்கள் உள்வாங்கப்படவேண்டும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04