அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாகத்தான் குற்றச்சாட்டுக்களைச் சுமத்துகின்றார்கள் - அனந்தி சசிதரன்

Published By: Digital Desk 4

01 Feb, 2020 | 10:58 AM
image

பாதிக்கப்பட்ட பெண் என்றும் பாராது அரசியல் காழ்புணர்ச்சி காரணமாகத்தான் என்மீதான குற்றச்சாட்டுக்களை சுமத்துகின்றார் விசாரணை ஒன்று இடம்பெற்று அறிக்கை வெளிவந்துள்ள நிலையில் அவ் அறிக்கை பற்றி எதையுமே வெளிப்படுத்தவில்லை.

நேர்மையானவர் என்றால் அதனை வெளிப்படுத்தியிருக்கவேண்டும் அரசியல் காழ்புணர்ச்சி காரணமாக குற்றச்சாட்டை வைத்தவர் அதற்கான அறுவடை அவருக்குக் கிடைக்கும் என வடக்கு மாகாண சபையின் முன்னாள் அமைச்சர் அனந்தி சசிதரன் தெரிவித்தார்.

வடக்கு மாகாண சபையின் அமைச்சராக இருந்தபோது கூட்டுறவுத்துறையில் நிதி மோசடி இடம்பெற்றதாக வடக்கு மாகாண சபையின் அவைத்தலைவர் குற்றச்சாட்டுக்கள் தெரிவித்தமை தொடர்பில் கேட்டபோதே அவர் இதனைத் தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்

தமிழ்ச்தேசியக் கூட்டமைப்பில் இருந்து நான் விலகி ஈழத்தமிழர் சுயாட்சிக்கழகம் என்ற கட்சியை உருவாக்கிச் செயற்பட்டு வருகின்றேன். எனக்குள்ள ஆதரவினை பார்த்து பொறாமைப்படுவதன் விளைாவக ஆளுநருக்கு கூட்டுறவுத்துறையில் மோசடி இடம்பெற்றதாகவும் அதனை விசாரிக்க குழு ஒன்றுநி யமித்து அறிக்கையிடுமாறு தொடர்சியாக கோரிக்கை முன்வைத்திருந்து.

இந்த நிலையில் அந்த அறிக்கையும் ஆளுநருக்கு வழங்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கை கூட்டுறவுத்தறைியல் எத்தகைய மோசடியும் இடம்பெறவில்லை என்பது தெளிவான நிலையில் மோடி இடம்பெற்றுள்ளதாக அறிக்கை விடுகின்ற அவைத்தலைவர் அறிக்கை வெளிவந்ததன் பின்னர் எந்தக் கருத்தையும் வெளியிடவில்லை. உண்மை வெளிவந்தால் எனக்கு  ஆதரவு அதிகரித்துவிடும் என்பதால் தான் மௌனத்தில் இருக்கின்றார்.

என்மீதான குற்றச்சாட்டுக்களை செலுத்துகின்றபோது நான் மட்டுமன்றி நிர்வாகத்தில் இருப்பவர்களையும் அந்தக் குற்றச்சாட்டுக்கு ஆளாகின்றார்கள். ஆனால் எனது அமைச்சில் இருந்து அதிகாரிகளே திறமையான அதிகாரிகள் அவைத்தலைவராக இருப்பவர் தனக்குத்தான் எல்லாம் தெரியும் எனக் கூறுகின்றவர்,

அவர் மாகாண சபையில் செய்த முறைகேடுகளும் விடுதலைப்புலிகள் காலத்தில் செய்த அநியாயங்களும் எங்களுக்குத் தெரியும் அவர் குற்றம் சாட்டுகின்றார் என்பதற்காக நாங்களும் அதற்காக திருப்பி குற்றச்சாட்டுக்களை முன்வைப்பதில் அர்த்தம் இல்லை. என்மீதான குற்றச்சாட்டுக்கு அவர் அறுவடையை அனுபவிப்பார் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உக்ரைன் போருக்கு இலங்கையர்களை அனுப்பிய ஓய்வு...

2024-04-18 12:23:02
news-image

தேர்தல்களை பிற்போடுவதை கடுமையாக எதிர்ப்போம் -...

2024-04-18 11:52:31
news-image

கடலில் குழந்தை பிரசவித்த நயினாதீவு பெண்

2024-04-18 11:40:05
news-image

மைத்திரிபால சிறிசேனவிற்கு தடை உத்தரவு நீடிப்பு!

2024-04-18 12:12:09
news-image

14 வாரங்களில் 7 இலட்சம் சுற்றுலாப்...

2024-04-18 11:56:42
news-image

மதுபோதையிலிருந்த நபரால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-04-18 11:11:00
news-image

இரு பெண்களின் சடலங்கள் வீட்டிலிருந்து மீட்பு...

2024-04-18 09:45:24
news-image

யாழ்ப்பாணத்தில் கசிப்பினை பொதி செய்துகொண்டிருந்த பெண்...

2024-04-18 08:47:07
news-image

இன்றைய வானிலை

2024-04-18 06:04:36
news-image

ஹிருணிகாவுக்கு அழைப்பாணை

2024-04-18 02:38:02
news-image

நான் இருக்கும் வரை சுதந்திர கட்சியை...

2024-04-18 00:54:03
news-image

கம்பனிகளை விரட்டியடிக்கும் போராட்டத்தில் தொழிற்சங்கங்கள் கைகோர்க்க...

2024-04-17 19:38:40