சுப்பர் ஸ்டாருடன் மீண்டும் இணையும் நயன்தாரா

Published By: Daya

01 Feb, 2020 | 10:40 AM
image

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், சிவா இயக்கத்தில், சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் பெயரிடப்படாத படத்தில் நடிகை நயன்தாரா நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார்.

‘தர்பார்’ படத்தை தொடர்ந்து சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் பெயரிடப்படாத படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் ரஜினிகாந்துடன் குஷ்பூ, மீனா, கீர்த்தி சுரேஷ், பிரகாஷ்ராஜ், சூரி, உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடிக்கிறார்கள். 

இந்நிலையில் இப்படத்தில் கதாநாயகியாக நடிக்க நடிகை நயன்தாரா ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார். இதுகுறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பை படத்தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கிறது.

சந்திரமுகி, சிவாஜி, குசேலன், தர்பார் ஆகிய படங்களை தொடர்ந்து நடிகை நயன்தாரா ஐந்தாவது முறையாக சுப்பர் ஸ்டாருடன் இணைந்திருக்கிறார். இப்படத்தின் இயக்குனர் சிவா இயக்கிய ‘விஸ்வாசம்’ படத்தில் தன்னுடைய கதாபாத்திரத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து இருந்ததால், அதே நம்பிக்கையில் அவர் இயக்கத்தில் உருவாகும் இந்த படத்திற்கும் கதையை கேட்காமல் நடிக்க சம்மதம் தெரிவித்து இருக்கிறாராம் நயன்தாரா.

குஷ்பூ, மீனா, கீர்த்தி சுரேஷ் போன்ற முன்னணி நட்சத்திர நடிகைகளுடன் நடிகை நயன்தாராவும் இணைந்திருப்பதால், ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பையும், ஆவலையும் அதிகப்படுத்தி இருக்கிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

புதிய முயற்சியாக முதலில் இரண்டாம் பாகத்தை...

2024-04-18 17:34:41
news-image

சாதிய அரசியலை அலசும் அண்ட்ரியாவின் 'மனுசி'

2024-04-18 17:31:38
news-image

நடிகர் மன்சூர் அலிகான் வைத்தியசாலையில் அனுமதி...

2024-04-18 13:17:36
news-image

சுப்பர் ஸ்டார் ரஜினியின் பாராட்டைப் பெற்ற...

2024-04-17 17:43:13
news-image

இயக்குநர் ஷங்கரின் இல்ல திருமண வரவேற்பில்...

2024-04-17 17:37:23
news-image

சீயான் விக்ரம் நடிக்கும் 'தங்கலான்' திரைப்படத்தின்...

2024-04-17 17:39:11
news-image

வல்லவன் வகுத்ததடா - விமர்சனம்

2024-04-17 17:39:57
news-image

மோகன் நடிக்கும் 'ஹரா' படத்தின் டீசர்...

2024-04-16 17:39:18
news-image

கெட்ட வார்த்தைகளை பேசி ரசிகர்களை வசப்படுத்தி...

2024-04-16 17:43:10
news-image

தமிழர்களின் பாரம்பரிய கலைக்கு ஆதரவளிக்கும் ராகவா...

2024-04-16 17:45:02
news-image

டிஜிட்டல் தள ரசிகர்களின் வரவேற்பை பெறுமா...

2024-04-16 17:45:54
news-image

மே மாதத்தில் வெளியாகும் வரலட்சுமி சரத்குமாரின்...

2024-04-16 17:41:35