(வத்துகாமம் நிருபர்)

பத்து வருட சிறை தண்டனையை அனுபவித்துவந்த ஒருவர் வேறு ஒரு வழக்கிற்காக நீதிமன்றம் அழைத்து வரும் போது தப்பிச் சென்று நான்கு மாதங்களின் பின் மீண்டும் பொலீஸாரால் கைது செய்யப்பட்ட சம்பவம்  குருணாகலில் இடம் பெற்றுள்ளது.

குருணாகல் வீரம்புகெதர பிரதேசத்தைச் சேர்ந்த 25 வயது இளைஞன் ஒருவன் பத்து வருட சிறைத்தண்டனையை அனுபவித்து வந்த வேளையில் வேறு ஒருவழக்கிற்காக குருணாகல் நீதி மன்றத்திற்கு அழைத்து வரப்பட்ட சமயமே சிறை அதிகாரிகளின் பிடியிலிருந்து தப்பிச் சென்ற தாக தெரவிக்கப்பட்டது.

குறித்த சந்தேக நபருக்கு வீடுடைப்பு மற்றும் வழிப்பறிக் கொள்ளை உற்பட 8 வழக்குகள் இருந்துள்ளது.

அதிலொரு வழக்கிலே குற்றவாளியாகக் காணப்பட்டு 10 வருடசிறைத்ததண்டனையை வழங்கப்பட்டு அனுபவித்து வந்த போது நான்கு மாதங்களுக்கு முன் தப்பிச் சென்றதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் குருணாகல் நீதவான் செல்வி கீத்தானி விஜேசிங்க முன் வீரம்புகெதர பொலிஸார் ஆஜர் செய்த போது நீதவான் 10 வருட சிறைத் தண்டனையை மீண்டும் அமுல் படுத்தும்படி உத்தரவிட்டார்.