பல்கலைக்கழக மாணவர்களின் பிரச்சினைகளுக்கு   பேச்சுவார்த்தையின் ஊடாக தீர்வு : உயர்கல்வி அமைச்சர்  

Published By: R. Kalaichelvan

31 Jan, 2020 | 07:01 PM
image

(இராஜதுரை ஹஷான்)

பல்கலைக்கழக மாணவர்கள்  போராட்டத்தை கைவிட்டு பேச்சுவார்த்தைக்கு  வந்தால் அரசாங்கம் உரிய தீர்வை பெற்றுக் கொடுக்கும்.

கடந்த அரசாங்கத்தை போன்று மாணவர்கள் மீது தாக்குதல்களை முன்னெடுக்க மாட்டோம் என தகவல் மற்றும் தொடர்பாடல்  , உயர்கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

பல்கலைக்கழக மாணவர்களின் போராட்டம் கடந்த அரசாங்கத்தில் தினமும் எதிர்பார்க்கும்  நிகழ்வாகவே  காணப்படும். மாணவர்களை தீவிரவாதிகளை  அடக்குவதை போன்று தாக்குதல்  நடவடிக்கைகளை மேற்கொள்ள பொலிஸாரும் தயாராகவே  இருப்பார்கள்.

இலவச கல்வியனை  பெறும் மாணவர்களுக்கு எதிராக வன்மங்களே   கட்டவிழ்த்து விடப்பட்டன. அவை தொடர்பில் கடந்த அரசாங்கத்தின் இரு தலைவர்களும் கவனம் செலுத்தவில்லை.

பல்கலைகழக மாணவர்கள் மாத்திரமல்ல உரிமைகளை முன்னிறுத்தி  போராடும் தரப்பினருக்கு எதிராக தாக்குதல்களை பிரயோகிக்க வேண்டாம் என ஜனாதிபதி விசேட  பணிப்புரை விடுத்துள்ளார்.   தற்போது  ஜனாதிபதி  செயலகத்தின்  முன்பாக போராட்டத்தை மேற்கொள்வதற்கும், பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பதற்கும்   முழுமையான அனுமதி  வழங்கப்பட்டுள்ளன.

ஆகவே  பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டங்களை  கைவிட்டு பேச்சுவார்த்தைக்கு வந்தால் உரிய தீர்வினை அரசாங்கம்  பெற்றுக் கொடுக்கும் என அவர் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31