உலக சுகாதார ஸ்தாபனத்தின் அறிவித்தல் தொடர்பில் அச்சம் கொள்ள தேவையில்லை - சுகாதார அமைச்சர்  

Published By: Vishnu

31 Jan, 2020 | 06:47 PM
image

(செ.தேன்மொழி)

சீனா - வுஹனா பிரதேசத்தில் இருக்கும் இலங்கை மாணவர்களை நாளைய தினத்திற்குள் அழைத்து வர முடியும் என்று தெரிவித்த சுகாதார அமைச்சர் பவித்திரா வன்னியாராச்சி உலக சுகாதார ஸ்தாபனம் கொரோனா வைரஸின் தாக்கத்தை உலகலாவிய சுகாதார நெருக்கடி நிலையாக அறிவித்துள்ளமைய தொடர்பில் நாம் அச்சம் கொள்ளத் தேவையில்லை என்றும் கூறினார்.

சுகாதார அமைச்சின் கேட்போர் கூடத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது,

சிறியநாடான இலங்கை பல சாவால்களை வெற்றிக்கொண்டு வரலாறு படைத்திருப்பதைப்போன்று ,  தற்போது பெரும் சவாலை ஏற்படுத்தியுள்ள கொரோனா வைரஸை நாட்டுக்குள் தலைதூக்க விடாது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து. 

இந்த வெற்றிக்கு அயராது உழைத்த சுகாதார அமைச்சின் வைத்திய பிரிவினருக்கு நன்றித் தெரிவித்துக் கொள்வதுடன் , வைரஸின் தாக்கம் ஏற்படாமலிருப்பதற்காக தொடர்ந்தும் சுகாதார அமைச்சு செயற்பட்டு வருகின்றது.

வைரஸ் தொற்றுதலுக்குள்ளான நிலையில் அடையாளம் காணப்பட்டுள்ள சீனப் பெண் குணமடைந்து வருவதுடன் , வைரஸ் தொற்றுக்குள்ளாகியுள்ளதாக சந்தேகத்தில் சிகிச்சைப் பெற்று வரும் நோயாளிகளுக்கு கொரோனா வைரஸ் தொற்ற வில்லை என்று 99 வீதம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்திருக்கின்றனர். 

இந்நிலையில் வைரஸ் தொடர்பில் நாம் அச்சம் கொள்ளத் தேவையில்லை.

விமான நிலையங்களில் சுகாதார பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டுள்ளதுடன். சீனாவிலிருந்து வரும் பயனிகள் தொடர்பில் விசேட அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. பயணிகளின் உடல் வெப்ப நிலை தொடர்பில் மேற்கொள்ளப்படும் பரிசோதனைகளின் பின்னர் நோய் அறிகுறிகளுடன் எவரேனும் கண்டறியப்பட்டால் அவர்களுக்கான வைத்திய பரிசோதனைகள் மற்றும் அவர்களை தொற்று நோய் வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லுவதற்கான அம்புலன்ஸ் வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

இதேவேளை சீனாவிலிருந்து வரும் பயணிகள் தொடர்பில் விமானத்தில் வரும் போதே குறிப்பு எடுக்கப்படுவதுடன். அடையாளம் நோயாளர்கள் கண்டறியப்பட்டால் அவர்கள் தொடர்பில் தகவல்களை திரட்டி அவர்கள் இந்நாட்டில் தங்கிருக்கும் இடங்களிலுள்ள வைத்திய பிரிவுகளுக்கு இதுதொடர்பில் அறிவிக்கப்படுவதுடன் , இணையத்தினூடாகவும் தகவல்களை அந்த பிரிவுகளுக்கு அனுப்பி வைப்பதற்கான ஏற்பாடுகள் செய்துக் கொடுக்கப்பட்டுள்ளன.

வைரஸ் தொற்றுக் உள்ளோனோர் என்று அடையாளம் காணப்படும் நோயாளர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக 12 வைத்தியசாலைகள் தயார்படுத்தப்பட்டுள்ளதுடன் , 6 இலட்சம் ரூபாவுக்கும் அதிகமான செலவில் அதற்கான அனைத்து வசதிகளும் செய்துக் கொடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை சீனா- வுஹனா நகரத்திலிருக்கும் இலங்கை மாணவர்களை அழைத்து வருவது தொடர்பில் சீனாவுடன் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டுள்ளதுடன், அவர்களை தாய்நாட்டிற்கு திருப்பி அனுப்புவதற்கு சீனா இணக்கம் தெரிவித்திருக்கின்றது. 

இந்நிலையில் இன்றைய தினத்திற்குள் அவர்களை நாட்டுக்கு அழைத்துவர முடியும். 

இந்நிலையில் அவர்களுக்கான சுகாதார வசதிகளை பெற்றுக் கொடுப்பது தொடர்பில் விமானநிலை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதுடன் அதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்துக் கொடுக்கப்பட்டுள்ளன. 

இவ்வாறு நாட்டுக்குள் வரும் மாணவர்களை தியத்தலாவை இராணுவ முகாமிற்கு அழைத்துச் செல்வதற்காக அனைத்து வசதிகளுடன் விசேட பஸ் சேவையில் ஈடுப்படுத்தப்பட்டுள்ளதுடன் , அவர்களது பயணப் பொதிகளை எடுத்துச் செல்வதற்காக இராணுவத்தினர் விசேட வாகன வசதிகளை ஏற்பாடு செய்திருக்கின்றனர் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38