சுற்றுலாப் பயணிகளை கண்காணிக்க புதிய மென்பொருள்!

Published By: Vishnu

31 Jan, 2020 | 10:01 AM
image

இலங்கைக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளால் குறிப்பாக சீனப் பிரஜைகளால் வைரஸ் பரவாமல் தடுக்க புதிய மென்பொருள் மூலாக அவர்கள் உன்னிப்பாக கண்காணிக்கப்படுவதாக சுகாதார அமைச்சகம் பாராளுமன்றத்துக்கு தெரிவித்துள்ளது.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜயசிங்க நேற்றைய தினம் பாராளுமன்றத்தில் நடைபெற்ற சிறப்புக் கூட்டத்தின் போது இதனை சுகாதாரம், மனித நலன் மற்றும் சமூக வலுவூட்டல் தொடர்பான துறை மேற்பார்வைக் குழுவிடம் தெரிவித்தார்.

இரண்டு நாட்களுக்குள் 'ICTA' உடன் இணைந்து வைத்தியர்கள் குழு ஒன்று இந்த மென்பொருளை உருவாக்கியுள்ளது என்றும், வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் தங்குமிடங்களின் விவரங்கள் மென்பொருளால் கண்காணிக்கப்படும் என்றும் ஜயசிங்க கூறினார்.

விமான நிலையத்தை வந்தடையும் சுற்றுலாப் பயணிகளின் சோதனையை தொடர்ந்து, அவர்களுக்கு கொரோனா தொற்று தொடர்பான அறிகுறிகள் தென்பட இரண்டு வாரங்கள் எடுத்துள்ளதனால் அனைத்து சுற்றுலாப் பயணிகளையும் இந்த மென்பொருள் மூலம் கண்காணிக்கப்படுவதாகவும் அவர் கூறினார்.

கொழும்பு, பலாலி விமான நிலையங்கள், மற்றும் துறைமுகங்களிலும் சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், எந்தவொரு சூழ் நிலைக்கும் முகங்கொடுக்க 12 வைத்தியசாலைகள் தயார் நிலையில் உள்ளதாகவும் அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47