சூரியனின் மேற்பரப்பை மிக துல்லியமாக படம்பிடித்த நவீன நுண்ணோக்கி

Published By: Digital Desk 4

30 Jan, 2020 | 04:52 PM
image

அமெரிக்காவில் உள்ள புதிய நவீன தொலைநோக்கியின் மூலம் சூரியனின் கொந்தளிப்பான மேற்பரப்பு இதுவரை இல்லாத வகையில், துல்லியமாக படம்பிடிக்கப்பட்டுள்ளது.

The Daniel K. Inouye Solar Telescope has produced the highest resolution image of the sun's surface ever taken. In this picture, taken at 789 nanometers (nm), we can see features as small as 18 miles in size for the first time ever. The image shows a pattern of turbulent, "boiling" gas that covers the entire sun.

கோடிக்கணக்கான விண்மீன்களின் தொகுதியே அண்டம். கோடிக்கணக்கான அண்டங்களின் தொகுதியே பேரண்டம். பேரண்டத்தில் காணப்படும் பல்வேறு அண்டங்களில் ஒன்றுதான் பால்வெளி மண்டலம். சூரியன் உட்பட எம் கண்களுக்குத் தெரியும் அனைத்துமே பால்வெளி மண்டலத்தைச் சார்ந்தவை. சூரியனைப்பற்றியும், சூரியக்குடும்பத்தில் உள்ள கோள்கள் பற்றிய ஆராய்ச்சிகளிலும் உலகின் பல நாடுகள் ஈடுபட்டுள்ளன. 

இந்நிலையில், வானியற்பியல் மற்றும் விண்வெளி ஆராய்ச்சி துறையில் முக்கிய பங்கு வகிக்கும் நாடான அமெரிக்காவின் தேசிய அறிவியல் அமைப்பு சூரியனின் மேற்பரப்பை இதுவரை யாரும் எடுக்காத வகையில் துல்லியமான புகைப்படத்தை நவீன நுண்ணோக்கி மூலம் படம்பிடித்துள்ளது.  

A more detailed image of the sun's surface provided by the telescope.

இதுகுறித்து அந்த அமைப்பின் இயக்குநர் தெரிவிக்கையில், 

‘சூரியனின் இதுவரை காணப்படாத மேற்பரப்பை இந்த இன்யூய் சூரிய தொலை நோக்கி கண்டறிந்துள்ளது. இது சூரியனைப் பற்றிய அறிவியல் பிரிவின் சகாப்தத்தில் முக்கிய பங்கு வகிக்கும். இந்த தொலைநோக்கி படம்பிடித்துள்ள சூரியனின் படம் தான் மிக மேம்படுத்தப்பட்ட படமாகும். 

கொந்தளிப்பான சூரியனின் மேற்பரப்பு- துல்லியமாக படம்பிடித்த நவீன நுண்ணோக்கி

சமீபத்திய படங்கள் முழு சூரியனையும் உள்ளடக்கிய கொந்தளிப்பான கொதிக்கும் பிளாஸ்மாவின் வடிவத்தைக் காட்டுகின்றன. இந்த இன்யூய் சூரிய தொலைநோக்கி மூலம், சூரியனின் வளிமண்டலத்தின் வெளிப்புறப்பகுதியில் உள்ள காந்தப்புலங்களை வரைபடமாக்க முடியும்’  என தெரிவித்தார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மனித உரிமைகளை வலுப்படுத்த விரும்பும் இளைஞர்களின்...

2024-03-18 16:04:18
news-image

சமாதானத்தை ஜனநாயகத்தை வலுப்படுத்துவதில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தினையும்...

2024-03-18 11:46:14
news-image

செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தும்போது ஒழுக்கவியல் சார்ந்த...

2024-03-15 15:43:14
news-image

டிக்டொக்கை பின்னுக்குத் தள்ளிய இன்ஸ்டாகிராம்

2024-03-11 10:13:06
news-image

மனித மூளையில் ‘சிப்’ ; எலான்...

2024-01-30 13:16:57
news-image

“மூன் ஸ்னைப்பர்” வெற்றிகரமாக தரையிறங்கியது :...

2024-01-19 21:59:46
news-image

எதிர்காலத்தை ஆளப்போகும் செயற்கைநுண்ணறிவு

2023-11-22 15:47:57
news-image

வட்ஸ் அப்பில் ஒரே நேரத்தில் இரண்டு...

2023-10-21 12:02:07
news-image

ஸ்னாப் செட்டின் புதிய செயற்கை நுண்ணறிவு...

2023-10-07 11:02:07
news-image

கூகுளுக்கு இன்று வயது 25

2023-09-27 10:36:57
news-image

ஏகத்துவத்தை நோக்கி தொழில்நுட்பத்தில் வேகமாக மாற்றமுறும் ...

2023-09-22 18:33:26
news-image

சமூக வழிகாட்டுதல்கள் பற்றிய விழிப்புணர்வை இலங்கையில்...

2023-08-28 20:48:26