மனிதன் உயிர் வாழ அத்­தி­யா­வ­சி­ய­மா­னது கழி­வேற்றம். சிறுநீர் உரு­வா­கவும் மற்றும் வெளி­யே­றவும் கார­ண­மாக இருக்கும் இரண்டு சிறு­நீ­ர­கங்கள், யூரட்டர் எனப்­படும் குழாய்கள், ப்ளாடர், இவற்றை கட்­டுப்­ப­டுத்தும் தசைகள், நரம்­புகள் ஆகி­யவை சேர்ந்­தது தான் சிறு­நீ­ரக மண்­டலம். இவை, நுரை­யீரல், சருமம், குடல் ஆகி­ய­வற்­றுடன் சேர்ந்து உடலில் உள்ள நீர் மற்றும் தாதுப்­பொ­ருட்­களை சமன் செய்­கி­றது. அதேபோல் ஒவ்வொருவ­ருக்கும் அவர்கள் பருகும் தண்­ணீரின் அளவைப் பொறுத்தும், வியர்வை மற்றும் மூச்சுக் காற்றில் வெளி­யேற்றும் நீரைப் பொறுத்தும் சிறு­நீரை வெளி­யேற்­று­கி­றது. இந்­நி­லையில் சர்க்­கரை நோய், இரத்தக் கொதிப்பு போன்­ற­வற்றால் பாதிக்கப்பட்­ட­வர்­க­ளுக்கு சிறு­நீ­ரக மண்­ட­லத்தில் நோய் வரும் வாய்ப்பு அதிகம் என்ற எச்­ச­ரிக்­கை­யுடன் இயல்­பாக எம்­முடன் பேசத் தொடங்கி, சிறு­நீ­ரகம் தொடர்­பான சில தக­வல்­களை விளக்­கத்­துடன் பகிர்ந்­து­கொள்­கிறார் டொக்டர் சதீஷ்.

இந்த துறையைப் பொறுத்­த­வ­ரையில் பொது­வாக நாம் காணும் பிரச்­சி­னை­களின் முதன்­மை­யா­னது சிறு­நீ­ரகக் கற்கள். இதற்கு எம்­மு­டைய மாறி­விட்ட உணவு வகை­களும், மாற்­றி­ய­மைத்துக் கொண்ட உணவுப் பழக்­கமே இதற்கு காரணம். மாவுச்­சத்து அதி­க­முள்ள உணவு வகை­களை - குறிப்­பாக, மைதா, பீட்ஸா, வாழைப்­பழம் போன்­ற­வற்றை அதி­க­மாகச் சாப்­பி­டு­வ­தா­லேயே சிறு­நீ­ரகக் கற்கள் தோன்­று­கின்­றன என்று ஆய்­வுகள் மூலம் உறு­திப்­ப­டுத்­தப்­பட்­டி­ருக்­கின்­றன

மேலும், மேல் முது­கி­லி­ருந்து ஆண் குறி­வரை மென்­மை­யான அல்­லது கடு­மை­யான வலி சுமார் நாற்­பத்­தைந்து நிமி­டங்கள் வரை பரவி, சட்­டென்று குறைந்­து­விட்டால் அது சிறு­நீ­ரகக் கற்கள் எம்­மு­டைய உடலில் இருப்­ப­தற்­கான அறி­குறி என்­பதை தெரிந்­து­கொள்­ளலாம். அதேபோல் வலி தோன்­றி­யதும் நாமே அரு­கி­லுள்ள மருந்­து­க­டை­க­ளுக்கு சென்று ஏதேனும் வலி நிவா­ரணி மாத்­தி­ரை­களைச் சாப்­பி­டு­கிறோம். ஆனால் இது தவறு என்­பதை யாரும் உணர்ந்­து­கொள்­வ­தில்லை.

அத்­துடன் இந்த வலி விட்டு விட்டு வரும் என்­பதால், சாப்­பிடும் வலி நிவா ரணி மரு­ந­்து­களும், மாத்­தி­ரை­களும் உரிய பல­னைத்­த­ரு­வ­தில்லை. இதனால் மக்கள் ஏமா­று­வ­துடன் மேலும் நிலை­மையை சிக்­க­லாக்கிக் கொள்­கி­றார்கள்.

ஒரு சில­ருக்கு வலி­யுடன் குமட்டல், வாந்தி, நீர்க்­க­டுப்பு, சிறு­நீரில் இரத்தம் கலந்து வெளி­யேறல், பசி­யின்மை, குளிர் காய்ச்சல் என்­பன போன்ற அறி­கு­றி­களும் தோன்றும். இத்­த­கைய அறி­கு­றிகள் தோன்­றினால், சற்றும் தாம­தி­யாமல் அரு­கி­லுள்ள மருத்­து­வ­ம­னைக்கு சென்று பரி­சோ­தனை செய்து கொள்­வதே சிறந்தது.

இவ்­வா­றான அறி­கு­றிகள் இருப்­ப­வர்­க­ளுக்கு அல்ட்­ரா­சவுண்ட் ஸ்கேன் செய்­து­கொள்­வதன் மூலம் எத்­த­கைய சிறு­நீ­ரகக் கற்­களால் பாதிக்­கப்­பட்­டி­ருக்­கிறோம் என்­பதை உறுதி செய்து கொள்­ளலாம். ஒரு சில­ருக்கு மட்டும் சிடி ஸ்கேன் பரி­சோ­த­னையும் தேவைப்­ப­டலாம்.

சிறு­நீ­ர­கத்தில் கற்கள் இருப்­பது உறுதி செய்து, கண்­ட­றி­யப்­பட்டால், சற்றும் தாம­திக்­காமல் சிகிச்சை மேற்­கொள்ள வேண்டும்.

ஏனென்றால், சுமார் 8 மில்லி மீற்றர் முத­லான கற்கள், மூன்று வாரத்­துக்கு மேல் உடம்­புக்குள் இருந்தால் அவை பார­தூ­ர­மான விளை­வு­களை ஏற்­ப­டுத்­தலாம். எனவே கற்கள் கண்­ட­றி­யப்­பட்­ட­துமே எண்­டாஸ்­கோப்பி எனும் எளி­மை­யான நுண்­துளை சத்­திர சிகிச்சை மூலம் கற்­களை அகற்­றி­வி­டலாம். குழந்­தைகள் முதல் பெரி­ய­வர்கள் வரை சிறு­நீர்ப்பை முதல் சிறுநீர் தாரை வரை எங்கு இந்தக் கற்கள் இருந்­தாலும் எண்­டாஸ்­கோப்பி சிகிச்சை மூலம் அகற்­றி­விட இயலும்.

அதே போல் ஒரு முறை சிறு­நீ­ரக கற்களுக்­காக சிகிச்சை எடுத்துக் கொண்ட பின் மீண்டும் அவை வருமா? வராதா? என்­பது குறித்து இது­வரை உறு­தி­யான எந்­த­வொரு தீர்வும் கண்­ட­றி­யப்­ப­ட­வில்லை.

ஆனால் இவைகள் வராமல் தடுப்­ப­தற்கு ஏரா­ள­மான முன்­னெச்­ச­ரிக்கை நட­வ­டிக்­கைகள் இருக்­கின்­றன.அதில் ஒன்றை குறிப்­பிட வேண்டும் என்றால், ஒவ்­வொ­ரு­வரும் மருத்­து­வர்­களின் பரிந்­து­ரைப்­படி தினமும் குறைந்­தது மூன்று லீற்றர் தண்­ணீரை அருந்த வேண்டும்.

அதேபோல் சாப்­பிடும் உண­வு­களில் உப்பின் அளவைச் சற்றுக் குறைத்­துக்­கொள்ள­ வேண்டும். அசைவ உணவு பிரி­யர்­க­ளாக இருந்தால் அத்­த­கைய அசைவ உண­வு­களில் கட்­டுப்­பாட்டை பின்­பற்­ற­வேண்டும். இதைப்­போன்ற சில எளிய நடை­மு­றை­களை நாம் பின்­பற்றத் தொடங்­கினால் சிறு­நீ­ரக கற்கள் மீண்டும் எம்­மைத்­தாக்­காமல் இருக்­கக்­கூடும்.

அதேபோல் வய­தான ஆண்­க­ளுக்கு மட்டும் பிராஸ்டேட் சுரப்பி தொடர்­பான சிக்கல் ஏற்­படும். சிறுநீர் கழிப்­பது தொடர்­பான பிரச்­சி­னைகள் என பலரும் இந்த சிக்­கலை அலட்­சியம் செய்­து­வி­டு­கி­றார்கள். இந்த சிக்­க­லுக்கும் சிறு­நீ­ர­கத்தில் ஏற்­படும் புற்று நோய்க்கும் ஒரே­வி­த­மான அறி­கு­றி­கள்தான்.

வய­தான ஆண்கள் சிறுநீர் கழிப்­பதில் பிரச்சி னைகள் இருந்தால் உட­ன­டி­யாக மருத்­துவ பரி

சோ­தனை செய்­து­கொள்ள வேண்டும். இந் நோயை 80 சத­வீதம் சாதா­ரண மருந்­து­களால் குணப்­ப­டுத்­தி­வி­டலாம். சிறுநீர் கழிக்­கவே முடி­ய­வில்லை என்ற நிலை தோன்­றினால் மட்டும் எண்­டாஸ்­கோப்பி சிகிச்­சையை மேற் கொள்­ளலாம்.

சில ஆண்­க­ளுக்கு விதைப்­பையில் வீக்கம் தோன்­றலாம். ஏதோ அடி­பட்­ட­தனால் ஏற்­பட்ட வீக்கம் என்று நினைத்­து­வி­டாமல் உட­ன­டி­யாக மருத்­துவ ஆலோ­சனை பெற­வேண்டும். ஏனெனில், இது விதைப்­பையில் தோன்றும் புற்­று­நோ­யா­கவும் இருக்­கலாம். நவீன மருத்­துவம் இது­போன்ற புற்­று­நோய்­களை முழு­மை­யாக குணப்­ப­டுத்தும் வல்­லமை பெற்­றி­ருக்­கி­றது. எனவே, தாம­திக்­காமல் மருத்­து­வரை நாட வேண்டும். பெண்­களைப் பொறுத்­த­வ­ரையில், சிறு­நீரை அடக்­கு­வதால் உண்­டாகும் நீர்க்­க­டுப்பு மற்றும் கட்­டுப்­பா­டின்றி சிறுநீர் வெளி­யே­றுதல் ஆகியவையே மிகப் பொது­வான பிரச்­சி­னைகள்.

கட்­டுப்­பா­டின்றி சிறுநீர் வெளி­யே­று­வதில் இரண்டு வகைகள் உள்­ளன. ஒன்று, சிறுநீர் கழிக்கும் உணர்வு தோன்றி, கழி­வ­றைக்குப் போவ­தற்கு முன் சிறுநீர் கழித்­து­விடு­வது. இதற்கு, சிறுநீர் கழிக்கும் உணர்வு தோன்­றி­யதும் அதை எப்­படிக் கட்­டுப்­படுத்­து­வது என்­ப­தற்­கான சில பயிற்­சிகள் மூலம் இதைச் சரி­செய்­து­வி­டலாம். மற்­றொன்று, இருமல், தும்மல், பல­மாகச் சிரித்

தல் போன்ற, அடி­வ­யிற்­றுக்கு அழுத்தம் தரக்

கூடிய செயல்­க­ளின்­போது சிறுநீர் கசிந்து விடு­வது. சிறு­நீர்ப்பை வாய் பல­மி­ழந்து போவ­தாலேயே இந்த நிலைக்கு ஆளா­கி­றார்கள். பெண்கள் பலரும் இதை வெளியே சொல்லக் கூச்­சப்­பட்டு, பல வரு­டங்­க­ளாக, பொது நிகழ்ச்­சி­களில் பங்­கு

பற்­றாமல் வீட்­டிற்­குள்­ளேயே முடங்­கிக்கொள் கிறார்கள்.சிறு­நீர்ப்பை வாய் அருகில் ஒரு ‘டேப்’பை ஒட்டி விடு­வதன் மூலம் இதனை எளி­தாக குணப்­ப­டுத்­தி­விட இயலும். தற்போது பல குழந்­தை­களும் பிறக்கும் போதே சிறு

நீ­ரகக் குறை­பா­டு­க­ளுடன் - முக்­கி­ய­மாக, சிறு

நீர்ப் பாதையில் தடை­க­ளுடன் பிறக்­கி­றார்கள். இதை Congenital Pelvi Ureteric Junction Obstruction என்போம். இதை, கர்ப்­பத்தில் குழந்தை இருக்­கும்­போதே கண்டு பிடித்­து­வி­டலாம்.

குழந்தை பிறந்­ததும் அடைப்பை அடை யாளம் கண்டு சிகிச்சை அளிக்­கலாம். இது­போ­லவே, சிறு­நீ­ரா­னது சிறுநீர்ப் பையில் இருந்து சிறுநீர் தாரைக்கு இறங்­காமல், மேல் பகு­தி­க­ளுக்கு ஏறு­வதும் குழந்­தை­க­ளுக்கு உண்டாகக்­கூ­டிய ஒரு பிரச்­சி­னைதான்.

அதேபோல் ஒரு குழந்தை உடல் பருமன், சிறுநீரக கோளாறு, இதய கோளாறு, தூக்கத்தின்போதான சுவாசப் பிரச்சினை உள்ளிட்ட சில பிரச்சினைகளால் பாதிக் கப்பட்டால் முதலில் நாங்கள் அந்த குழந்தைகளின் இரத்த அழுத்தத்தை பரி சோதிப்போம். ஏனெனில் குழந்தைகளுக்கு உயர் ரத்த அழுத்தப் பிரச்சினை இருக்கிற தென்றால், அதற்கு சிறுநீரகம் தொடர்பான பிரச் சினை இருப்பதற்கு வாய்ப்புகள் அதிகம்.

இதுபோன்ற பெரும்பாலான பிரச்சி னைகளுக்கு தற்போது எண்டாஸ்கோப்பி சிகிச்சை மூலம் தீர்வுகாண முடியும்.

மேலும் சந்தேகங்களுக்கு தொடர்பு கொள்ள வேண்டிய அலைபேசி எண் 0091-7373099414 மற்றும் மின்னஞ்சல் முகவரி rmsathish@gmail.com

சந்திப்பு: பரத் தொகுப்பு: புகழ்