வைரஸ் தொற்று! 175 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி ; ஸ்ரீபாத கல்வியியல் கல்லூரியின் கல்வி நடவடிக்கைகள் இடை நிறுத்தம் !

Published By: Daya

30 Jan, 2020 | 01:05 PM
image

பத்தனை ஸ்ரீபாத கல்வியியல் கல்லூரியில் பயிலும் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் திடீரென வைரஸ் தொற்றுக்கு இலக்காகி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

 பத்தனை ஸ்ரீபாத கல்வியியல் கல்லூரியில் பயிலும் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் திடீரென வைரஸ் தொற்றுக்கு இலக்காகி நோய்வாய்ப்பட்டுள்ளனர். இதனால் ஸ்ரீபாத கல்வியல் கல்லூரியின் கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் 3ஆம் திகதி வரை இடை நிறுத்தப்பட்டுள்ளன.

நேற்று சுமார் 100 பேர் , இன்று 75 பேரும் இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும், குறித்த நோயாளிகளுக்கு கொட்ட கலை, டிக்கோயா கிளங்கள் ஆகிய வைத்தியசாலைகளில் சிகிச்சையளிக்கப்பட்டு வருகின்றது என வைத்திய அதிகாரியொருவர் தெரிவித்தார்.

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட மாணவர்கள் சிலருக்கு நிமோனியா காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் மேற்படி மாணவர்கள் எவ்வகையான வைரஸ் தொற்றுக்கு இலக்காகியுள்ளனர் என்பதைக் கண்டறிவதற்காக இரத்த, சிறுநீர் மாதிரிகள் பேராதனை, கண்டி வைத்தியசாலைகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.

ஸ்ரீபாத கல்வியல் கல்லூரியில் முதலாம் ஆண்டில் கல்வி பயிலும் மாணவர்கள் (29.01.2020 அன்று) திடீரென நோய் வாய்ப்பட்டுள்ளனர். இவர்களைப் பரிசோதித்த பின்னர் ஒருவகையான வைரஸ் தொற்றுக்கு இலக்காகியுள்ளனர் எனக் கண்டறியப்பட்டுள்ளது.

இத்தொடர்பில் கொட்டகலை வைத்தியசாலைக்கு அறிவிக்கப்பட்ட பின்னர், இன்று காலை கொட்டகலை சுகாதார வைத்திய அதிகாரியும், சுகாதார பரிசோதகரும் அங்குச் சென்றனர். இதன்போது மேலும் 75 மாணவர்களுக்கு நோய் அறிகுறிகள் தென்பட, அவர்கள் அனைவரையும் வைத்தியசாலையில் அனுமதிக்குமாறு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டது.

இதன்படி மாணவர்களை கொட்டகலை, கிளங்கள் வைத்தியசாலைகளில் சிகிச்சைக்காக அனுமதிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வைத்தியசாலைகளில் நேற்று அனுமதிக்கப்பட்ட மாணவர்களுள் பெரும்பாலானோர் சிகிச்சைகளின் பின்னர் வீடு திரும்பியுள்ளனர் என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

அதேவேளை, ஸ்ரீபாத கல்வியல் கல்லூரியின் கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் 3ஆம் திகதி வரை இடைநிறுத்தப்பட்டுள் ளன. கல்லூரி வளாகம் முழுமையாக பரிசோதனைக்குட்படுத்தப்படவுள்ளது.

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46