19 குறித்து அரசாங்கத்தின் உள்நோக்கத்தை புரிந்துக்கொள்ள முடியாதளவிற்கு மக்கள் முட்டாள்களில்லை  - அசோக அபேசிங்க 

Published By: R. Kalaichelvan

29 Jan, 2020 | 07:02 PM
image

(நா.தனுஜா)

நாட்டு மக்களின் நலனை முன்நிறுத்திய செயற்திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை அவசியமில்லை.

உண்மையில் அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தத்தை மாற்றியமைத்து மீண்டும் ஆட்சியதிகாரத்தை தனியொரு குடும்பத்தின்வசம் தக்கவைத்துக் கொள்வதற்காகவே அரசாங்கம் மூன்றில் இரண்டு பெரும்பான்மையைக் கோருகிறது.

ஆனால் இதனைக்கூடப் புரிந்துகொள்ள முடியாதளவிற்கு மக்கள் முட்டாள்களாக இருக்கமாட்டார்கள் என்று பாராளுமன்ற உறுப்பினர் அசோக அபேசிங்க தெரிவித்தார்.

தற்போது சவாலாக மாறியிருக்கும் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து நாட்டுமக்களைப் பாதுகாப்பதற்கு கட்சிபேதங்களைக் கடந்து நாமனைவரும் ஒன்றிணைந்து செயலாற்ற வேண்டும். ஆனால் இந்நிலை தொடர்பில் அரசாங்கம் இன்னமும் விரிவான அடிப்படைகளில் சிந்திக்கவில்லை என்பது புலனாகின்றது.

 ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என்ற பேதங்களின்றி தற்போது ஒருமித்து செயற்பட வேண்டும் என்பதாலேயே விரைவாகப் பாராளுமன்றம் கூட்டப்பட வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ வலியுறுத்தியிருந்தார்.

அதனூடாக கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கு ஏனைய அரசியல்கட்சிகள் தமது ஒத்துழைப்பை வழங்குவதற்கான வாய்ப்பு ஏற்படும்.

அதேபோன்று வைரஸ் தொற்று ஏற்படுவதைத் தடுக்கும் விதமாக விமானநிலையத்தில் மேற்கொள்ளப்பட்டிருக்கும் முன்பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பில் ஆராய்ந்து பார்த்தேன்.

ஆனால் அரசாங்கம் போதிய முன்னாயத்தங்களை மேற்கொண்டிருப்பதாகத் தெரியவில்லை. இருப்பினும் சீனாவிலிருந்து இலங்கைக்கு வரும் விமானங்கள் பிரத்யேக இடமொன்றில் தரையிறக்கப்பட்டு, பயணிகள் அனைவரும் பஸ் ஒன்றின் ஊடாகக் கொண்டு செல்லப்பட்டு, விசேட பிரிவொன்றில் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுகின்றார்கள்.

இந்நிலையில் அவ்வாறு வெளியேறும் பயணிகள் நடமாடும் இடங்கள் தொடர்பான தகவல்கள் அடங்கிய அறிக்கையொன்றைப் பேணுவது மிகவும் பயனுடையதாக அமையும் என்று அரசாங்கத்திற்குப் பரிந்துரை செய்கின்றோம்.

அதனூடாக கொரோனா வைரஸ் பரவுவதையும், விமானநிலையத்திலிருந்து வெளியேறிய பயணிகளில் எவருக்கேனும் நோய்த்தொற்று காணப்படுமாயின் அவர்களைக் கண்டறிவதற்கும் இலகுவாக இருக்கும்.

அடுத்ததாக புதிய அரசாங்கம் ஆட்சிப்பொறுப்பேற்று சுமார் 2 மாதங்கள் கடந்திருக்கின்றன. எனினும் புதிய அரசாங்கத்தைத் தெரிவு செய்தவர்களின் எதிர்பார்ப்புக்கள் நிறைவேற்றப்படாத நிலையொன்று தற்போது ஏற்பட்டிருக்கிறது.

தேர்தலின் போது வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றாதது மாத்திரமல்ல, எமது அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட சிறந்த திட்டங்களையும் தற்போதைய அரசாங்கம் இடைநிறுத்தி வருகின்றது என அவர் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தண்டனைச்சட்டக்கோவையின் 363, 364 ஆம் பிரிவுகளைத்...

2024-03-29 19:35:09
news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13