மட்டக்களப்பில் 200க்கும் மேற்பட்டோர் டெங்கினால் பாதிப்பு

Published By: Daya

29 Jan, 2020 | 04:54 PM
image

மட்டக்களப்பு மாவட்டத்தில் டெங்கு நுளம்புகளின் தாக்கம் அதிகரித்து வருவதாக மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவிற்குப் பொறுப்பான வைத்தியர் வி.குணராஜசேகரம் தெரிவித்துள்ளார்.

இந்த ஆண்டு  ஜனவரி 18ஆம் திகதி முதல் 2020 ஜனவரி 24ஆம் திகதி வரையும் 201 பேர் மட்டக்களப்பு மாவட்டத்தில் டெங்கு நோய் தாக்கத்திற்குள்ளாகியுள்ளனர்.

குறித்த நோயாளர்கள் அனைவரும் சிகிச்சை பெற்று வீடு சென்றுள்ளனர் என அவர் தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பாக மேலும் அவர் கூறுகையில், 

இந்த வாரம் டெங்கு தாக்கத்தினால் மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 38 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளார்கள்.

மேலும்,  ஆரையம்பதியில் 35, களுவாஞ்சிகுடியில் 21, வாழைச்சேனையில்16, செங்கலடியில் 22, காத்தான்குடியில் 14, ஏறாவூரில் 05, வெல்லாவெளியில் 04, வவுணதீவில் 06, பட்டிப்பளையில் 06, ஓட்டமாவடியில் 10, கோறளைப்பற்று மத்தியில் 18, கிரானில் 06 பேர் டெங்கு நோய் தாக்கத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

இதேவேளை களுவாஞ்சிகுடி பிரதேசத்தில்  ஒருவர் உயிரிழந்துள்ளார். மொத்தமாகக் கடந்த வாரம் 201 பேர் மட்டக்களப்பு மாவட்டத்தில் டெங்குத் தொற்றுக்குள்ளாகி சிகிச்சை பெற்று வீடு சென்றுள்ளனர்.

எனவே மட்டக்களப்பு மக்கள் சற்று விழிப்புடன் செயற்பட்டு வீடுகளில் தேங்கிக் கிடக்கின்ற குப்பைகள் நீர் தங்கியுள்ள இடங்கள் போன்றவற்றை அகற்றி டெங்கு நுளம்புகள் பெறுவதற்கு இடம் கொடுக்காத வகையில் துப்பரவாக வைத்துக் கொள்ளுமாறு வைத்திய கலாநிதி வே.குணராஜசேகரம் கோரிக்கை விடுத்துள்ளார் 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

லொறி - கெப் மோதி விபத்து...

2024-04-18 13:30:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-18 12:44:55
news-image

யாழ். பல்கலைக்கழக பொன்விழா ஆண்டில் முதலாவது...

2024-04-18 13:20:49
news-image

கைதிக்குச் சூட்சுமமான முறையில் போதைப்பொருள் கொண்டு...

2024-04-18 13:26:03
news-image

சுற்றுச் சூழல் பாதிப்புக்களை தெரிவிக்க தொலைபேசி...

2024-04-18 13:32:52
news-image

உக்ரைன் போருக்கு இலங்கையர்களை அனுப்பிய ஓய்வு...

2024-04-18 12:23:02
news-image

தேர்தல்களை பிற்போடுவதை கடுமையாக எதிர்ப்போம் -...

2024-04-18 11:52:31
news-image

கடலில் குழந்தை பிரசவித்த நயினாதீவு பெண்

2024-04-18 11:40:05
news-image

மைத்திரிபால சிறிசேனவிற்கு தடை உத்தரவு நீடிப்பு!

2024-04-18 12:12:09
news-image

14 வாரங்களில் 7 இலட்சம் சுற்றுலாப்...

2024-04-18 11:56:42
news-image

யாழ்.கட்டைக்காட்டில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட படகு...

2024-04-18 12:40:37
news-image

மதுபோதையிலிருந்த நபரால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-04-18 11:11:00