பொய்களை கூறி காலத்தை கடத்தும் புதிய அரசாங்கம் - அஸாத் சாலி

29 Jan, 2020 | 02:49 PM
image

(எம்.ஆர்.எம்.வஸீம்)

அர­சாங்கம் மக்­க­ளுக்கு அளித்த வாக்­கு­று­தி­களை நிறை­வேற்ற இது­வரை எந்த பிரே­ர­ணை­யையும் பாரா­ளு­மன்­றத்தில் சமர்ப்­பிக்­க­வில்லை. மார்ச் மாதம் வரைக்கும் பொய்­களை தெரி­வித்து காலத்தை கடத்­து­வதே அர­சாங்­கத்தின் திட்­ட­மாகும் என தேசிய ஐக்­கிய முன்­ன­ணியின் தலைவர் அஸாத் சாலி தெரி­வித்தார்.

தேசிய ஐக்­கிய முன்­னணி நேற்று கொழும்பில் நடத்­திய செய்­தி­யாளர் சந்­திப்பில் கலந்­து­கொண்டு கருத்து தெரி­விக்­கை­யி­லேயே இவ்­வாறு குறிப்­பிட்டார்.

அவர் மேலும் கூறு­கையில்,

அர­சாங்கம் ஆட்­சிக்கு வந்த நாள்முதல் பல்­வேறு வைரஸ் தாக்­கத்­துக்கு ஆளாகி, மக்­க­ளுக்கு அளித்த வாக்­கு­று­தி­களை நிறை­வேற்­றாமல் காலத்தை கடத்­தி­வ­ரு­வதை காண்­கின்றோம். ஆரம்­ப­மாக ரஞ்சன் ராம­நா­யக்­கவின் குரல் பதிவு வைரஸில் சிக்­குண்டு ஒரு மாத­கா­லத்தை கடத்தியிருந்­தது. அதன் பின்னர் பிணை­முறி மோசடி தொடர்­பான தட­ய­வியல் கணக்­க­றிக்­கையை பிடித்­துக்­கொண்டு செயற்­பட்­டது. தற்­போது கொரோனா வைரஸை காரணம் காட்டி செயற்­பட்­டு­ வ­ரு­கின்­றது.

குறிப்­பாக அர­சாங்கம் ஆட்­சிக்கு வரும்­போது மக்­க­ளுக்கு நிவா­ரணம் வழங்­கு­வ­தாக பல்­வேறு வாக்­கு­று­தி­களை வழங்கியிருந்­தது. அந்த வாக்­கு­று­தி­களை நிறை­வேற்ற இது­வரை ஒரு பிரே­ர­ணை­யா­வது பாரா­ளு­மன்­றத்­தில் சமர்ப்­பிக்­க­வில்லை. ஆனால் மக்­க­ளுக்கு தேவை­யான வேலைத்­திட்­டங்­களை மேற்­கொள்ள தேவை­யான சட்ட திட்­டங்­களை அங்­கீக­ரித்­துக்­கொள்ள அர­சாங்­கத்­துக்கு  பெரும்­பான்மையில்லை. அவ்­வாறு சட்­ட­மூலம் கொண்­டு­வந்து அது பாரா­ளு­மன்­றத்தில் தோற்­க­டிக்­கப்­பட்டால் அது அர­சாங்­கத்­துக்கு நல்­ல­தல்ல. அதனால் தேர்­தலில் அர­சாங்­கத்­துக்கு மூன்றில் இரண்டு பெரும்­பான்­மையை வழங்­க­வேண்டும் என பிர­தமர் மஹிந்த ராஜபக் ஷ தெரி­விக்­கின்றார்.

மக்­க­ளுக்கு நிவா­ரணம் வழங்­கு­வ­தற்கு தேவை­யான பிரே­ர­ணையை பாரா­ளு­மன்­றத்­தில் சமர்ப்­பித்து, அது தோற்­க­டிக்­கப்­பட்டால் பிர­தமர் மஹிந்த ராஜ­பக் ஷவின் கூற்று நியா­ய­மாகும். அத்­துடன் அவ்­வாறு தோற்­க­டிக்­கப்­பட்டால் அந்த விட­யத்தை முன்­னி­லைப்­ப­டுத்­தியே அர­சாங்­கத்­துக்கு பொதுத்தேர்­தலில் பாரிய பிர­சா­ரத்தை கொண்­டு­சென்று பெரும்­பான்மை வாக்­கு­களை பெற்­றுக்­கொள்­ளவும் முடியும். ஆனால் மக்­க­ளுக்கு நிவா­ரணம் வழங்­கு­வ­தற்கு அர­சாங்­கத்­திடம் எந்த வேலைத்­திட்­டமும் இல்லை. மார்ச் மாதம்­வரை அர­சாங்கம் எந்த வாக்­கு­று­தி­யையும் நிறைவேற்­றப் ­போ­வ­தில்லை. அத­னால் தான் பெரும்­பான்மை இல்லை என்ற பொய்க்குற்­றச்­சாட்டை தெரி­வித்­து­ வ­ரு­கின்­றது.

2015 இல் நல்­லாட்சி அர­சாங்கம் ஆட்­சிக்கு வரும்­போது மக்­க­ளுக்கு வாக்­கு­று­தி­ய­ளித்து நிவா­ர­ணங்­களைப் பெற்­றுக்­கொ­டுக்க அன்று நட­வ­டிக்கை எடுத்­தது. அப்­போது அர­சாங்­கத்­துக்கு பாரா­ளு­மன்­றத்தில் 42 பேர்   இருந்­தனர். இருந்­த­போதும் மக்­க­ளுக்கு தேவை­யான நிவா­ர­ணங்­களை பெற்­றுக்­கொ­டுக்க அன்று எதிர்க்­கட்­சியிலிருந்த மஹிந்த ராஜபக்்ஷ உட்­பட எதிர்க்­கட்சி அர­சாங்­கத்­துக்கு ஆத­ர­வ­ளித்­தது. அதே­போன்று மக்­க­ளுக்கு நன்­மை­ய­ளிக்கும் அர­சாங்­கத்தின் அனைத்து பிரே­ர­ணை­க­ளுக்கும் ஆத­ர­வ­ளிப்­ப­தாக ஐக்­கிய தேசியக் கட்சி பகி­ரங்­க­மாக தெரி­வித்­தி­ருக்­கின்­றது.

இவ்­வா­றான நிலையில் அர­சாங்கம் பொதுத் ­தேர்­தலில்  மூன்றில் இரண்டு பெரும்பான்­மையை பெற்றுக்கொள்ளவே காய்களை நகர்த்திவருகிறது. மூன்றில் இரண்டு பெரும்பான்­மையை பெற்­றுக்­கொண்டால் சர்வா­தி­கார ஆட்­சியே நாட்டில் இடம்பெறும். 2015க்கு முன்னர் இடம்­பெற்ற அடக்­கு­முறை ஆட்­சியை தொடர்ந்தும் மேற்­கொள்­ளவே அர­சாங்கம் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை கோருகின்றது.

அரசாங்கம் சிங்கள மக்களுக்கு பொய்க்குற்றச்சாட்டுக்களை தெரிவித்தும் இனவாத கருத்துக்களை பரப்பியுமே ஆட்சிக்கு வந்தது என்பதை தற்போது சிங்கள மக்கள் உணர்ந்து வருகின்றனர். ஏனெனில் அரசாங்கம் தேர்தலுக்கு முன்னர் முஸ்லிம் மக்களுக்கு எதிராக தெரிவித்த எந்தக் குற்றச்சாட்டையும் இதுவரை உறுதிப் படுத்தவில்லை என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34
news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51
news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30