ஒரு போதும் குறுக்குவழிகளை நாடவேண்டாம் - சச்சின் இளைஞர்களிற்கு அறிவுரை

29 Jan, 2020 | 12:29 PM
image

ஒருபோதும் குறுக்கு வழிகளை நாடாதீர்கள் ஏமாற்றாதீர்கள் என  சச்சின் டெண்டுல்கர்  இளைஞர்களிற்கு அறிவுரை வழங்கியுள்ளார்.

உலகின் முன் அம்பலப்படுவதை தவிர்க்கவேண்டும் என்றால் வாழ்க்கையில் இளைஞர்கள் குறுக்கு வழிகளை நாடுவதை தவிர்க்கவேண்டும் என அவர் அறிவுரை வழங்கியுள்ளார்.

எனது வாழ்க்கையில் நான் பல பாடங்களை கற்றுக்கொண்டுள்ளேன், நான் அதிகம் பேசாது விட்ட விடயம் ஒழுக்கம்,மனதை ஒருமுகப்படுத்துதல்,கவனம், திட்டமிடல், செயற்படுத்துதல் ஆகும் என சச்சின் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார்.

பல தடவைகள் நான் எதிர்பார்த்தது போன்று என்னால் விளையாட முடியாமல் போயுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நானும்  தோற்றிருக்கின்றேன் ஆனால் விளையாட்டும் சரியான அணியும் மீண்டும் எழுவதற்கும் ஏமாற்றாமல் இருப்பதற்கும்  எனக்கு கற்றுக்கொடுத்தது என  சச்சின் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார்.

பல சவால்கள் எழக்கூடும் ஆனால் ஏமாற்றவேண்டாம் ஏமாற்றினால் ஒரு நாள் உலகின் முன் அம்பலப்படுவீர்கள் என அவர் தெரிவித்துள்ளார்.

ஆரோக்கியமான உடற் தகுதி மிக்க இந்தியா குறித்த தனது விருப்பத்தையும் சச்சின் டெண்டுல்கர் வெளியிட்டுள்ளார்.

நாங்கள் ஏதாவது விளையாட்டை விளையாட முயலவேண்டும், பழகிக்கொள்ளவேண்டும் என குறிப்பிட்டுள்ள சச்சின் டெண்டுல்கர் அது சுவாரஸ்யமானதாக விளங்கும் என தெரிவித்துள்ளார்.

இந்தியாவை விளையாட்டை நேசிக்கும் நாட்டிலிருந்து விளையாட்டில் ஈடுபடும் நாடாக மாற்றுவதே எனது கனவு எனவும் அவர்தெரிவித்துள்ளார்.

இது சிறந்தஉடல் குறித்த விடயம் எனவும் குறிப்பிட்டுள்ள சச்சின் டெண்டுல்கர் சிறந்த உடல் நலத்தை பேணவேண்டும் புதிய வாழ்க்கை முறையை வாழவேண்டும்எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

19 வயதின் கீழ் ஆஸி. அணியை...

2024-03-28 20:03:31
news-image

இலங்கை கால்பந்தாட்ட அணி, ஜனாதிபதியை சந்தித்தது

2024-03-28 17:49:42
news-image

எஸ்.எஸ்.சி.யின் 125 வருட கொண்டாட்ட விழா...

2024-03-28 13:22:56
news-image

பங்களாதேஷுடனான 2ஆவது டெஸ்ட்: உபாதைக்குள்ளான ராஜித்தவுக்குப்...

2024-03-28 13:22:16
news-image

19இன் கீழ் மகளிர் மும்முனை கிரிக்கெட்...

2024-03-28 00:56:33
news-image

சாதனைகள் படைக்கப்பட்ட ஐபிஎல் போட்டியில் மும்பையை...

2024-03-28 00:04:56
news-image

சில்ஹெட் டெஸ்டில் தலா 2 சதங்கள்...

2024-03-27 22:22:22
news-image

இலங்கையில் மகளிர் ரி20 ஆசிய கிண்ண...

2024-03-27 22:09:33
news-image

குஜராத்தை வீழ்த்தி இரண்டாவது நேரடி வெற்றியை...

2024-03-27 01:34:06
news-image

ஐ.பி.எல் 2024 : குஜராத் டைட்டன்ஸ்...

2024-03-26 23:43:35
news-image

ஸ்ரீ லயன்ஸ் அழைப்பு வலைபந்தாட்டப் போட்டியில்...

2024-03-26 19:25:58
news-image

பூட்டானை வீழ்த்தியது இலங்கை : கால்பந்தாட்டத்திலிருந்து...

2024-03-26 16:48:31