காது கேளாமைக்குரிய நவீன சத்திரசிகிச்சை

Published By: Daya

29 Jan, 2020 | 12:00 PM
image

பிறக்கும் போதே கேட்கும் திறன் இல்லாமல் பிறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. இந்தகுறைபாட்டையை சீராக்க “காக்ளியர் இம்பிளான்ட்”  என்ற சத்திரசிகிச்சை தற்போது நடைமுறையில் இருந்து வருகிறது.

 தற்போது Auditory Brainstem Implant (ஒடிட்டரி பிரைன்ஸ்டம் இம்ப்ளான்ட்) என்ற நவீன சத்திரசிகிச்சை அறிமுகமாகி இருக்கிறது.

இதுகுறித்து நரம்பியல் வைத்தியர் நிபுணர் வாசுதேவன் தெரிவிக்கையில்,

“ செவித்திறனற்ற குழந்தைகளுக்கு “காக்ளியர் இம்பிளான்ட்” எனப்படும் சத்திரசிகிச்சை செய்து, கேட்கும் திறனை மீட்டெடுத்து வரப்படுவரை அனைவரும் அறிந்திருப்பார்கள். இதன்போது குழந்தைகளின் காதின் உட் பகுதியில்= காக்ளியர் பகுதியில் இருக்கும் நரம்புகள் முழுமையான வளர்ச்சி அடையாமல் இருக்கும். இதனை தூண்டுவதன் மூலம் குழந்தைகளுக்கு கேட்கும் திறனை ஏற்படுத்துவார்கள். 

ஆனால் பிறக்கும்போதே சில குழந்தைகளுக்கு காக்ளியர் பகுதியில் நரம்புகள் இல்லாமல் பிறப்பார்கள். அவர்களுக்கு “காக்ளியர் இம்ப்ளாண்ட்” சத்திர சிகிச்சை பலனளிப்பதில்லை. இவர்களுக்காக தற்போது Auditory Brainstem Implant என்ற சத்திரசிகிச்சை அறிமுகமாகியிருக்கிறது.

இதன்போது குழந்தைகளின் மூளையில் உள்ள ஹியரிங் நியூக்ளியஸ் என்ற பகுதியில் குறைந்த திறன் கொண்ட மின்காந்த அலைகளை செலுத்தக்கூடிய கருவியை லேப்ராஸ்கோப்பி எனப்படும் நுண்துளை சத்திரசிகிச்சை மூலம் பொருத்துவார்கள். 

அதன் பிறகு அந்த கருவியை தூண்டி சப்தம் எழ செய்து, அதன் மூலமாக அந்தக் குழந்தைக்கு கேட்கும் திறனை உருவாக்குவார்கள். தொடர் பயிற்சி மற்றும் பேச்சு பயிற்சி மூலம் அந்த குழந்தையின் கேட்கும் திறன் மற்றும் பேசும் திறனை வளர்த்தெடுக்க முடியும்.” என்றார்.

குறித்த சத்திரசிகிச்சை ஆசியாவிலேயே முதன்முறையாக சென்னையில் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது என்பதும், இதற்கு காது மூக்கு தொண்டை பகுதிகளுக்கான சத்திரசிகிச்சை நிபுணர் மற்றும் நரம்பியல் வைத்திய நிபுணர் ஆகிய இருவரும் இணைந்து சத்திரசிகிச்சையை மேற் கொள்வார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஹண்டிங்டன்ஸ் நோய் பாதிப்பிற்குரிய நவீன சிகிச்சை

2024-03-26 16:32:47
news-image

இடியோபதிக் பல்மனோரி ஃபைப்ரோசிஸ் எனும் நுரையீரல்...

2024-03-24 21:02:07
news-image

அர்த்ரால்ஜியா எனும் மூட்டு வலி பாதிப்பிற்குரிய...

2024-03-20 21:20:55
news-image

செபோர்ஹெக் கெரடோசிஸ் எனும் தோல் பாதிப்பிற்குரிய...

2024-03-20 09:17:28
news-image

குரல்வளை வீக்கம் : நவீன சிகிச்சை

2024-03-18 18:23:28
news-image

ஆர்டியோஸ்கிளிரோஸிஸ் ரெட்டினோபதி எனும் விழித்திரை பாதிப்பிற்குரிய...

2024-03-16 14:38:19
news-image

உள்காது பாதிப்புகளை கண்டறிவதற்கான நவீன பரிசோதனைகள்

2024-03-15 18:16:00
news-image

பெருங்குடல் வீக்கமும் நவீன சிகிச்சையும் 

2024-03-14 16:20:48
news-image

சிறுநீரக ஆரோக்கியம், அதன் பாதுகாப்பை உறுதிப்படுத்துவோம்!...

2024-03-14 15:59:51
news-image

ஆசனவாய் புற்றுநோய் பாதிப்பிற்கு நிவாரணமளிக்கும் சத்திர...

2024-03-13 22:50:05
news-image

மயோகார்டிடிஸ் எனும் இதய தசையில் ஏற்படும்...

2024-03-08 17:40:06
news-image

நான் ஆல்கஹாலிக் ஃபேட்டி லிவர் எனும்...

2024-03-07 13:48:04