வெல்லவாய அலுத்வெல பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் 22 வயதான இளைஞர் ஒருவர் படுகாயம் அடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

படுகாயமடைந்த இளைஞன் எம்பிலிப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த துப்பாக்கி பிரயோகமானது தனிப்பட்ட தகராறு காரணமாக மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

துப்பாக்கி பிரயோகத்துடன் தொடர்புடையவரென சந்தேகிக்கப்படும் 27 வயதான நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளதுடன், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.