ஜனாதிபதி பாதுகாப்பு அமைச்சை தம்வசம் வைத்திருக்க முடியுமா?

Published By: J.G.Stephan

28 Jan, 2020 | 03:13 PM
image

புதிய அர­சாங்­கத்தில் பாது­காப்பு அமைச்­ச­ராக இது­வரை யாரும் நிய­மிக்­கப்­ப­ட­வில்லை. அதே­நேரம் 19ஆவது திருத்­தத்­தின் கீழ் ஜனா­தி­பதி எந்­த­வொரு அமைச்­சையும் வைத்­தி­ருக்­க­மு­டி­யாது என்­றொரு கருத்து நில­வு­கி­றது. இந்­நி­லையில் பாது­காப்பு அமைச்­ச­ராக யாரையும் நியா­மிக்­கா­தது எதிர்க்­கட்­சி­யி­னரால் கேள்­விக்­குட்­படுத்­தப்­ப­டு­கின்­றது.



இது தொடர்­பான சட்­ட­நி­லைப்­பாடு என்ன?

ஜனா­தி­பதி எந்த அமைச்­சையும் வைத்­தி­ருக்க முடி­யாது என்­ப­வர்­களின் வாதம்:

(19இற்கு முன்னும் பின்னும்) ஒரு பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரைத்தான் ஓர் அமைச்­ச­ராக நிய­மிக்­க­மு­டியும். (சரத்து 44(1)(b) 19 இற்கு முன். 43(2) -19 இற்­குப்பின்)

ஜனா­தி­பதி ஒரு பாரா­ளு­மன்ற உறுப்­பினர் இல்லை. எனவே, அவர் எந்­த­வொரு அமைச்­சையும் வைத்­தி­ருக்க முடி­யாது.  19இற்கு முன் அர­சி­ய­ல­மைப்பு சரத்து 44(2) இனூ­டாக ஜனா­தி­ப­திக்கு ஒரு விதி­வி­லக்கு அளிக்­கப்­பட்­டி­ருந்­தது. அதன்­ பி­ரகாரம்;

அவர் ஒரு பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ராக இல்­லா­த­போதும் அவர் (1) தனக்கு வேண்­டிய விட­ய­தா­னங்­களை அவர் வைத்­தி­ருக்­கலாம். (2) அதே­நேரம் எந்­த­வொரு அமைச்­ச­ருக்கும் ஒதுக்­கப்­ப­டாத  விட­ய­தா­னங்­க­ளும் அவ­ரின்­ கீ­ழேயே இருக்கும். இந்த இரு­வ­கை­யான விட­ய­தா­னங்­களுக்­கு­ரிய அமைச்­சுக்­களின் எண்­ணிக்­கை­யையும் அவர் தீர்­மா­னிக்­கலாம். 

சுருங்­கக்­கூறின் தனக்கு வேண்­டிய அமைச்­சுக்­க­ளையும் யாருக்கும் வழங்­காத அமைச்­சுக்­க­ளையும் அவர் வைத்­தி­ருக்­கலாம். இந்த சரத்து 19இன் மூலம் நீக்­கப்­பட்­டு­விட்­டது. எனவே, அந்த விதி­வி­லக்கு தற்­போது இல்லை.

19ஆவது திருத்­தத்தில் அதற்குப் பதி­லாக முன்னாள் ஜனா­தி­ப­திக்கு (மைத்திரி) மட்டும் மூன்று அமைச்­சுக்­களை வைத்­தி­ருக்க சலுகை வழங்­கப்­பட்­டது. (S.51) அவை பாது­காப்பு, மகா­வலி அபி­வி­ருத்தி மற்றும் சுற்­றா­ட­லாகும். தற்­போ­தைய ஜனா­தி­ப­திக்கு அந்த சலு­கையும் இல்லை.

எனவே, ஜனா­தி­பதி ஒரு பாரா­ளு­மன்ற உறுப்­பி­னரும் இல்லை. முன்­னைய ஜனா­தி­ப­தி­க­ளுக்­கி­ருந்த விதி­வி­லக்கும் இல்லை. எனவே, ஜனா­தி­பதி எந்­த­வொரு அமைச்­சையும் வைத்­தி­ருக்க முடி­யாது. பாது­காப்பு அமைச்சு ஏன் இன்னும் ஒரு­வ­ருக்கும் வழங்­கப்­ப­ட­வில்லை எனக் கேள்வி எழுப்­பு­கி­றார்கள்.

இங்கு கவ­னிக்­க­வேண்­டிய ஒரு­வி­டயம், ஜனா­தி­பதி ஒரு அமைச்சை தன்­ன­கத்தே வைத்­தி­ருக்­கும்­போது அவ்­வ­மைச்­சிற்­கு­ரிய அமைச்சர் என்ற கருத்தைப் பலர் கொண்­டி­ருக்­கி­றார்கள். பொது­வாக ஊட­கங்­க­ளிலும் நடை­மு­றை­யிலும் அவ்­வாறே அழைப்­ப­துண்டு. அந்த எண்­ணமும் இந்த குழப்­பத்­திற்கு ஒரு கார­ண­மாகும். ஆனாலும் சட்­டத்தின் பார்­வையில் அவர் அமைச்சை வைத்­தி­ருந்­தாலும் அமைச்­ச­ரல்ல. அவர் ஜனா­தி­பதி மாத்­தி­ரம்தான். 

எனவே, ஒருவர் அமைச்­ச­ராக இருப்­ப­தற்கு பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ராக இருக்­க­வேண்­டு­மென்­பது சரி­யாகும். ஆனால் ஜனா­தி­பதி ஒரு போதும் அமைச்­ச­ராக இருந்­த­தில்லை.

ஜனா­தி­பதி அமைச்­ச­ரில்லை என்­பதை இன்­னு­மொரு சரத்து உறு­திப்­ப­டுத்­து­கின்­றது. அதா­வது சரத்து 42(3) [19 இற்கு முன் 43(2)] இன் பிர­காரம் ஜனா­தி­பதி அமைச்­ச­ர­வையின் அங்­கத்­த­வரும் தலை­வ­ரு­மாவார்.

இங்கு கவ­னிக்க வேண்­டி­யது “ அங்­கத்­தவர்” என்ற சொல். ஜனா­தி­பதி அமைச்­ச­ராக இருந்­தி­ருந்தால் “அங்­கத்­தவர்” என்ற சொல் அவ­சி­ய­மில்லை. ஏனெனில் அமைச்­சர்கள் எல்­லோரும் அமைச்­ச­ர­வையின் அங்­கத்­த­வர்­கள்தான். பிர­த­மரும் அமைச்­ச­ர­வையின் அங்­கத்­தவர் என்று குறிப்­பி­டப்­ப­ட­வில்லை. ஏனெனில் அவர்தான் பிர­தம அமைச்சர். எனவே அவரும் ஒரு அங்­கத்­தவர்.

அதேபோல் ஜனா­தி­பதி அமைச்­ச­ர­வையின் தலைவர் என்­ற­ மு­றையில் அவரும் அங்­கத்­த­வ­ரா­கத்தான் இருக்­க­வேண்டும். அங்­கத்­தவர் என்று குறிப்­பி­டப்­ப­ட­வேண்­டிய அவ­சி­ய­மில்லை.

ஆனாலும் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது. ஏனெனில், அவர் அமைச்சர் இல்லை என்­ப­தனால் அவர் அமைச்­ச­ர­வையின் அங்­கத்­த­வரா? என்ற கேள்வி, சந்­தேகம் எழக்­கூ­டாது என்­ப­தற்­காக மட்­டு­மல்ல, 19 இற்கு முந்­திய சரத்து 44(2) இல்

 ஜனா­தி­ப­தியின் பொறுப்பில் அவ்­வாறு அமைச்­சுக்கள் இருக்­கும்­போது அர­சி­ய­ல­மைப்­பிலோ அல்­லது ஏதா­வது எழு­திய ஓர் சட்­டத்­திலோ “ அந்த விட­ய­தா­னங்­க­ளுக்குப் பொறுப்­பான அமைச்சர்” எனக்­கு­றிப்­பி­டப்­பட்­டி­ருந்தால் அதனை “ ஜனா­தி­பதி “ என வாசிப்­ப­தோடு அவ்­வாறே பொருள் கொள்­ளவும் வேண்டும்; என்று குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது. இதே­வி­த­மான குறிப்பே 19ஆவது திருத்­தத்தின் S 51 இலும் குறிப்­பி­டப்­பட்­டுள் ­ளது.

எனவே, ஜனா­தி­பதி ஒரு அமைச்சை வைத்­தி­ருந்­தாலும் அவர் அதற்­கு­ரிய அமைச்சர் என்ற சொற்­பதம் பொருந்­தா­து. மாறாக ஜனா­தி­பதி என்ற முறை­யி­லேயே அந்த அமைச்சை அவர் வைத்­தி­ருக்­கின்றார்; என்றே பொருள் கொள்­ள­வேண்டும். 

மேலும் சரத்து 35 ( 19இற்கு முன்) ஜனா­தி­ப­திக்­கெ­தி­ராக, தனிப்­பட்­ட­ரீ­தி­யிலோ, ஜனா­தி­பதி என்ற ரீதி­யிலோ வழக்குத் தொட­ர­மு­டி­யாது. ஆனால் ஜனா­தி­பதி வைத்­தி­ருக்­கின்ற விட­ய­தா­னங்கள் (அமைச்சு) தொடர்­பாக வழக்குத் தொடுக்­கலாம், சட்­ட­மா­அ­தி­பரை பிர­தி­வா­தி­யாக குறிப்­பிட்டு; எனக் குறிப்­பிட்­டி­ருந்­தது.

இங்கும் “ ஜனா­தி­பதி தான் வைத்­தி­ருக்கும் விட­ய­தா­னங்கள்” என்று ‘ ஜனா­தி­பதி' என்ற சொல்தான் பாவிக்­கப்­பட்­டி­ருக்­கின்­றதே தவிர, அவர் அமைச்­ச­ரென்ற முறையில் அவ­ருக்­கெ­தி­ராக வழக்குத் தொடுக்­கலாம்; என்று குறிப்­பி­டப்­பட­வில்லை.

அதே­போன்­றுதான் 19 ஆவது திருத்­தத்­திலும் (சரத்து 35) ஜனா­தி­ப­திக்­கெ­தி­ராக தனிப்­பட்­ட­மு­றையில் வழக்குத் தொட­ர­மு­டி­யாது. உத்­தி­யோக கடமை தொடர்­பாக (official capacity) வழக்குத் தொட­ரலாம்; எனக்­ கு­றிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

இங்கு மிகவும் வலு­வான ஒரு விடயம் என்­ன­வென்றால் ஜனா­தி­ப­தியின் உத்­தி­யோ­க­பூர்வக் கட­மைகள் தொடர்­பாக வழக்குத் தொடுத்தல் எனும்­போது இரு விட­யங்கள் உள்­ள­டக்­கப்­ப­டு­கின்­றன.

ஒன்று: நிறை­வேற்று ஜனா­தி­பதி என்­ற­மு­றையில் அவ­ரது கட­மை­யுடன் தொடர்­பு­பட்­டது. உதா­ர­ண­மாக, முன்­னைய ஜனா­தி­பதி பாரா­ளு­மன்­றத்தைக் கலைத்­த­போது நீதி­மன்றம் சென்­றமை.

இரண்டு: அவ­ருக்­கு கீழ் வரு­கின்ற அமைச்சு தொடர்­பாக நீதி­மன்றம் செல்­வது.இந்த இரண்­டையும் ஜனா­தி­ப­தியின் உத்­தி­யோ­க­பூர்வ கடமை  என்ற பதத்திற்குள்ளேயே உள்ளடக்கப்பட்டி­ருக்கின்றதே தவிர, முதலாவது ஜனாதிபதி என்றமுறையிலும் இரண்டாவது குறித்த விடயங்களுக்குப் பொறுப்பான அமைச்சர் என்ற முறையிலும் என்று குறிப்பிடப்படவில்லை.

எனவே, ஜனாதிபதி அமைச்சுக்களை வைத்திருந்தாலும் அவர் ஜனாதிபதியா கத்தான் அவற்றை வைத்திருக்கிறார். அவ் விடயத்திற்குப் பொறுப்பான அமைச்சராக இல்லை. அதன் பின்னாலுள்ள தத்துவம் அவர் ஒரு பாராளுமன்ற உறுப்பினரல்ல. எனவே, அவர் அமைச்சராக முடியாது. வரலாற்றில் எந்தவொரு ஜனாதிபதியும் அமைச்சராக இருந்ததுமில்லை. 

அமைச்சராக இல்லாமல் அமைச்சை வைத்திருக்க அரசியலமைப்பின் அனுமதி தேவை. அந்த அனுமதி தற்போது இல்லை; என்ற வாதம் சரியா? இது தொடர்பாக நாம் விரிவாக ஆராய வேண்டியுள்ளது.

– இஸ்­லா­மாபாத் நிருபர் 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இந்தியப் பெருங்கடலில் 'சீனா - குவாட்'...

2024-04-18 10:36:33
news-image

'ஆரம்பிக்கலாமா?' : தமிழை கையிலெடுத்துள்ள பிரதமர்...

2024-04-17 19:36:36
news-image

சர்வதேச நீதிமன்றத்தில் ஆர்மேனியா - அஸர்பைஜான்...

2024-04-17 19:37:33
news-image

சிங்களவர்களாக ஒருங்கிணையும் இந்தியத் தமிழர் –...

2024-04-17 18:00:59
news-image

பிரித்தானியாவில் ஆளுங்கட்சி தோல்வி? சொந்த தொகுதியில்...

2024-04-17 11:04:13
news-image

பரந்த கோட்பாடுகளில் இருந்து நடைமுறையில் பிரச்சினைகள்...

2024-04-16 16:00:03
news-image

ஈரானின் அதிரடி தாக்குதல் ; இஸ்ரேல்...

2024-04-16 10:56:59
news-image

ஜனாதிபதி தேர்தலில் அரசியல் கணக்குகள்

2024-04-16 01:48:16
news-image

ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தேசிய கட்சியாக...

2024-04-15 19:01:13
news-image

மறுமலர்ச்சியை ஏற்படுத்த வணிக மறுமலர்ச்சி அலகு

2024-04-15 18:55:41
news-image

ரோஹிங்யா முஸ்லிம்களின் உதவியை நாடும் மியன்மார்...

2024-04-15 18:51:43
news-image

சிறிய அயல் நாடுகளின் சோதனைக் காலம்?

2024-04-15 18:49:22