முன்­னெச்­ச­ரிக்கை நட­வ­டிக்கை தேவை

Published By: J.G.Stephan

28 Jan, 2020 | 03:00 PM
image

சீனாவில் உரு­வான கொரோனா  வைரஸ்  உல­க­நா­டு­களில் பரவி வரு­வ­தனால்  பெரும் அச்­சு­றுத்­த­லான நிலைமை  ஏற்­பட்­டி­ருக்­கின்­றது. இந்த வைரஸ்  தெற்­கா­சி­யாவில்  பல ­நா­டு­க­ளிலும்   பரவி வரு­வ­தனால்  இலங்கை மக்­களை  அவ­தா­னத்­துடன் இருக்­கு­மாறு சுகா­தார அமைச்சு  எச்­ச­ரிக்கை விடுத்­துள்­ளது. காய்ச்சல், இருமல், தடிமல், சுவா­சிப்­பதில் சிரமம்,  இயற்கை கழிவு நீராக  வெளி­யே­றுதல், தலை­வலி,  தொண்­டை­வலி, உடம்­பு­வலி,  மூக்கில் நீர்­வடிதல் போன்­றவை இந்த நோய்க்­கான அறி­கு­றி­க­ளாகும் என்றும்   இத்­த­கைய  அறி­கு­றிகள் தென்­படும் பட்­சத்தில் வைத்­திய பரி­சோதனை செய்­து­கொள்­ளு­மாறு  சுகா­தார  அமைச்சு  அறி­வித்­தி­ருக்­கின்­றது.

கொரோனா வைரஸ் தாக்­கத்­தினால் சீனாவில் இது­வரை 80க்கும் மேற்­பட்டோர் பலி­யா­கி­யுள்­ள­துடன் 2500க்கும் மேற்­பட்டோர்  பாதிக்­கப்­பட்­டுள்­ளனர்.  இந்­தப்­பா­திப்பு   இன்­னமும் பன்­ம­டங்­காக அதி­க­ரிக்­கலாம் என்று   அச்சம் தெரி­விக்­கப்­பட்­டி­ருக்­கின்­றது.

உல­கத்தில் கடந்த மூன்று தசாப்­தங்­க­ளுக்குள்  பல்­வேறு வைரஸ் தாக்­கங்­க­ளினால்   இழப்­புக்கள்  ஏற்­பட்­டி­ருந்­தன. 1976 ஆம் ஆண்டு  தென்­சூடான் பகு­தி­யிலும்   காங்கோ  குடி­ய­ரசு நாட்­டிலும்  எபோலா  வைரஸ் பர­வி­யி­ருந்­தது.  இந்த வைரஸ் தாக்கம் கார­ண­மாக  2013 தொடக்கம் 2016ஆம் ஆண்டு வரையில் 11300 பேர் பலி­யா­கி­யி­ருந்­தனர். 2019இலும் மத்­திய ஆபி­ரிக்­காவில் 1800 பேர் வரையில் இதனால் பலி­யா­கி­யி­ருந்­தனர்.

இதே­போன்றே 2002 ஆம் ஆண்­ட­ளவில்  தென்­சீ­னாவில் பர­விய  சார்ள்ஸ் வைர­சினால் பாதிப்­புக்கள் ஏற்­பட்­டன.  இந்த வைரஸ்  26 நாடு­களில் 8000க்கும்  மேற்­பட்ட  உயி­ரி­ழப்­புக்­களை   ஏற்­ப­டுத்­தி­யி­ருந்­தது.  இதே­போன்றே  ஜிகா வைரஸ், நிபா வைரஸ் போன்­ற­வற்­றி­னாலும் தாக்­கங்கள் ஏற்­பட்­டி­ருந்­தன. தற்­போது கொரோனா வைரஸ்  பரவி வரு­கின்­றது.

கொரோனா வைரஸ்  எவ்­வாறு உரு­வா­னது, அதன்  பாதிப்­புக்கள் என்ன   என்­பது தொடர்பில் தொடர்ந்தும்   ஆராய்ச்­சிகள் இடம்­பெற்று வரு­கின்­றன.  இதன் உரு­வாக்­கத்­திற்கு  வெவ்­வேறு கார­ணங்கள்  கூறப்­பட்டு வரு­கின்­றன.  ஆனாலும் இன்­னமும்  உறு­தி­யாக  அதற்­கான மூலம் கண்­டு­பி­டிக்­கப்­ப­ட­வில்லை.  இந்த வைரஸ் தாக்கம்  தொடர்­வ­தனால்  உல­க­ளா­விய ரீதியில்  பெரும்  அச்­ச­ுறுத்­த­லான நிலைமை  ஏற்­பட்­டி­ருக்­கின்­றது.  

ஒவ்­வொரு நாடு­ம்  வைரஸ் பர­வு­வதை தடுப்­ப­தற்­கான முன்­னெச்­ச­ரிக்கை நட­வ­டிக்­கை­களை எடுத்து வரு­கின்­றது. அந்த வகையில் எமது நாட்­டிலும் அதற்­கான ஏற்­பா­டு­களை  சுகா­தார அமைச்சு  மேற்­கொண்­டி­ருக்­கின்­றது.  இந்த வைரஸ் தாக்­கத்தை   குணப்­ப­டுத்­து­வ­தற்கு  மருந்­துகள் இல்­லாத நிலையில் அதன் பர­வலை தடுப்­ப­தற்கு நட­வ­டிக்கை எடுக்­க­வேண்­டி­யதே தற்­போ­தைய நிலையில் இன்­றி­ய­மை­யா­த­தாக உள்­ளது.  இலங்­கையில்  கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்­ளா­கி­யி­ருப்­பார்கள் என்று சந்­தே­கிக்­கப்­படும் இரு இலங்­கை­யர்­களும் இரு சீனர்­களும்  அங்கொட தொற்றுநோய் தடுப்பு வைத்தியசாலையில் அனு­ம­திக்­கப்­பட்­ட­போ­திலும்  அவர்­க­ளுக்கு  அந்த தாக்கம் ஏற்­ப­ட­வில்லை என்று கூறப்பட்டது. ஆனாலும் சீனப் பெண்ணொருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளமை தற்போது உறு­திப்­ப­டுத்­தப்­பட்­டுள்ளது.  

உல­க­ளா­விய ரீதியில் பெரும் அச்­சு­றுத்­தலை ஏற்­ப­டுத்­தி­யி­ருக்கும் இந்த வைரஸ் தொற்­றினை பர­வாது தடுப்­ப­தற்கும்   தொற் ­றினை கட்­டுப்­ப­டுத்­து­வ­தற்கும்   சுகா­தார அமைச்சு உரிய நட­வ­டிக்­கை­களை  உட­ன­டி­ யாக எடுக்­க­வேண்டும். இந்த வகையில்   கொரோனா வைரஸ் தொற்­றினை கட்­டுப்­ப­டுத்த   தேசிய  செயற்­பாட்டு குழு­வொன்று  சுகா­தார அமைச்­சினால்  நிய­மிக்­கப்­பட்­டுள்­ளமை  வர­வேற்­கத்­தக்­க­தாகும்.

இதற்­க­மைய கொரோனா வைரஸ் தொற்று இலங்­கையில் பர­வாமல் இருப்­ப­தற்­கான  அடுத்த கட்ட நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுக்கும் பொறுப்பு  வாய்ந்த  குழு­வி­னரும்  சுகா­தார அமைச்­சினால்  நிய­மிக்­கப்­பட்­டுள்­ளனர்.   இந்­தக்­கு­ழுவில் உறுப்­பி­னர்­க­ளாக  ஜனா­தி­ப­தியின் மேல­திக செய­லாளர்  ரியல் அட்­மிரல் ஜயநாத் கொலம்­பகே,  சுகா­தார செய­லாளர் ஹதுனி ஜய­வர்த்­தன,  சுகா­தார சேவை பணிப்­பா­ளர் ­நா­யகம்  விசேட வைத்­திய நிபுணர் அனில் ஜய­சிங்க, மேல­திக செய­லாளர்  வைத்­தியர்  சுனில் த சில்வா  உள்­ளிட்ட விசேட வைத்­தி­யர்கள்  மற்றும்  இலங்கை இரா­ணு­வத்தை  பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்தும் வித­மாக பிரி­கே­டியர் வைத்­தியர்  கிரு­ஷாந்த பெர்­னாண்டோ,  விமான சேவை நிறு­வன  தலைவர் ஜெனரல்  சந்­தி­ர­சிறி, குடி­வ­ரவு, குடி­ய­கல்வு  பிரிவின் உறுப்­பி­னர்கள்  அங்­கத்­துவம் பெற்­றுள்­ளனர்.

இந்­தக்­குழு கொரோனா வைரஸ் தொற்­றினை  தடுப்­ப­தற்கு எடுக்­க­வேண்­டிய நட­வ­டிக்­கைகள் குறித்து நேற்று கூடி ஆராய்ந்­தி­ருக்­கின்­றது.  சீனா உட்­பட இந்த வைரஸ் பர­வி­யுள்ள நாடு­க­ளி­லி­ருந்து  இலங்கைக்கு வரு­ப­வர்­களை பரி­சோ­திப்­ப­தற்­கான நட­வ­டிக்­கைகள் விமான நிலை­யத்தில் மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ளன.   கட்­டு­நா­யக்க விமான நிலை­யத்தின் இரு இடங்­களில்  ஸ்கேனிங் இயந்­தி­ரங்கள் பொருத்­தப்­பட்­டுள்­ளன.  ஆனாலும்  இந்த நட­வ­டிக்கை  பூரண வெற்றி அளிக்­குமா என்ற விட­யத்­திலும் தற்­போது   சந்­தேகம் எழுந்­தி­ருக்­கின்­றது.

இந்த விடயம் தொடர்பில்  கருத்து தெரி­வித்­துள்ள சுகா­தார சேவைகள் பணிப்­பாளர் நாயகம் வைத்­தியர் அனில் ஜய­சிங்க,   கொரோனா  தொற்று இலங்­கையில் பர­வு­வதை தடுக்க தேவை­யான நட­வ­டிக்­கை­களை நாம் முன்­னெ­டுத்­துள்ளோம். விமான நிலை­யத்தில்   இரு இடங்­களில்  டேர்மல் ஸ்கேனிங் செய்­யப்­ப­டு­கின்­றது. இந்­நி­லையில் குறித்த வைரஸ் தொற்று கார­ண­மாக   காய்ச்­ச­லுடன் கூடிய அறி­குறி­யுடன் ஒருவர் நாட்­டுக்குள் வந்தால்  அங்க அடை­யாளம் காண முடியும். எனினும்   இதனை நூற்றுக்கு நூறு  வீதம் வெற்­றி­க­ர­மான நட­வ­டிக்கை என்று நான் கூற­மாட்டேன். ஏனெனில் இந்த வைரஸ் தொற்று ஒரு­வரின்  உடலில் செயற்­பட அல்­லது  தாக்­கத்தை வெளிப்­ப­டுத்த இரு­ வா­ரங்கள் வரை செல்லும். எனவே அவ்­வா­றான பின்­ன­ணியில்  காய்ச்சல் இல்­லாமல் ஒருவர் அந்த தொற்­றுடன் வந்தால் அவர் நாட்­டுக்குள் தடை­யின்றி வரு­வ­தற்­கான  வாய்ப்­புக்கள் உள்­ளன.  அவர் வந்த பின்னர் வைரஸ் தாக்­கத்­திற்கு ஆளா­கலாம்.  எனவே அவ்­வா­றான நிலையில்  அதற்கு முகம்­கொ­டுக்க   நாம்   தயா­ராக வேண்டும் என்று தெரி­வித்­தி­ருக்­கின்றார்.

இந்த வைரஸின் தாக்கம்   இரு­ வா­ரங்­க­ளி­லேயே  வெளிப்­படும் நிலையில்  இதனை  பர­வாது தடுக்கும் விட­யத்­திலும்  பல சவால்­களை  சந்­திக்­க­வேண்­டி­யுள்­ளது.  இவ்­வாறு நோயா­ளர்கள்   நாட்­டுக்குள் வந்தால் அதற்கு ஏற்ற வைத்­திய வச­திகள் செய்­யப்­ப­ட­வேண்­டி­யதும்  தற்­போ­தைய நிலையில் அவ­சி­ய­மாக   உள்­ளது.

கொரோனா வைரஸ் பர­வி­யுள்ள  சீனாவில்  உஹான் மற்றும் சிச்­சுவான் மாகா­ணங்­களிலுள்ள   இலங்கை மாண­வர்­களை நாட்­டுக்கு  அழைத்து வரு­வ­தற்­கான  ஏற்­பாட்­டி­னையும் அர­சாங்கம்  செய்­தி­ருக்­கின்­றது.  அங்கு கல்­வி ­ப­யிலும் 150 இலங்கை மாண­வர்­களை அடுத்­து­வரும்  48 மணி­நே­ரத்­திற்குள் அழைத்து வரு­வ­தற்­கான நட­வ­டிக்கை  மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ள­தாக ஜனா­தி­பதி செய­லகம்  தெரி­வித்­தி­ருக்­கின்­றது.  இதே­போன்றே சீனாவில்  வசிக்கும் இலங்­கை­யர்கள் தொடர்­பிலும்  கவனம் செலுத்­தப்­பட்­டி­ருக்­கின்­றது.

உண்­மை­யி­லேயே கொரோனா வைரஸ் தொற்­றினை தடுப்­ப­தற்கு   முன்­னெச்­ச­ரிக்கை நட­வ­டிக்­கை­களை  அர­சாங்கம்  உட­ன­டி­யா­கவே ஆரம்­பித்­துள்­ளமை  பாராட்­டத்­தக்க செயற்­பா­டே­யாகும்.  இந்த விட­யத்தில்   சுகா­தார அமைச்சின்  தொற்­றுநோய் தடுப்புப் பிரிவு   ஆக்­க­பூர்­வ­மான செயற்­பா­டு­களில்  இறங்­க­வேண்டும்.  பொது­மக்­க­ளுக்கு இந்த விடயம் தொடர்­பி­லான உரிய  எச்­ச­ரிக்­கை­களை விடுப்­ப­துடன் பாது­காப்பு ஏற்­பா­டுகள் தொடர்­பிலும் உரிய அறி­விப்­புக்­களை வெளி­யி­ட­வேண்டும். இந்த  வைரஸ் இது­வரை  கண்டறியப்படாதபோதும் தற்காப்பு கருதி  கொழும்புக்கு வரும் அனைவரும்   மூக்குப்பகுதியை   மறைக்கத் தக்கதாக   மறைப்பொன்றினை  (மாஸ்) அணிந்து கொள்ளுமாறு கொழும்பு பிரதான  சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் ருவான்  விஜயமுனி அறிவித்திருக்கின்றார்.

இத்தகைய பாதுகாப்பு  நடைமுறைகள் வைரஸ் தொற்று பரவுவதை  தடுப்பதாக  அமையும்.  இதேபோன்றே  இந்த தொற்றை தடுப்பதற்கான பாதுகாப்பு வழிமுறைகளையும் மக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கையாளவேண்டியது இன்றி யமையாததாக உள்ளது.   இலங்கையிலும்  கொரோனா வைரஸ் தொற்று  ஏற்படாதிருப்பதற்கும்   பரவுவதை தடுப்பதற்கும்   துரித கதியில்  நடவடிக்கைகள்  எடுக்கப்படவேண்டும்.  

இந்த விடயத்தில்  சுகாதார அமைச்சின் தொற்றுநோய் தடுப்பு பிரிவின் அறிவுறுத்தல்களை  நாட்டு மக்கள் கைக்கொள்ள வேண்டியது  அவசியம் என்பதை சுட்டிக்காட்ட விரும்பு கின்றோம்.

(28.01.2020 வீரகேசரி நாளிதழின் ஆசிரிய தலையங்கம் )

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பிரித்தானிய மக்களை கண்ணீர் சிந்தவைத்த இளவரசி...

2024-03-29 13:17:06
news-image

மோடி சூட்டிய பெயர் அங்கீகரிப்பு

2024-03-28 18:11:54
news-image

மூளையில் காயத்தால் இறந்த குழந்தை :...

2024-03-28 11:20:31
news-image

வரலாற்றில் முதல் முறையாக... சவூதியில் ஒரு...

2024-03-28 18:03:05
news-image

இலங்கையில் தேசியவாதம் தோல்வியடைந்து விட்டது -கனடா...

2024-03-27 15:52:43
news-image

அதிகரித்துவரும் சிறு வயது கர்ப்பங்களும் விளைவுகளும்

2024-03-27 12:28:26
news-image

சர்ச்சையான கருத்துக்களுக்கு மத்தியில் முன்னாள் ஜனாதிபதி...

2024-03-27 11:57:52
news-image

ரஸ்ய - உக்ரைன் போர் களங்களில்...

2024-03-26 17:45:40
news-image

நல்லிணக்கம் பற்றிய கதையளப்புகளுக்கு மத்தியில் வடக்கு,...

2024-03-26 14:35:09
news-image

மன்னரை தொடர்ந்து இளவரசி : அதிர்ச்சியில்...

2024-03-25 21:18:44
news-image

துப்பாக்கி ரவைகளும் பீதியும் படுகொலையாக மாறிய...

2024-03-25 16:29:48
news-image

பலஸ்தீன இனப்படுகொலைக்கு மேற்குலகின் ஆதரவு 

2024-03-25 16:01:54