வல்லப்பட்டைகளுடன் இருவர் கைது

Published By: Daya

28 Jan, 2020 | 02:41 PM
image

மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவுக்குட்பட்ட மன்னார் பகுதியில் பல இலட்சம் ரூபா பெறு மதியான வல்லப் பட்டைகளுடன் இரு சந்தேகநபர்களை மன்னார் மாவட்ட போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் நேற்று திங்கட்கிழமை மாலை கைதுசெய்துள்ளனர்.



கடற்படையினர் வழங்கிய தகவலுக்கு அமைவாக மன்னார் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பந்துல வீர சிங்கவின் பணிப்புரைக்கு அமைவாக மன்னார் மாவட்ட போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரி பொலிஸ் பரிசோதகர் கங்காபதி ஆர்த்தனன் தலைமையிலான பொலிஸ் குழுவினர் நேற்று திங்கட்கிழமை மாலை மன்னார் பகுதிக்குச் சென்று இரு சந்தேகநபர்களை கைது செய்ததோடு, பல இலட்சம் ரூபா பெறுமதியான 70 கிலோ வல்லப்பட்டையினை மீட்டுள்ளனர்.


இந்நிலையில், கைது செய்யப்பட்ட 21 மற்றும் 60 வயதுடைய இரு சந்தேகநபர்கள் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளனர்.


மீட்கப்பட்ட வல்லப்பட்டை பொதிகள் மன்னார் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. 

குறித்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை மன்னார் மாவட்ட போதைப்பொருள் தடுப்பு பிரிவு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27