”உலகையே அச்சத்தில் ஆழ்த்திய கொரோனா வைரஸ் இதுதான்”: சீன சுகாதாரத் துறை அதிகாரிகள் வெளியிட்ட புகைப்படங்கள்

Published By: J.G.Stephan

28 Jan, 2020 | 12:06 PM
image

சீனாவில், கொரோனா வைரஸ் தாக்கத்தால் கடந்த சில வாரங்களாகவே பதற்றம் நிலவி வருகிறது. இவ்வைரஸ் தாக்கத்தால் இதுவரைக்கும், சுமார் 106 பேர் இதுவரை இறந்துள்ளதாகவும் சுமார் 4000 பேர் வரை பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

இந்நிலையில், இலங்கை உட்பட உலகின் பல நாடுகளிலும் உள்ள மக்களிடையே இந்த வைரஸ் குறித்த அச்சம் அதிகரித்துள்ளது. இவ்வைரஸைத் தடுப்பது தொடர்பான நடவடிக்கைகளையும் ஒவ்வொரு நாட்டுள அரசாங்கமும் மேற்கொண்டு வருகின்றமையும் குறிப்பிடதக்கது.

இதனிடையே, சீனாவின் சுகாதாரத் துறை அதிகாரிகள் கொரோனா வைரஸின் நுண்ணிய படங்களை நேற்று முதன்முதலாக வெளியிட்டுள்ளனர். வுஹான் நகரில் இரண்டு நோயாளிகளிடம் இந்த வைரஸ் பிரித்தெடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஜனவரி 6-ம் திகதி ஒரு நோயாளியிடமிருந்து, `என்.பி.ஆர்.சி 2020.00001' என்ற வரிசை எண்ணுடன் இந்த வைரஸ் பிரிக்கப்பட்டுள்ளது. இந்த நுண்ணிய படம்தான் கொரோனா வைரஸ்க்கான முதல் மாதிரிப் படம். 

பின்னர், ஜனவரி 22-ம் திகதி என்.பி.ஆர்.சி 2020.00002 என்ற எண்ணுடன் மற்றொரு நோயாளியிடமிருந்து பிரித்தெடுத்துள்ளனர். இரண்டாவது நுண்ணிய படத்தையே அந்நாட்டு சுகாதார அதிகாரிகள் தற்போது வெளியிட்டுள்ளனர்.

மேலும், சீனாவின் வசந்த கால விடுமுறை ஜனவரி 30ம் திகதியோடு முடிய இருந்தது. இந்தசூழலில் விடுமுறையை பெப்ரவரி 2ம் திகதி வரை நீட்டித்திருக்கிறது சீனா. இந்நிலையில், தொடர் விடுமுறையால் சீனாவில் இலட்சக்கணக்கான மக்கள் பொதுப்போக்குவரத்தைப் பயன்படுத்துவார்கள் என்பதால், வைரஸ் பரவல் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரானின் அணுஉலைகளிற்கு பாதிப்பில்லை - ஐநா...

2024-04-19 12:04:21
news-image

இஸ்ரேல் தாக்குதல் மேற்கொண்ட நகரத்தில் அணுஉலை...

2024-04-19 11:47:29
news-image

இந்தியாவின் 18 ஆவது பாராளுமன்ற தேர்தல்...

2024-04-19 11:45:04
news-image

இஸ்ரேல் தாக்குதலை மேற்கொண்ட நகரமே ஈரானின்...

2024-04-19 11:01:21
news-image

பாதுகாப்பு நிலவரம் மோசமடையலாம் - இஸ்ரேலில்...

2024-04-19 10:38:00
news-image

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் -...

2024-04-19 10:28:27
news-image

ஈரான் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல்

2024-04-19 09:31:45
news-image

2024ம் ஆண்டுக்கான 100 செல்வாக்கு மனிதர்களில்...

2024-04-18 15:14:29
news-image

சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின்...

2024-04-18 17:05:27
news-image

என்மீது தாக்குதல் மேற்கொண்டவரை மன்னித்துவிட்டேன் -...

2024-04-18 11:24:08
news-image

புனித உம்ரா, சுற்றுலா மன்றத்தை ஏப்ரல்...

2024-04-18 17:16:17
news-image

இஸ்ரேல் பதில் தாக்குதலை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது...

2024-04-18 10:58:52