தகுதியற்ற அரசியல் கட்சிகளை பதிவியிலிருந்து நீக்குங்கள் - பெப்ரல் அமைப்பு 

Published By: Vishnu

27 Jan, 2020 | 05:04 PM
image

(எம்.மனோசித்ரா)

புதிய அரசியல் கட்சிகளை பதிவு செய்யும் போது உரிய கவனம் எடுக்குமாறு தேர்தல் ஆணையாளரிடம் கோரிக்கை விடுத்துள்ள பெப்ரல் அமைப்பு , தகுதியற்ற அரசியல் கட்சிகளை பதிவிலிருந்து நீக்குமாறும் கேட்டுக் கொண்டுள்ளது. 

அத்தோடு கட்சிகளை பதிவு செய்யும் போது கவனத்தில் கொள்ளுமாறு தெரிவித்து 7 கோரிக்கைகளையும் பெப்ரல் அமைப்பு முன்வைத்துள்ளது. 

அரசியல் கட்சிகள் சில ஜனநாயகத்தை பாதுகாக்கின்றோம் என்ற பெயரில் ஜனநாயகத்தை துஷ்பிரயோகம் செய்கின்றனர். இச் செயற்பாட்டை இயன்றளவில் குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். 

ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகள் உரிய அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடுவதில்லை என்பதை கவனத்தில் கொண்டு இவ்வாறான அரசியல் கட்சிகளை பதிவு பட்டியலில் இருந்து நீக்க வேண்டும். மேற் கூரிய விடயங்கள் குறித்து உடன் கவனம் செலுத்துமாறும் பெப்ரவில அமைப்பு மேலும் கேட்டுக் கொண்டுள்ளது.

பெப்ரல் அமைப்பின் தலைவர் றோஹண ஹெட்டியாராச்சி சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரியவுக்கு மேற்குறித்த விடயம் தொடர்பில் அனுப்பி வைத்துள்ள கடிதத்திலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்