உறவுகளின் உண்மை நிலையினை வெளிப்படுத்தக் கோரி காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் போராட்டம்

Published By: Digital Desk 3

27 Jan, 2020 | 04:33 PM
image

வவுனியாவில் காணாமல் போனவர்களின் உறவினர்கள் தமது உறவுகளின் உண்மை நிலையினை வெளிப்படுத்துமாறு கோரியும் ஊடகவியலாளர்களின்‌ பாதுகாப்பை உறுதிப்படுத்த கோரியும்  ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.

வவுனியா வீதி அபிவிருத்தி திணைக்களத்திற்கு முன்பாக கடந்த 1073 நாட்களாக போராடிவரும் காணாமல் ஆக்கபட்டவர்களின் உறவினர்களாலேயே குறித்த ஆர்பாட்டம் இன்று மதியம் 1.30 மணியளவில் முன்னெடுக்கப்பட்டது.

பத்திரிகை சுதந்திரம் என்பது ஜனநாயகத்தின் முதுகெலும்பாகும், ஒடுக்கப்பட்ட பத்திரிகை சுதந்திரம் இராணுவ ஆட்சி அல்லது சர்வாதிகாரத்திற்கு வழி வகுக்கும் என்றவாறாக எழுதப்பட்டிருந்த பதாகையை தாங்கியவாறு காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் எங்கே எங்கே பிள்ளைகள் எங்கே, ஊடகவியலாளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்து போன்ற கோசங்களை எழுப்பியவாறு  போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

போராட்டக்காரர்கள் கருத்து தெரிவிக்கும் போது, மட்டக்களப்பில் ஊடகவியலாளர்களுக்கு கொலை அச்சுறுத்தல் விடுத்தமையை கண்டித்து  பத்திரிகையாளர்களின்  ஒருபங்கு ஜனநாயகத்தை வளப்படுத்துவது, ஊடகவியலாளர்கள் நிகழ்வுகள் மற்றும் பிரச்சினைகள், அவை தங்கள் வாழ்க்கையை எவ்வாறு பாதிக்கின்றன என்பதை பற்றி பொதுமக்களுக்கு கற்பிக்கின்றது . பத்திரிகையின் செயல்பாடுகள் தகவல், கல்வி மற்றும் வழிகாட்டல். பத்திரிகை சுதந்திரம்  என்பது ஜனநாயகத்தின் முதுகெலும்பாகும். ஒடுக்கப்பட்ட பத்திரிகை சுதந்திரம் இராணுவ ஆட்சி அல்லது  சர்வாதிகாரத்திற்கு வழி வகுக்கும் என தெரிவித்திருந்தனர்.

போராட்டக்காரர்கள் ஐரோப்பிய ஒன்றியம், பிரித்தானியா கொடிகளையும் ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01