(ப.பன்னீர்செல்வம், ஆர். ராம்)

சாலாவ இராணுவ முகாமில் ஏற்பட்ட  திடீர் தீ விபத்து சம்பவத்தை அடுத்து இராணுவத்தினருக்கும் பொது மக்களுக்கு இடையில் முறுகலை ஏற்படுத்துவதற்கு சிலர் முயற்சிகளை மேற்கொள்வதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சபையில் குற்றம் சாட்டினார். 

பொது மக்கள் தமது எதிர்காலம் தொடர்பாக அச்சப்பட வேண்டிய தேவையில்லை எனத் தெரிவித்த பிரதமர் ரணில் விக்கிரசிங்க எதிர்வரும் 60 தினங்களுக்குள் இயல்பு நிலை ஏற்படுத்தப்படும் எனவும் நம்பிக்கை வெளியிட்டார். 

 குறித்த சம்பவம் தொடர்பாக பூரணமான அறிக்கையொன்று பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்படுமெனவும் பிரதமர்  உறுதிப்படத் தெரிவித்தார். 

பாராளுமன்றத்தில் இன்று வெள்ளிக்கிழமை 23 இன் கீழ் இரண்டு பிரிவின் கீழ்  விசேட கூற்றொன்றை எதிர்க்கட்சியின் பிரதம கொறடாவும் ஜே.வி.பி. யின் தலைவருமான அநுர குமார திஸாநாயக்க எம்.பி. முன்வைத்தபோதே  அதற்கு பதிலளிக்குமுகமாக  அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.