காலிறுதிக்கு நுழைந்த ஜோகோவிச், பெடரர்!

Published By: Vishnu

27 Jan, 2020 | 12:07 PM
image

மெல்போர்னில் இடம்பெற்று வரும் அவுஸ்திரேலிய பகிரங்க டென்னிஸ் தொடரின் இறுதி சுற்றுக்கு செர்பிய வீரர் ஜோகோவிச்சும், சுவிட்சர்லாந்து வீரர் பெடரரும்  தகுதி பெற்றுள்னர்.

அவுஸ்திரேலிய பகிரங்க டென்னிஸ் தொடரில் நேற்றைய தினம் நான்வாது சுற்று ஆட்டங்கள் நடைபெற்றன.

ஆண்கள் பிரிவில் நடப்பு சாம்பியனான செர்பியாவின் நோவக் ஜோகோவிச் 6-3, 6-4, 6-4 என்ற நேர் செட்டில் ஆர்ஜெண்டீனாவின் டியாகோ ஸ்வாட்ஸ்மனை வெளியேற்றி 11 ஆவது முறையாக காலிறுதிக்குள் நுழைந்தார்.

இதேவேளை 6 முறை சாம்பியனான சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர் 67 ஆம் நிலை வீரரான ஹங்கேரியின் மார்டோன் புக்சோவிக்சை 4-6, 6-1, 6-2, 6-2 என்ற செட் கணக்கில் தோற்கடித்து 15 ஆவது முறைாயக அவுஸ்திரேலிய பகிரங்க டென்னிஸ் தொடரின் காலிறுதிக்கு முன்னேறினார்.

அமெரிக்காவின் டெனிஸ் சான்ட்கிரின் தன்னை எதிர்த்த பாபியோ போக்னினியை (இத்தாலி) 7-6 (7-5), 7-5, 6-7 (2-7), 6-4 என்ற செட் கணக்கில் தோற்கடித்தார். 

கனடாவின் மிலோஸ் ராவ்னிக் 6-4, 6-3, 7-5 என்ற நேர் செட்டில் மரின் சிலிச்சை (குரோஷியா) தோற்கடித்தார். காலிறுதி ஆட்டங்களில் சான்ட்கிரின் பெடரரையும், மிலோஸ் ராவ்னிக், ஜோகோவிச்சையும் சந்திக்க உள்ளனர்.

இந் நிலையில‍ை பெண்கள் பிரிவில் ‘நம்பர் வன்’ வீராங்கனையான அவுஸ்திரேலியாவின் ஆஷ்லி பார்ட்டி 6-3, 1-6, 6-4 என்ற செட் கணக்கில் அமெரிக்காவின் அலிசன் ரிஸ்கேவை வீழ்த்தினார். 

துனிசியா நாட்டு வீராங்கனை ஆன்ஸ் ஜாபெர் 7-6(7-4), 6-1 என்ற நேர் செட் கணக்கில் சீன வீராங்கனை கியாங் வாங்கை சாய்த்து காலிறுதிக்குள் நுழைந்தார். 

இதன் மூலம் ‘கிராண்ட்ஸ்லாம்’ போட்டி ஒன்றில் காலிறுதி சுற்றை எட்டிய அரபு மொழி பேசும் நாட்டைச் சேர்ந்த முதல் வீராங்கனை என்ற வரலாற்று சாதனைக்கு ஆன்ஸ் ஜாபெர் சொந்தக்காரர் ஆனார். 

மற்ற ஆட்டங்களில் செக்குடியரசின் பெட்ரா கிவிடோவா 6-7(4-7), 6-3, 6-2 என்ற செட் கணக்கில் மரியா சக்காரியையும் (கிரீஸ்), அமெரிக்காவின் சோபியா கெனின் 6-7(5-7), 6-3, 6-0 என்ற செட் கணக்கில் சக நாட்டவர் 15 வயதான கோகோ காப்பையும் வீழ்த்தினர். கிராண்ட்ஸ்லாமில் முதல்முறையாக காலிறுதிக்கு வந்துள்ள சோபியா கெனின் அடுத்து ஆன்ஸ் ஜாபெரை சந்திக்கிறார்.

கலப்பு இரட்டையர் பிரிவில் இந்திய மூத்த வீரர் லியாண்டர் பெயஸ், லாத்வியா வீராங்கனை ஆஸ்டாபென்கோவுடன் இணைந்துள்ளார். இவர்கள் முதல் சுற்றில் 6-7 (4-7), 6-3 (10-6) என்ற செட் கணக்கில் அவுஸ்திரேலியாவின் ஸ்டோம் சான்டெர்ஸ், மார்க் போல்மன்ஸ் இணையை வீழ்த்தினர்.

இந்திய வீரர் ரோகன் போபண்ணா, உக்ரைன் வீராங்கனை நாடியா கிச்செனோக் ஜோடி தங்களது 2-வது சுற்றில் 6-4, 7-6 (7-4) என்ற நேர் செட் கணக்கில் நிகோல் மெலிசார் (அமெரிக்கா)- புருனோ சோர்ஸ் (பிரேசில்) இணையை தோற்கடித்து காலிறுதியை உறுதி செய்தமையும் குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஷஷாங்க், அஷுட்டோஷ் அதிரடியால் திகலடைந்த மும்பை...

2024-04-19 02:08:17
news-image

ஒலிம்பிக்கிலிருந்து அவுஸ்திரேலிய குத்துச்சண்டை பயிற்றுநர் வாபஸ்

2024-04-18 16:16:23
news-image

ஒலிம்பிக் வாய்ப்புக்கான உலகக்கிண்ண பளுதூக்கல் போட்டியில்...

2024-04-18 14:49:11
news-image

வுல்வார்டின் சதத்தை சமரியின் சதம் விஞ்சியதன்...

2024-04-18 10:16:00
news-image

22 வயதுக்குட்பட்ட ஆசிய குத்துச்சண்டையில் இலங்கையின்...

2024-04-18 00:00:57
news-image

குஜராத்தை குறைந்த எண்ணிக்கைக்கு சுருட்டி வெற்றிபெற்ற...

2024-04-17 23:52:38
news-image

ஆண்களுக்கான மெய்வல்லுநர் போட்டிகளில் மிகக் பழைமையான...

2024-04-17 17:42:41
news-image

நினைவிலிருந்து நீங்காத மூத்த கால்பந்தாட்ட வீரர்கள்...

2024-04-17 14:38:02
news-image

பெய்ஜிங் அரை மரதனில் சீன வீரருக்கு...

2024-04-17 12:12:35
news-image

ஜொஸ் பட்லர் 2ஆவது சதத்தைக் குவித்து...

2024-04-17 01:29:43
news-image

பண்டைய ஒலிம்பியாவில் ஒலிம்பிக் சுடர் ஏற்றப்பட்டது

2024-04-16 23:45:09
news-image

நுவரெலியாவில் சித்திரை வசந்த கால கொண்டாட்டம்...

2024-04-16 17:38:49