புதிய அர­சாங்கம் மாகாண சபை  தேர்­தலை நடத்தும் ; வட மாகாண சபையின் முன்னாள் எதிர்க்­கட்சித் தலைவர் தவ­ராசா

27 Jan, 2020 | 12:06 PM
image

(தி.சோபிதன்)

மாகாண சபையை கூட முடங்க வைத்­தது ஐக்­கிய தேசியக் கட்­சியே என குற்­றஞ்­சாட்­டி­யுள்ள  ஈழ மக்கள் ஜன­நா­யகக் கட்­சியின் முக்­கி­யஸ்­தரும் வடக்கு மாகாண சபையின் முன்னாள் எதிர்க்­கட்சித் தலை­வ­ரு­மான சி.தவ­ராசா புதிய அர­சாங்கம் மாகாண சபைத் தேர்­தலை நடத்தி மாகாண சபையை இயங்க வைக்­கு­மென்றும் குறிப்­பிட்­டுள்ளார்.

இவ்­வி­டயம் தொடர்­பாக மேலும் தெரி­விக்­கையில்,

மாகாண சபைத் தேர்தல் உட­ன­டி­யாக நடக்­கு­மென்று நான் எதிர்­பார்க்­க­வில்லை. ஆனால் பாரா­ளு­மன்றத் தேர்­த­லுக்குப் பின்னர் மாகாண சபைத் தேர்தல் நிச்­ச­ய­மாக நடக்­கு­மென்றே நம்­பு­கின்றேன். இதனை தேர்தல் பிர­சாரக் கூட்­டங்­க­ளிலும் மஹிந்த ராஜ­பக் ஷ சொல்­லி­யி­ருக்­கின்றார்.

அதி­காரப் பகிர்வு, கூடிய அதி­கா­ரங்கள் எல்லாம் வேண்­டு­மென்று பெரிய கோஷங்­களை விட்டுக் கொண்டும் உணர்­வு­பூர்­வ­மாகவும் சொல்லிக் கொண்­டி­ருக்­கிறோம். ஆனால், இருக்­கிற மாகாண சபையைக் கூட முடங்க வைத்­தது ஐக்­கிய தேசியக் கட்சி அரசு தான். அது எத்­தனை பேருக்குத் தெரி­யு­மென்று எனக்குத் தெரி­ய­வில்லை.

சாதா­ரண மாகாண சபைத் தேர்தல் சட்ட மூலங்­க­ளுக்கு அமை­வாக மாகாண சபை­க­ளி­னு­டைய காலம் முடி­வ­டைந்து இரண்டு கிழ­மைக்குள் தேர்தல் வைக்கக் கூடிய ஒழுங்­கு­களைச் செய்­வ­தற்கு தேர்தல் ஆணை­யா­ள­ருக்கு அதி­காரம் இருக்­கி­றது. இது தான் மாகாண சபைத் தேர்தல் சட்டம்.

ஆனால், ஐக்­கிய தேசியக் கட்சி அர­சாங்கம் என்ன செய்­தது என்றால் 2017 ஆம் ஆண்டு ஒரு சட்டமூலத்தைக் கொண்டு வந்­தது. மாகாண சபைத் தேர்தல் முறை­மையை மாற்­று­வ­தாகக் கூறி அந்தச் சட்ட மூலத்தை கொண்டு வந்தது. அதன்பின் குழு அமைக்கப்­பட்டு அந்தக் குழுவின் அறிக்­கையை பாரா­ளு­மன்றம்  நிரா­க­ரித்து விட்­டது. அவ்­வாறு நிரா­க­ரித்தால் இருக்­கின்ற அடுத்த ஏற்­பாடு என்ன­வென்றால் அதற்­கொரு மீளாய்வு குழு பிர­தமர் தலை­மையில் நிய­மிக்­கப்­பட்டு இரண்டு மாதத்தில் அந்தக் குழு தன்­னு­டைய அறிக்­கையை சமர்ப்­பிக்கும்.

ஆனால் முன்னாள் பிர­தமர் தலை­மை­யி­லான அந்தக் குழு  மீளாய்வு அறிக்­கையை சமர்ப்­பிக்­க­வில்லை. இது அந்த 2017 இல் கொண்டு வந்த சட்­ட­மூ­லத்­துக்கு முர­ணான செயற்­பாடு. இதை ஒரு­வரும் நீதி­மன்றில் சவா­லுக்­குட்­ப­டுத்­த­வில்லை.

உண்­மை­யா­கவே இந்த மாகாண சபை முறை­மையை முழுக்க முழுக்க முடக்கி வைத்­தி­ருப்­பது 2017 இல் ஐக்­கிய தேசியக் கட்சி அரசால் கொண்டு வரப்­பட்ட மாகாண சபைகள் தேர்தல் முறை­மை­யி­னு­டைய மாற்­றத்­துக்­கான சட்­ட­மூலம். இதற்கு ஒன்று செய்­தி­ருக்­கலாம். ஒரு நாலு வரியில் அந்தச் சட்ட மூலத்தை மீளப் பெறு­கிறோம் என்று பாரா­ளு­மன்­றத்தில் கொண்டு வந்­தி­ருந்தால் இன்­றைக்கு தேர்­தல்கள் நடந்­தி­ருக்கும்.

ஆதலால், இருக்­கின்ற மாகாண சபை முறை­மையை கூட இன்­றைக்கு தேக்க நிலை­மைக்கு அல்­லது இயங்க முடி­யாமல் இருக்­கின்ற நிலைக்கு ஐக்­கிய தேசியக் கட்சி அரசு தான் காரணம். அதற்கு வக்­கா­லத்து வாங்கிக் கொண்­டி­ருந்­தது கூட்­ட­மைப்பு என்­ப­தையும் ஏற்றுக் கொள்ள வேண்டும்.

இரண்டு மாதத்தில் செய்ய வேண்­டு­மென சட்­டத்தில் சொல்­லி­யி­ருக்­கி­றது. ஆனால் இதைக் கூட செய்­யாமல் நாங்கள் ஜன­நாய­கத்தைப் பற்றிப் பேசிக் கொண்­டி­ருக்­கிறோம். ஆனால் இந்த அரசு வாக்­கு­றுதி வழங்­கி­யதன் பிர­காரம் இதற்கு சட்­ட­வாக்­கத்தை செய்ய வேண்­டி­யி­ருக்­கி­றது.

ஆகை­யினால், அந்தச் சட்­ட­வாக்­கத்தை புதிய பாரா­ளு­மன்றம் செய்து உடனடியாக தேர்தல் வரக்கூடிய ஏற்பாடுகளை செய்வார்கள் என்பதில் எனக்கு பூரண நம்பிக்கை இருக்கிறது. அதாவது அடுத்த பாராளுமன்றத் தேர்தலுக்குப் பின்னர் புதிய பாராளுமன்றம் ஊடாக நிச்சயமாக மாகாண சபைத் தேர்தல் நடத்துவதற்குரிய செயற்பாடுகள் செய்யப்படும். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31