அருகிவரும் தமிழர் வரலாற்றை அருங்காட்சியகம் அமைத்து பாதுகாக்கும் முயற்சி பாராட்டுக்குரியது. - கு.சுரேந்திரன்

Published By: Digital Desk 4

26 Jan, 2020 | 08:20 PM
image

அருகிவரும் தமிழர் வரலாற்றை அருங்காட்சியகம் அமைத்து பாதுகாக்கும் சிவபூமி அறக்கட்டளையின் முயற்சி பாராட்டுக்குரியது என தமிழீழ விடுதலை இயக்கத்தின் தேசிய அமைப்பாளரும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் யாழ். மாவட்ட பாராளுமன்ற வேட்பாளருமான சுரேந்திரன் குருசுவாமி (சுரேன்) தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலே தெரிவித்துள்ளார்.

அவ் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

கல்தோன்றி மண்தோன்றாக் காலத்திற்கு முன்தோன்றிய மூத்த குடியான எமது தமிழ்க்குடி பல வரலாறுகளை கொண்ட ஒரு இனமாகும். குறிப்பாக இலங்கையின் பாரம்பரிய இனமான எமது இனத்தின் வரலாறுகள் காலத்திற்கு காலம் அழிக்கப்பட்டும் திரிவுபடுத்தப்பட்டும் வரும் நிலையில், எமது வரலாற்றை எமது அடுத்த சந்ததிக்கு காத்திரமான முறையில் பதிவுசெய்யும் முயற்சியாகவே சிவபூமி அறக்கட்டளையின்  சிவபூமி யாழ்ப்பாண அருங்காட்சியகத்தை நான் பார்க்கின்றேன்.

இந்த எண்ணக்கருவை உருவாக்கி அதை நிறைவேற்றிக்காட்டிய சிவபூமி அறக்கட்டளையின் தலைவர் கலாநிதி, செஞ்சொற் செல்வர் ஆறு திருமுருகன் உள்ளிட்ட இந்த முயற்சியில் பங்கெடுத்த அனைவருக்கும் எனது பாராட்டுக்களை தெரிவித்துக்கொள்வதோடு உங்களை பெருமையோடு நோக்குகின்றேன்.

காலத்திற்கு ஏற்றால்ப்போல் இன்றைய சந்ததியையும், எதிர்வரும் சந்ததியையும் கவரக்கூடிய வகையில் வரலாற்றை பதிவு செய்ய முயற்சித்து பெரும் பொருட்செலவில் சைவமும் தமிழும் தளைத்தோங்கிய யாழ்ப்பாண மண்ணில் அதை நிறுவியமை தமிழர்கள் மட்டுமன்றி தென்னிலங்கையிலும் வெளிநாடுகளிலுமிருந்து யாழ்ப்பாணத்திற்கு சுற்றுலாவிற்கு வரும் அனைவரும் தமிழர்களின் பெருமையையும்  வீரத்தையும் அறிந்துகொள்ள  வழிசமைக்குமென நான் உறுதியாக நம்புகின்றேன்.

காலத்தால் அழியாத இந்த அரிய பணியை செய்த சிவபூமி அறக்கட்டளையின் தலைவர்  கலாநிதி, செஞ்சொற் செல்வர் ஆறு திருமுருகன் உள்ளிட்ட இந்த முயற்சியில் பங்கெடுத்த அனைவரையும்  ஒவ்வொரு தமிழனும் நன்றியுடன் நினைத்து போற்றுவார்கள் எனத் தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58