ஓய்வூதியக்காரர்களை உறுதிப்படுத்த கைவிரல் அடையாளம்!

Published By: Vishnu

26 Jan, 2020 | 05:19 PM
image

ஓய்வு ஊதியக்காரர்கள் வாழ்கின்றார்கள் என்பதற்பாக சமர்ப்பிக்கப்படும் கைவிரல் அடையாளத்தின் மூலம் உறுதிசெய்வதற்கான ஒழுங்குறுத்தும் திட்டமொன்றை ஓய்வூதிய கொடுப்பனவு திணைக்களம்  நடைமுறைப்படுத்தியுள்ளது.

இதற்கான வசதிகளை ஓய்வூதிய திணைக்களத்தின் தலைமை அலுவலகத்தினால் அடையாளம் காணப்பட்ட பிரதேச செயலகங்கள் மற்றும் ஓய்வூதிய கொடுப்பனவு திணைக்களத்தின் அனுமதியை பெற்றுக்கொடுக்கும் தனியார் மற்றும் அரச வங்கிக் கிளைகள் மூலம் நடைமுறைப்படுத்தப்படுவதாக ஓய்வூதிய கொடுப்பனவு பணிப்பாளர் நாயகம் ஏ.ஜயத்த டீ டயஸ் தெரிவித்துள்ளார்.

2016 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதலாம் திகதிக்கு பின்னர் ஓய்வூதியம் பெற்று ஓய்வூதியத்திணைக்களத்தினால் பதிவு செய்யப்பட்ட முதலாவது ஓய்வூதியத்தை பெறும்போது கைவிரல் அடையாள பதிவை மேற்கொண்ட ஓய்வூதியக்காரர்களுக்கு இந்த உறுதியை வழங்குவதற்கு இந்த திட்டத்தின் மூலம் வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

கைவிரல் அடையாளத்தின் மூலம் இந்த உறுதியை பெற்றுக் கொள்வதற்கு கடுவெல, ஹோமாகம, மாஹரகம, கெஸ்பாவ, மாவனெல்லை, காலி, கம்பஹா, கண்டி, கடவஸ்சத்தர , மீரிகம, அத்தனகலை, மஹர, களுத்துறை, குருநாகல், கொழும்பு, மினுவாங்கொட, ஜாஎல, தம்புள்ளை,  உக்குவெல மற்றும் திம்பிரிக்கஸ்யாய ஆகிய பிரதேச செயலக அலுவலகங்களின் மூலம் இந்த வசதிகள் செய்யப்பட்டுள்ளன. ஏனைய பிரதேச செயலகங்கள் மூலம் இந்த வசதிகளை செய்து கொடுப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது என்றும் ஓய்வூதிய கொடுப்பனவு பணிப்பாளர் நாயகம் ஏ.ஜயத்த டீ டயஸ் மேலும் தெரிவித்தார்.

- அரசாங்க தகவல் திணைக்களம்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04