உலகின் மிக நீளமான விமானத்தை தயாரித்து அசத்தியுள்ள போயிங் நிறுவனம்!

26 Jan, 2020 | 03:09 PM
image

உலகின் மிக நீளமான மற்றும் மிகப்பெரிய இரட்டை எஞ்சினை கொண்ட போயிங் 777-9 எக்ஸ் என்ற விமானத்தின் முதல் சோதனை நடவடிக்கையானது வெற்றிகரமாக நிறைவடைந்து விட்டதாக போயிங் நிறுவனம் தெரிவித்துள்ளது.

போயிங் 737 மெக்ஸ் ரக விமான விமானங்களின் விபத்துக்களையடுத்து எழுந்த பல்வேறு சர்ச்சைகளுக்கு மத்தியிலேயே  இந்த புதிய விமானத்தை அமெரிக்காவை தளமாக கொண்டு இயங்கும் போயிங் நிறுவனத்தினர் உருவாக்கியுள்ளனர்.

வொஷிங்டன் மாநிலத்தின் எவரெட்டிலிருந்து புறப்பட்ட இந்த விமானமானது சனிக்கிழமையன்று சியாட்டலில் உள்ள போயிங் தளத்தை 4 மணி நேரத்திற்கு முன்னதாகவே அடைந்து தனது முதல் பயணத்தை வெற்றிகரமாக நிறைவுசெய்தது.

வடிவமைக்கப்பட்டுள்ள போயிங் 777-9 எக்ஸ் விமானமானது 251 நீளமும் 235 அடி மடிக்கக்கூடிய இறக்கைகளையும் உலகின் மிகப்பெரிய இரட்டை எஞ்சின்களை கொண்டும் வடிவமைக்கப்பட்டுள்ளது.

அத்துடன் 10 சதவீதம் அதிக எரிபொருள் திறன் கொண்டது.

ஜப்பானின் ஆல் நிப்பான் ஏர்வேஸ், பிரிட்டன் ஏர்வேஸ், கத்தே பசுபிக் ஏர்வேஸ் மற்றும் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் உள்ளிட்ட உலகின் முன்னணி விமான நிறுவனங்களிடமிருந்து முன்பதிவுகளை பெற்ற பின்னர் 2021 ஆம் ஆண்டில் முதல் 777 -9 எக்ஸ் விமானத்தை விநியோகிக்க போயிங் நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இந்த விமானத்தின் உற்பத்தியானது எங்களுக்கு பெருமை சேர்ப்பதாக அமைந்துள்ளதாகவும் நாங்கள் யார் என்பதை அனைவருக்கும் வெளிப்படுத்தியுள்ளதாகவும்  போயிங்கின் நிறுவனத்தின் தலைமை நிர்வாகி கூறியுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47
news-image

வான்வழி விநியோகத்தை நிறுத்துமாறு ஹமாஸ் கோரிக்கை:...

2024-03-27 18:56:33
news-image

ஜேர்மனியில் பேர்லின் - சூரிச் பஸ்...

2024-03-27 18:06:25
news-image

ஒரு பாலினத் திருமண சட்டமூலம் தாய்லாந்து...

2024-03-27 13:27:50
news-image

கடலுக்குள் விழுந்த உதவிப்பொருட்களை மீட்க முயன்ற...

2024-03-27 12:18:17