யுத்தக் காயங்களை ஆற்றுவது மிகவும் முக்கியமானது- கோத்தாபயவிற்கான டிரம்பின் கடிதத்தில் இடம்பெற்றவிடயம் என்ன?- அலைஸ் வெல்ஸ்

26 Jan, 2020 | 12:01 PM
image

இந்தோ பசுவிக்கில் இலங்கையின் அமைவிடம் மூலோபாய ரீதியில் எவ்வளவு முக்கியமானது என்பதை அமெரிக்கா சுட்டிக்காட்டியுள்ளது.

இலங்கைக்கான தனது சமீபத்திய விஜயம் குறித்து நியுயோர்க்கில் செய்தியாளர்கள் மத்தியில் கருத்து தெரிவிக்கையில் அமெரிக்காவின் தென்னாசியா மற்றும் மத்திய ஆசியாவிற்கான முதன்மை பிரதி உதவி செயலாளர் அலைஸ் வெல் இதனை தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கான தனது சமீபத்தைய விஜயத்தின் போது ஆக்கபூர்வமான சந்திப்புகள் இடம்பெற்றதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை ஜனாதிபதியுடனான இந்த சந்திப்பில் நல்லிணக்கம் சீர்திருத்தங்கள் ஆகியவற்றை முன்னெடுக்கும் இலங்கையுடன் தொடர்ந்தும் உறவுகளை பேணுவது குறித்து அமெரிக்கா கொண்டுள்ள அர்ப்பணிப்பை வெளிப்படுத்தும் ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் கடிதத்தினை கையளித்தேன் என அலைஸ் வெல்ஸ் தெரிவித்துள்ளார்.

இலங்கை ஜனாதிபதி தான் அனைத்து மக்களினதும் ஜனாதிபதியாக விளங்க விரும்புகின்றேன் என தெரிவித்துள்ளதை நாங்கள் வரவேற்றுள்ளோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கை இந்தோ பசுவிக்கில் மிகவும் முக்கியமான இடத்தில் உள்ளது என்பதை சுட்டிக்காட்டியுள்ள அலைஸ்வெல்ஸ் இந்து சமுத்திரத்தில் அதிகளவு கேந்திர முக்கியத்துவம்நாடு இலங்கை எனவும் தெரிவித்துள்ளார்.

வன்முறை மிகுந்த தீவிரவாதம்,கடற்சார் பாதுகாப்பை பலப்படுத்துவது,போதைப்பொருள் கடத்தலை தடுப்பது,சுதந்திரமான வெளிப்படையான ஆசிய பசுவிக்கினை ஊக்குவிக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக வர்த்தகம் முதலீட்டை ஊக்குவிப்பது,போன்ற பகிரப்பட்ட பொதுவான நலன்கள்  இரு நாடுகளுக்கும் உள்ளன எனவும் அலைஸ் வெல்ஸ் தெரிவித்துள்ளார்.

எனினும் எங்களின் இணைந்த நடவடிக்கையின் சிறந்தர தரம் என்பது  பொதுவான விழுமியங்களை வலுப்படுத்துவதில் ஏற்பட்டுள்ள வெற்றியிலேயே தங்கியுள்ளது என குறிப்பிட்டுள்ள அலைஸ் வெல்ஸ்  இலங்கையின் போர்க்காயங்களை ஆற்றும் முக்கியமான விடயமும் இதிலொன்று என தெரிவித்துள்ளார்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55
news-image

களுத்துறையில் சுற்றுலா பயணிக்கு வடை மற்றும்...

2024-04-18 21:19:33