மூவின மக்களும் சந்தோஷமாக வாழ வேண்டும் என்பதே ஜனாதிபதியின் விருப்பு - திஸ்ஸ விதாரண

Published By: Digital Desk 4

25 Jan, 2020 | 08:00 PM
image

இந்த நாட்டில் வாழ்கின்ற மூவின மக்களும் மிக சந்தோஷமாக இருக்க வேண்டும் என்பதே  எமது ஜனாதிபதி கோத்தாபாய ராஜபக்ஷவின் அபிலாஷை, அத்தோடு  இந்த நாட்டை ஒரு சுபிட்ஷமான நாடாக மாற்ற அமைக்க வேண்டும் என்ற எண்ணக்கருவோடும் இருக்கின்றார்". என வடமத்திய மாகாண ஆளூநர் திஸ்ஸ விதாரண தெரிவித்தார்.

வட மத்திய ஆளூநர் திஸ்ஸ விதாரண திருகோணமலை மாவட்டத்திற்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றினை மேற்கொண்டு திருகோணமலை,  கந்தளாய் , மற்றும் மூதூர் பகுதிகளுக்கு விஜயத்தை மேற்கொண்டிருந்தார்.

இதன் போது மூதூர் பிரதேசத்திற்கு விஜயத்தை மேற்கொண்ட வட மத்திய மாகாண ஆளுநர்,  ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மகளிர் அணியின் மூதூர் பிரதேசத்திற்கான தலைவி மஹ்றூப் - ரைஸா என்பவரின் தலைமையில் அவரது இல்லத்தில் இடம்பெற்ற  மக்கள் சந்திப்பு நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

 இந் நிகழ்வில் ஆளூநர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்:-  

கிழக்கு மாகாணத்தைப் பொறுத்த வரையில் சிறுபான்மையினரின் ஆதரவு எமக்கு  மிகவும் குறைந்த நிலையில் காணப்படுகின்றாக தெரிவித்ததுடன்.

இன்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்,  அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்,  மற்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு உங்களை ஏமாற்றி கொண்டிருக்கிறார்கள். இத்தகைய ஏமாற்றுபவர்களுக்கு பின்னால் நீங்கள் சென்றால் அமெரிக்காவின் கயிற்றை விழுங்க வேண்டிய நிலை வரும்,

ஆகவே நீங்கள் எதிர் வருகின்ற பொதுத் தேர்தலில்  ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனயோடு இணைந்து பொதுஜன பெரமுனையில் கேட்கின்ற உங்களுடைய உறுப்பினர்களை தெரிவு செய்ய நாட்டில் உள்ள அபிவிருத்திகளுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனதட தெரிவித்தார்.

இதில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன திருகோணமலை மாவட்டத்த்திற்கான செயலாளர் எம்.எம்.ஜவாத் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55
news-image

களுத்துறையில் சுற்றுலா பயணிக்கு வடை மற்றும்...

2024-04-18 21:19:33
news-image

மக்களின் கோரிக்கைக்கு அமைய முறைமை மாற்றத்தை...

2024-04-18 20:45:44
news-image

மே மாத இறுதிக்குள் வடக்கில் 60...

2024-04-18 17:27:02
news-image

யாழில் நள்ளிரவில் சுண்ணகற்கள் அகழ்ந்து எடுக்கப்பட்டு...

2024-04-18 17:21:57
news-image

உண்ணாவிரதமிருந்து உயிர்நீர்த்த தியாகதீபம் அன்னை பூபதியின்...

2024-04-18 18:54:05
news-image

இராணுவ வீரர்களின் பொதுமன்னிப்பு காலம் தொடர்பில்...

2024-04-18 19:50:26
news-image

பாடசாலை சூழலில் கனரக வாகனங்கள் போக்குவரத்தில்...

2024-04-18 17:13:51
news-image

யாழில் குழாய்க்கிணறுகளை தோன்றுவதால் ஏற்படும் ஆபத்துக்கள்...

2024-04-18 17:29:02