உண்மையை மறைக்கும் மருத்துவர்கள்- கைவிடப்பட்ட நிலையில் சடலங்கள் வுகான் நகரத்திலிருந்து தகவல்

25 Jan, 2020 | 04:08 PM
image

சீனாவின் வைரசினால் பாதிக்கப்பட்டவுகான்  நகர மருத்துமவமனையில் வைரஸ் தாக்கத்தினால் இறந்தவர்களின் உடல்கள் கைவிடப்பட்ட நிலையில் காணப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தன்னை  மருத்துவதாதி என அறிமுகப்படுத்திக்கொண்ட பெண்ணொருவர் சமூக ஊடகங்களில் இந்த தகவலை பதிவு செய்துள்ளார்.

எனினும் இந்த தகவல் உடனடியாக தணிக்கை செய்யப்பட்டுள்ளது.

குறிப்பிட்ட பதிவில் தன்னை  சுகாதார பணியாளர் என தெரிவித்துள்ள அந்த பெண் பாதிக்கப்பட்ட நோயாளிகளிற்கு எப்படி சிகிச்சை அளிக்கப்படுகின்றது என்பதை தெரிவித்துள்ளார்.

நோயாளிகளை தனிமைப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படாமல் சிகிச்சை அளிக்கப்படுகின்றது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இறுதியில் அனைவரும் தொற்றிற்கு உள்ளாகி இறக்கப்போகின்றோம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

டுவிட்டரிற்கு இணையான சீனாவின் சமூக ஊடகமான வெய்போவில் இந்த தகவல் வெளியாகியுள்ளது.

மாஜிக் கேர்ல் ஜியாவோ ஜி என்ற பெயரில் இந்த பதிவு வெளியாகியுள்ளது.

வுகானின் செஞ்சிலுவை சங்க மருத்துவமனையிலேயே இந்த வீடியோ படமாக்கப்பட்டுள்ளது என டெய்லி மெயில் தெரிவித்துள்ளது.

குறிப்பிட்ட வீடியோ, வைத்தியசாலையில் வெள்ளை துணிகளால் மூடப்பட்ட சடலங்களை காண்பித்துள்ளது.

குறிப்பிட்ட வைத்தியாசாலையில் பெருமளவு நோயாளிகளும் மருத்துவபணியாளர்களும் காணப்படுவதையும் வீடியோ காண்பித்துள்ளது.

இவைகள் சடலங்கள், இவை இன்று காலை முதல் இங்கு காணப்படுகின்றன,சிலர் அதிகாலையில் இறந்தனர்,இவற்றை கையாள்வதற்கு இதுவரை யாரும் வரவில்லை என வீடியோவில் பெண் குரலொன்று தெரிவிக்கின்றது.

மருத்துவர்கள் தாதிமார்கள் நோயாளிகள் அனைவரும் ஒரே சூழலில் உள்ளனர்,நோயாளிகள்  தனிமைப்படுத்தப்படவில்லை என அந்த குரல் தெரிவிக்கின்றது.

இதேவேளை மருத்துவமனைகள் உண்மையை மறைக்கின்றன,பாதிக்கப்பட்ட நோயாளிகளின் எண்ணி;க்கை வெளியில் வராமலிருப்பதற்காக மருத்துவர்கள் நோய் தொற்றைஉறுதிசெய்ய மறுக்கின்றனர் என குறிப்பிட்ட பெண் தனது சமூக ஊடக பதிவில் தெரிவித்துள்ளார்.

எனது கணவர் கடந்த ஒருவாரகாலமாக சுவாசப்பிரச்சினையால் பாதிக்கப்பட்டுள்ளார், அவரிற்கு சிகிச்சைஅளிப்பதற்கு மருத்துவமனைகள் மறுக்கின்றன என அவர் தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தென் ஆபிரிக்க முன்னாள் ஜனாதிபதி ஸுமா...

2024-03-29 12:42:02
news-image

இஸ்ரேலின் தாக்குதலில் 36 சிரிய இராணுவத்தினர்...

2024-03-29 11:21:33
news-image

காசாவிற்கு தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துகளையும்...

2024-03-29 10:23:49
news-image

தென்னாபிரிக்காவில் தவக்கால யாத்திரீகர்கள் சென்ற பஸ்...

2024-03-29 12:25:44
news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47