பிழையாக செயற்பட்டால் அரசை எதிர்ப்போம் .- பிரபாகணேசன் 

Published By: Digital Desk 4

25 Jan, 2020 | 03:25 PM
image

எமது மக்களிற்கு எதிரான விடயங்களை இந்த அரசு மேற்கொண்டால் எதிர்ப்பதற்கு பின் நிற்கமாட்டோம் என முன்னாள் பிரதி அமைச்சர் பிரபா கணேசன் தெரிவித்தார்.

வவுனியாவில் இன்று இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின் பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே இவ்வாறு தெரிவித்தார். 

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

இந்த அரசாங்கம் பயங்கரவாத தடை சட்டத்தை மீண்டும் கொண்டு வருவார்களேயானால் சிறுபான்மை மக்களிற்கு எதிரான ஒரு விடயமாக தான் பார்க்கமுடியும். நாம் அரசாங்கத்துடன் இருப்பது எமது மக்களிற்கான அபிவிருத்திகளையும், உரிமைகளையும் பெற்றுக்கொள்வதற்காகவே தவிர எமது மக்களை சிறுமை படுத்துவதற்கல்ல. எனவே பயங்கரவாத தடை சட்டம் கொண்டுவரப்பட்டால் அதற்கு ஆதரவு வழங்க மாட்டோம் என்பதை தெளிவாக சொல்ல விரும்புகிறேன். 

எந்த அரசாங்கமாக இருந்தாலும் சரி சிங்கள பௌத்த பேரினவாதத்தை ஏற்படுத்துவார்களேயானால் இந்த நாட்டை சரியான பாதையிலே முன் கொண்டு செல்ல முடியாது . சிறுபான்மை மக்களின் ஆதரவின்றி இன்றைய ஜனாதிபதி வெற்றிபெற்றிருப்பது உண்மை தான். இருந்தாலும் இந்த நாட்டில் சிறுபான்மை மக்கள் சரியாக வாழாமல் இந்த நாட்டை முன்னோக்கி கொண்டுசெல்லமுடியாது.

எனவே இந்த அரசாங்கத்தின் நல்ல விடயங்களிற்கு நாங்கள் ஆதரவு தெரிவித்து அதன் மூலமாக எமது மக்களுக்கு தேவையான அபிவிருத்திகளையும் உரிமைகளையும் பெற்றுக்கொள்வதற்கு நாங்கள் தயங்கமாட்டோம். அதேவேளை மக்களிற்கு பிழையான செயற்பாடுகள் எதும் நடந்தால் நிச்சயாமாக ஆதரவு வழங்கமாட்டோம் என தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நாட்டில் வைத்தியர்களுக்குப் பற்றாக்குறை!

2024-04-19 13:04:56
news-image

வரலாறு : கச்சதீவு யாருக்கு சொந்தம்...

2024-04-19 13:12:49
news-image

கொழும்பில் சட்டவிரோதமாக நிர்மாணிக்கப்பட்ட கட்டிடங்கள் தொடர்பில்...

2024-04-19 12:39:54
news-image

பாதாள உலக குழுக்களைச் சேர்ந்த மேலும்...

2024-04-19 12:26:04
news-image

கலால் திணைக்களத்தின் அதிகாரி பணி இடைநிறுத்தம்!

2024-04-19 12:49:10
news-image

அநுர, சஜித் சிறு பிள்ளைகள், நாட்டைக்...

2024-04-19 12:12:49
news-image

நச்சுத்தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 10 பெண்கள் உட்பட...

2024-04-19 12:10:56
news-image

செவ்வாய் கிரகத்தில் வாழ்வது எப்படி :...

2024-04-19 12:31:10
news-image

கடுகண்ணாவை நகரை சுற்றுலாத் தலமாக அபிவிருத்தி...

2024-04-19 11:42:14
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு 71 வயதான...

2024-04-19 11:48:31
news-image

பிரிட்டிஸ் சிறுவர்களிற்கு வழங்கும் அதேபாதுகாப்பை டியாகோர்கார்சியாவில்...

2024-04-19 11:32:34
news-image

சுதந்திரக் கட்சியின் உள்ளக விவகாரங்களில் தலையிடும்...

2024-04-19 11:35:43