வடக்கு கிழக்கு மாகாண மக்கள் அங்கலாய்ப்பிலேயே வாழ்ந்து வருகின்றார்கள் - அருட்தந்தை ஜெயக்குமார்

Published By: Digital Desk 4

25 Jan, 2020 | 02:40 PM
image

(எம்.நியூட்டன்)

தற்போதைய சூழலில் வடக்கு கிழக்கு மக்கள் அங்கலாய்ப்பிலே வாழ்ந்து வருகின்றார்கள் எனத்தெரிவித்த அருட்தந்தை ஜெயக்குமார் அடிகளார் பெறுப்புக்கூறவேண்டிய அமைச்சர் ஒருவரே அரசியல் அமைப்பை மீறி செயற்படுகின்றார் எனத்தெரிவித்தார்.

இலங்கை தேசிய சமாதானப் பேரவையின் ஏற்பாட்டில் சமயங்கள் மற்றும் இன முரண்பாடுகள் இனக்கப்பட்டின் மூலம் நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்புதல் தொடர்பில் தற்போதைய நிலைமை ஒப்பீட்டாய்தல் மற்றும் எதிர்கால செயல்முறைகளை கலந்துரையாடுவது தொடர்பான கூட்டம் நடைபெற்றபோதே அவர் இதனைத் தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்

அரசியில் அமைப்பில் இருக்கின்ற விடையங்களையே அமைச்சர்கள் மீறுகின்றபோது சாதாரணமாக உள்ள மக்கள் எவ்வாறு வாழ்வது என்பது சவாலான ஒரு விடையமாகவே உள்ளது ஆட்சிகள் மாறும் போது புதிய அரசாங்கம் பதவியேற்றவுடன் கடந்த அரசாங்கம் செய்த அனைத்து வேலைத்திட்டங்களையும் நிறுத்துகின்றது.

இதனால் மக்கள் தான் பாதிக்கப்படுகின்றார்கள் கடன்களைப் பெற்று இந்தத் திட்டங்களை அவர்கள் செய்கின்றபோதுதான் அரசாங்கத்தின் நிதி விடுவிக்கப் படுகின்றது அவ்வாறான சூழலில் ஆட்சி மாற்றம் வருகின்றபோது அனைத்து வேலைத்திட்டங்களுக்கான நிதிகள் விடுவிக்கப்படாமையினால் அந்த மக்கள் சொல்லெண்ணாத் துயரங்களுக்கு ஆளாகின்றார்கள்.

யுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் மீளமுடியா நிலையில் இருக்கின்றபோது மீளவும் இத்தகைய நடவடிக்கைகள் இடம்பெறுவது ஏற்றுக்கொள்ளமுடியாத ஒன்றே இதுமட்டுமன்றி தற்போது போதைவஸ்துப் பயன்பாடு அதிகரித்துள்ளது இந்தச் செயற்பாடு யார் யார் துணையாக இருக்கின்றார்கள் என்பது தொடர்பில் அனைத்துத் துறைசார்ந்தவர்களையும் விசாரணைக்குட்படுத்தப்படவே அல்லது சந்தேகிக்கப்படவேண்டிய தேவையுள்ளது. 

குறிப்பாக கடலால்தான் போதைப்பொருட்கள் கடத்தப்படுவதாக ஆதாரபூர்வமாக சுட்டிக்காட்டப்படுகின்றது. அவ்வாறு என்றால் கடலில் கடற்படை இருக்கின்றது. முப்படையினர் இருக்கின்றார்கள் அவ்வாறாயின் எவ்வாறு இந்தப்பேதைப் பொருட்கள் கடலால் கடத்தப்படுகின்றது.

கடத்தப்படுகின்ற போதைப்பொருட்கள் இளைஞர்களை அடையாளப்படுத்தி வியாபாரமும் மேற்கொள்ளப்படுகின்றது. இளைஞர்களும் இதற்கு அடிமையாகின்றார்கள் இந்தச் செயற்பாடு அதிகரித்துக் காணப்படுகின்றமை இது திட்டமிட்ட செயற்பாடாகவுள்ளது. எனவே குறித்த விடையங்களை எவ்வாறு தடுப்பது என்பதை நாங்கள் கலந்துரையாடி முடிவுகள் எடுக்கப்படவேண்டும் எனத் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22