சாளம்பைக்குளம் குப்பைமேடு விவகாரம் ; போராட்டத்திற்கு  நீதிமன்றம் தடை உத்தரவு

Published By: Digital Desk 4

25 Jan, 2020 | 01:01 PM
image

வவுனியா மன்னார் வீதி புதிய சாளம்பைக்குளம் கிராமத்திற்கு அருகில் பாதுகாப்பற்ற முறையில் அமைக்கப்பட்டுள்ள, குப்பை மேட்டினை அகற்றும்படி பிரதேசமக்களால் கடந்த புதன்கிழமை ஆரம்பிக்கப்பட்ட கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் நேற்று (24) 3வது நாளாகவும் தொடர்ந்து இடம்பெற்று வந்தது.

இந்நிலையில் வவுனியா தெற்கு தமிழ் பிரதேசசபை தலைவரால் குறித்த விடயம் தொடர்பாக பூவரசங்குளம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்று  வழங்கப்பட்டிருந்தது.

குறித்த முறைப்பாடு தொடர்பான வழக்கு விசாரணை வவுனியா நீதவான் நீதிமன்றில் நேற்று எடுத்து கொள்ளப்பட்டது.

இதன் போது குறித்த போராட்டம் மக்களினது அன்றாட கடமைகளிற்கும், பாதுகாப்பிற்கும் தடையாக இருப்பதாக நீதிமன்றிற்கு தெரிவதனால் அதில் பங்குபற்றியுள்ளவர்களை அந்த இடத்தை விட்டு செல்லுமாறு அறிவுறுத்தல் வழங்குமாறு பூவரசங்குளம் பொலிஸ்நிலைய பொறுப்பதிகாரிக்கு நீதிமன்றம் உத்தரவு வழங்கியது.

குறித்த உத்தரவை பொலிஸ் பொறுப்பதிகாரி போராட்டக்காரர்களிற்கு காண்பித்து விடயம் தொடர்பில் தெரிவித்திருந்தார். இந்நிலையில் நீதிமன்ற உத்தரவை கருத்தில் கொண்டு போராட்டம் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டது.

குறித்த போராட்டம் காரணமாக குப்பைகளை கொட்டும் வாகனங்கள் உட்செல்லமுடியாத வகையில் ஆர்ப்பாட்டம் இடம்பெறுவதால் வவுனியா நகரசபை மற்றும் பிரதேச சபை கழிவகற்றும் வாகனங்கள் நேற்றயதினமும் நகரில் குப்பைகளை அகற்றமுடியாத நிலை ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மே மாத இறுதிக்குள் வடக்கில் 60...

2024-04-18 17:27:02
news-image

யாழில் நள்ளிரவில் சுண்ணகற்கள் அகழ்ந்து எடுக்கப்பட்டு...

2024-04-18 17:21:57
news-image

உண்ணாவிரதமிருந்து உயிர்நீர்த்த தியாகதீபம் அன்னை பூபதியின்...

2024-04-18 18:54:05
news-image

இராணுவ வீரர்களின் பொதுமன்னிப்பு காலம் தொடர்பில்...

2024-04-18 19:50:26
news-image

பாடசாலை சூழலில் கனரக வாகனங்கள் போக்குவரத்தில்...

2024-04-18 17:13:51
news-image

யாழில் குழாய்க்கிணறுகளை தோன்றுவதால் ஏற்படும் ஆபத்துக்கள்...

2024-04-18 17:29:02
news-image

கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு கோழி இறைச்சி...

2024-04-18 17:43:51
news-image

மாளிகாகந்த நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட சந்தேக...

2024-04-18 17:24:50
news-image

திருகோணமலை வைத்தியசாலையில் நோயாளர் காவு வண்டிகள்...

2024-04-18 17:13:38
news-image

வரலாற்றில் இன்று : 1956 ஏப்ரல்...

2024-04-18 17:01:15
news-image

கோட்டா என்னை ஏமாற்றினார் - மல்கம்...

2024-04-18 16:58:51
news-image

திரியாய் தமிழ் மகாவித்தியாலயத்தின் குடிநீர்ப் பிரச்சினைக்கு...

2024-04-18 16:51:36