கொரோனா வைரஸ்: 65 மில்லியன் மக்களைக் கொல்லக்கூடும்

Published By: Digital Desk 3

25 Jan, 2020 | 03:17 PM
image

கொரோனா  வைரஸ் நோய் குறித்து 3 மாதங்களுக்கு முன்பு  எச்சரிக்கை விடுத்த அமெரிக்க சுகாதார விஞ்ஞானிகள் 65 மில்லியன் மக்களைக் கொல்லக்கூடும் என்பதையும் சுட்டி காட்டியுள்ளமை ஆச்சரியத்தை  ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் சுகாதார பாதுகாப்புக்கான ஜோன்ஸ் ஹாப்கின்ஸ் மையத்தின் (Johns Hopkins Center for Health Security) விஞ்ஞானிகள் சீனாவின் உஹானில் ஒரு மர்மமான கொரோனா வைரஸ் பரவிய செய்தி ஜனவரி தொடக்கத்தில் வெளிவந்தபோது அதிர்ச்சியடையவில்லை.

இது குறித்து மூன்று மாதங்களுக்கு முன்னர்  ஒரு கொரோனா வைரஸ் சம்பந்தப்பட்ட உலகளாவிய தொற்றுநோயை பற்றி எச்சரிக்கை விடுத்திருந்தனர்.

சீனாவில் உஹானில் பரவியது ஒரு தொற்றுநோயாக கருதப்படவில்லை, ஆனால் இந்த வைரஸ் தாய்லாந்து, ஜப்பான், தென் கொரியா, தாய்வான், வியட்நாம், சிங்கப்பூர் மற்றும் சவுதி அரேபியா மற்றும் அமெரிக்காவிலும் பதிவாகியுள்ளது.

இதுவரை, இந்த வைரஸ் 41 பேர் உயிரிழந்துள்ளதுடன்  1,321 க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளார்கள். ஆனால் வல்லுநர்கள் உண்மையான எண்ணிக்கை ஆயிரக்கணக்கானவர்கள் என்று கணித்துள்ளனர்.

கொரோனா வைரஸ்கள் பொதுவாக சுவாசக்குழாயை பாதிக்கின்றன மற்றும் நிமோனியா அல்லது ஜலதோஷம் போன்ற நோய்களுக்கு வழிவகுக்கும். சீனாவில் கடுமையான சுவாச நோய் அறிகுறி வெடித்ததற்கு ஒரு கொரோனா வைரஸ் காரணமாக இருந்ததுள்ளது,  இது 2000 ஆம் ஆண்டுகளின் முற்பகுதியில் சுமார் 8,000 பேரை பாதித்தது மற்றும்  774 பேரைக் கொன்றது.

மூத்த விஞ்ஞானி எரிக் டோனர் தெரிவிக்கையில், 

"ஒரு புதிய தொற்றுநோயை ஏற்படுத்தக்கூடிய வைரஸ் ஒரு கொரோனா வைரஸாக இருக்கும் என்று நான் நீண்ட காலமாக நினைத்தேன்," 

“இது எவ்வளவு தொற்றும் என்று எங்களுக்கு இன்னும் தெரியவில்லை. இது மனிதரிடமிருந்து மனிதருக்கு பரப்பப்படுவதை நாங்கள் அறிவோம், ஆனால் எந்த அளவிற்கு என எங்களுக்குத் தெரியாது, மேலும் குறித்த வைரஸ் “ சார்ஸை விட கணிசமான லேசானது என்றாலும் மறுபுறம், இது சமூக அமைப்பில் சார்ஸை விட அதிகமாக பரவக்கூடியதாக இருக்கலாம் ” என்று டோனர் தெரிவித்துள்ளார்.

டோனரின் ஒரு கற்பனையான கொரிய கொரோனா வைரஸ் தொற்றுநோயை உருவகப்படுத்துவது ஆறு மாதங்களுக்குப் பிறகு, உலகின் ஒவ்வொரு நாட்டிலும் வைரஸ் பாதிப்புகள் இருக்கும் என்று பரிந்துரைத்தது. 18 மாதங்களுக்குள், 65 மில்லியன் மக்கள் இறக்கக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.

தடுப்பூசிகளை விரைவாக உருவாக்க விஞ்ஞானிகள் ஒரு வழியைக் கண்டுபிடிக்கவில்லை என்றால், ஆபத்தான வைரஸ் தாக்கம் பரவுவது தொடரும் என தெரிவித்துள்ளார்.

ஏனென்றால் நகரங்கள் அதிக நெரிசலாகி வருகின்றன, மேலும் பொதுவாக வனவிலங்குகளுக்காக ஒதுக்கப்பட்ட இடங்களை மனிதர்கள் ஆக்கிரமித்து, தொற்று நோய்களுக்கான இனப்பெருக்கம் செய்யும் இடத்தை உருவாக்குகிறார்கள்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47
news-image

வான்வழி விநியோகத்தை நிறுத்துமாறு ஹமாஸ் கோரிக்கை:...

2024-03-27 18:56:33
news-image

ஜேர்மனியில் பேர்லின் - சூரிச் பஸ்...

2024-03-27 18:06:25
news-image

ஒரு பாலினத் திருமண சட்டமூலம் தாய்லாந்து...

2024-03-27 13:27:50
news-image

கடலுக்குள் விழுந்த உதவிப்பொருட்களை மீட்க முயன்ற...

2024-03-27 12:18:17
news-image

பாக்கிஸ்தானில் தற்கொலை குண்டுதாக்குதல் - ஐந்து...

2024-03-26 17:42:13
news-image

அமெரிக்காவிற்கு நாடு கடத்தப்படுவதற்கு எதிரான வழக்கு...

2024-03-26 17:06:35
news-image

இலங்கைக்கு வந்துகொண்டிருந்த கப்பலே அமெரிக்காவின் பல்டிமோர்...

2024-03-26 15:02:50