69 இலட்சம் மக்களின் எதிர்பார்ப்புக்களை இரு மாதத்திற்குள் அரசு சூனியமாக்கியுள்ளது : முஜிபுர்

Published By: R. Kalaichelvan

24 Jan, 2020 | 04:36 PM
image

(ஆர்.விதுஷா)

ஆட்சி பீடமேறி இருமாதத்திற்குள்ளேயே 69 இலட்சம் மக்களின் எதிர்பார்ப்புக்களை ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவின் அரசாங்கம்  சூனியமாக்கியுள்ளது என ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் கடுமையாக விமர்சித்துள்ளது.

42 உறுப்பினர்களை கொண்டு நான்கு ஆண்டு காலமாக பல்வேறு  மக்கள் நல  திட்டங்களை  முன்னெடுத்திருந்த நிலையில்,   உறுதி  மொழிகளை  நிறைவேற்ற தற்போதைய அரசாங்கம் மூன்றில் இரண்டு பெரும் பாண்மையை கோருவது விசித்திரமாக உள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளது.  

எதிர்க்கட்சி  தலைவர் காரியாலயத்தில் இன்று இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது இதனை தெரிவித்த அவர் மேலும் தெரிவித்ததாவது,

ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ  தலைமையிலான அரசாங்கம்  ஆட்சிக்கு வந்து  இரண்டு மாதகாலங்கள் நிறைவடைந்துள்ளன. இவர்கள் அளித்த வாக்குறுதிகளை நம்பி 69  இலட்சம்  மக்கள் வாக்களித்தனர். ஆயினும் அந்த மக்களுடைய  எதிர்பார்ப்புக்களை  இந்த அரசாங்கத்தினால் நிறைவேற்ற முடியவில்லை. அரசாங்கத்தின் செயற்பாடுகள் மந்த நிலையிலேயே காணப்படுகின்றது.   

மூன்றில் இரண்டு பெரும்பாண்மையின்றி மக்களுக்கான சலுகை  திட்டங்களை வழங்க முடியாதுள்ளதாக அரசாங்கம் கூறிக்கொள்கின்றது. 

ஆயினும் எமது அரசாங்கம் 42 உறுப்பினர்களுடனேயே ஆட்சியமைத்தது. இருப்பினும் மக்களுக்கு நன்மைபயக்க கூடிய வகையிலான பல்வேறு திட்டங்களை முன்னெடுத்திருந்தோம். 

அதன் ஊடாக  எரிபொருள்  , எரிவாயு  , அத்தியாவசிய பொருட்கள் மற்றும் மின்சார கட்டணம் ஆகியவற்றின் விலைகளை  குறைக்கக்கூடியதாகவிருந்தது.

மேலும் கரப்பினி  தாய்மார்களுக்கான போசனை  உணவுப்பொருட்களை வழங்கக்கூடியதாகவிருந்தது.  

ஆயினும் தற்போது எரிபொருளின் விலை கடந்த 2015  இல் ஆட்சிக்கு  வரும் போது இருந்த நிலையை எட்டியுள்ளது. அத்துடன், மரக்கறி விலை அதிகரித்துள்ளது. அரிசி விலை குறைக்கப்பட்டுள்ளதாக  கூறிக்கொள்கின்றனர். 

ஆயினும் அதன் பலனை மக்களால் உணர முடியவில்லை. சாதாரண மக்களுக்கு தரமற்ற  98  ரூபாய்  அரிசியை உண்ணுமாறு கொடுக்கும்  அமைச்சர்கள் 165  ரூபாய் பெறுமதியான  தரமான அசிரியை  தாம்   உட்கொள்கின்றனர்.

இது எந்த வகையில் நியாயமாகும்.    

அரிசி மாபியாவைக் கூட கட்டுப்படுத்த முடியாத அரசாங்கத்தால் எவ்வாறு போதைப்பொருள் மற்றும் பாதாளக்குழு மாபியாவை  கட்டுப்படுத்த முடியும்.  

மக்களின் ஜீவனோபாயம் பெருமளவில் பாதிப்புக்குள்ளாகியுள்ளது. நாம் அரச ஊழியர்களுக்கான சம்பள உயர்வை வழங்கியிருந்தோம்.  கனிஷ்ட சேவை  அதிகாரிகளுக்கு 3000  ரூபாய் சம்பள அதிகரிப்பை  வழங்கி இருந்தோம்.

அத்துடன், ஒய்வூதிய தொகையை அதிகரித்திருந்தோம்.இந்த நடவடிக்கைகள் அனைத்தும் அமைச்சரவை அனுமதியுடனேயே  மேற்கொள்ளப்பட்டிருந்தன. 

ஆயினும் தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததும் , இந்த சம்பள அதிகரிப்புக்களை நீக்கியுள்ளது.  

முன்னாள்  சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன  மருந்து  பொருட்களுக்கான விலையினை குறைத்திருந்தார். ஆயினும்  இப்பொழுது மருந்துப்பொருட்களுக்கான  விலையும் அதிகரித்துள்ளது. மூன்றில் இரண்டு பெரும்பான்மையின்றி   மக்களுக்கான   சலுகைத்திட்டங்களை பெற்றுக்கொடுக்க முடியாதுள்ளதாக அரசாங்கம் கூறிக்கொள்கின்றது. 

தற்போதைய அரசாங்கம் மூன்றில் இரண்டு பெரும்பாண்மையை கோருவது மக்களுக்கான சலுகைகளை  பெற்றுக்கொடுப்பதற்கு  அல்ல  மாறாக தமது பலத்தை மேலும் வலுவூட்டிக் கொள்வதற்காகவே ஆகும் என அவர் இதன்போது தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53