1000 ரூபா சம்பள உயர்வு ; நீண்­ட­கால தீர்­மானம் மேற்­கொள்­ள கம்­ப­னி­க­ளுடன் அர­சாங்கம் பேசு­கி­றது - ரமேஷ் பத்­தி­ரண 

Published By: Digital Desk 3

24 Jan, 2020 | 12:11 PM
image

 (ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வஸீம்)

தோட்­டத்­தொ­ழி­லா­ளர்­களின் சம்­பள பிரச்­சி­னைக்கு குறு­கிய கால தீர்­மா­னங்­களை மேற்­கொள்­ளாமல் நீண்­ட­கால தீர்­மானம் ஒன்றை மேற்­கொள்ள தோட்­டக்­கம்­ப­னி­க­ளுடன் அர­சாங்கம் கலந்­து­ரை­யாடி வரு­கின்­றது. இதன் ஆரம்­ப­மாக எதிர்­வரும் மார்ச் மாதம் முதல் ஆயிரம் ரூபா சம்­ப­ளத்தை வழங்க முடியும் என்ற நம்­பிக்கை எமக்­கி­ருக்­கின்­றது என்று பெருந்­தோட்டக் கைத்­தொழில் மற்றும் ஏற்­று­மதி விவ­சாய அமைச்சர் ரமேஷ் பத்­தி­ரண  தெரி­வித்தார்.

பாரா­ளு­மன்­றத்தில் நேற்று தோட்டத் தொழி­லா­ளர்­க­ளுக்­கான ஆயிரம் ரூபா சம்­பள அதி­க­ரிப்பு வழங்­கப்­ப­டு­வது தொடர்­பாக அர­சாங்கம் கொண்­டு­வந்த சபை ஒத்­தி­வைப்­பு­வேளை பிரே­ணைக்கு பதி­ல­ளித்து உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் இவ்­வாறு தெரி­வித்தார்.

அவர் அங்கு தொடர்ந்தும் உரை­யாற்­று­கையில், நாட்டை கட்­டி­யெ­ழுப்பும் ஜனா­தி­பதி கோத்தாயவின் வேலைத்­திட்­டத்­துக்கு கட்­சி­ பே­த­மின்றி அனை­வரும் ஒத்­து­ழைப்பு வழங்­கு­வார்கள் என்ற நம்­பிக்கை எமக்­கி­ருக்­கின்­றது. அதேபோல் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் முன்­வைத்­தி­ருக்கும் பிரே­ர­ணையை பூர­ண­மாக ஏற்­றுக்­கொண்டு தோட்­டத்­தொ­ழி­லா­ளர்­க­ளுக்­கான ஆயிரம் ரூபா சம்­பள அதி­க­ரிப்பை பெற்­றுக்­கொ­டுக்க முடியும் என்ற நம்­பிக்கை எமக்­கி­ருக்­கின்­றது.

மேலும் தோட்­டத்­தொ­ழி­லா­ளர்­க­ளுக்கு 1000 ரூபா வழங்க கடந்த அர­சாங்­கத்­தி­னாலும் பிரே­ர­ணைகள் கொண்­டு­வ­ரப்­பட்­டன. ஆனால் அதற்­கான முறை­யொன்று தயா­ரிக்­கப்­ப­ட­வில்லை. அதனால் அனைத்து தரப்­பி­ன­ரதும் பிரே­ர­ணைகள் ஏற்­றுக்­கொண்டு சம்­பள அதி­க­ரிப்­புக்­கான முறை­மை­யொன்றை ஏற்­ப­டுத்த வேண்டும். அத்­துடன் தோட்டத் தொழி­லா­ளர்­க­ளுக்­கான உர­மா­னியம் வழங்­கப்­ப­டு­கின்­றது. என்­றாலும் கம்­ப­னி­களின் நட­வ­டிக்­கையால் சில தோட்­டங்­க­ளுக்கு அது வழங்­கப்­ப­டு­வ­தில்லை என்ற குற்­றச்­சாட்டு இருக்­கின்­றது. அது­தொ­டர்­பா­கவும் நட­வ­டிக்கை எடுப்போம்.  அத்­துடன் தோட்­டத்­தொ­ழி­லா­ளர்­களின் சம்­பள அதி­க­ரிப்பு தொடர்­பாக குறு­கிய கால தீர்­மானம் எடுப்­பதை விடுத்து நீண்­ட­கால தீர்­மானம் ஒன்று குறித்து தோட்­டக்­கம்­ப­னி­க­ளுடன் பேச்­சு­வார்த்தை மேற்­கொள்ள அர­சாங்கம் தீர்­மா­னித்­தி­ருக்­கின்­றது என்றார்.

இதன்­பேது அங்கு உரை­யாற்­றிய இரா­ஜாங்க அமைச்சர் மஹிந்­தா­னந்த அளுத்­க­மகே,

ஜனா­தி­பதி வேட்­பா­ள­ராக நிய­மிக்­கப்­பட்ட கோத்­தாபய தோட்டத் தொழி­லா­ளர்­க ­ளுக்கு ஆயிரம் ரூபா சம்­பளம் அதி­க­ரிப்­ப­தாக வாக்­கு­றுதி கொடுத்தார். அதற்­க­மைய இப்­போது நட­வ­டிக்­கைகள் முன்­னெ­டுக்­கப்­ப­டு­கின்­றன. கடந்த காலங்­களில் முன்­னைய அர­சாங்கம் ஆட்­சியை அமைக்கும் போது 1000 ரூபா சம்­பளம் அதி­க­ரிக்கும் என்­றார்கள். பின்னர் 50 ரூபா தரு­வ­தாக கூறி­னார்கள். இறு­தி­யாக  ஆட்­சி­யா­ளர்கள் ஆயிரம் ரூபா­வையும் கொடுக்­க­வில்லை, ஐம்­பது ரூபா­வையும் கொடுக்­க­வில்லை. ஜனா­தி­பதி  கோத்­தாபய கொடுத்த வாக்­கு­று­தியை இரு மாதங்­களில் மீண்டும் உறு­திப்­ப­டுத்தி மார்ச் மாதத்தில் இருந்து வழங்க தீர்­மானம் எடுத்­துள்ளார்.

இந்­நி­லையில் ஐக்­கிய தேசிய கட்­சி­யினர், அவ்­வாறு ஆயிரம் ரூபா கொடுத்தால் தோட்டக் கம்­ப­னிகள் மூடப்­பட வேண்டி வரும் என கூறு­கின்­றனர். இன்றும் ஐக்­கிய தேசிய கட்சி தோட்ட கம்­ப­னி­க­ளுக்கு சார்­பா­கவே தீர்­மானம் எடுக்­கின்­றது. ஆனால் எமது அர­சாங்கம் இப்­போதும் தோட்ட நிறு­வ­னங்­க­ளுடன் பேச்­சு­வார்த்தை முன்­னெ­டுத்து மார்ச் மாதத்தில் இருந்து சம்­ப­ளத்தை வழங்க நட­வ­டிக்கை எடுத்து வரு­கின்­றது. 22 தோட்ட நிறு­வ­னங்கள் இன்றும் நிர்­வ­கித்து வரு­கின்­றது. இதில் சுமார் 18 நிறு­வ­னங்கள் இலா­பத்தில் இயங்­கு­கின்­றன. அவர்கள் தான் சம்­பள அதி­க­ரிப்பை நிரா­க­ரித்து வரு­கின்­றனர். தொழி­லாளர் பக்கம் சில தியா­கங்­களை செய்ய வேண்டும் என்­பதும் ஏற்­றுக்­கொள்ள வேண்டும். முன்­னைய ஆட்­சியில் வாக்­கு­றுதி கொடுத்­த­வர்கள் இன்று சபையில் இல்லை.ஆனால் நாம் கொடுத்த வாக்­கு­று­தியை நிறை­வேற்­றுவோம். வெறு­மனே சம்­பள அதி­க­ரிப்பு மட்டும் அல்ல, தோட்டத் தொழி­லா­ளர்­களின் வீட்டுப் பிரச்­சி­னை­க­ளுக்கு தீர்­வு­களை வழங்­கவும் அர­சாங்கம் நட­வ­டிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலி­யு­றுத்­து­கின்றோம் என்றார்.

இரா­ஜாங்க அமைச்சர் ஜானக்க வக்­கும்புர கருத்துத் தெரி­விக்­கையில், ஜனா­தி­பதி கோத்­தாபய தோட்ட மக்­க­ளுக்கு அளித்த வாக்­கு­று­தியின் பிர­காரம் ஆயிரம் ரூபா அதி­க­ரிக்க தீர்­மா­னிக்­கப்­பட்­டி­ருக்­கின்­றது. ஆனால் கடந்த அர­சாங்­கத்தில் தோட்ட தொழி­லா­ளர்­க­ளுக்கு சம்­பளம் அதி­க­ரிக்­கப்­ப­ட­வேண்டும் என தெரி­வித்து பாரா­ளு­மன்­றத்தில் தீ மூட்­டிக்­கொள்­ளப்­போ­வ­தாக தெரி­வித்த வடிவேல் சுரேஷ் இன்று சபையில் இல்லை. அவர்­க­ளுக்கு 50 ரூபா கூட தோட்ட தொழி­லா­ளர்­க­ளுக்கு பெற்­றுக்­கொ­டுக்க முடி­யாமல் போன­தை­யிட்டு வெட்­கப்­பட வேண்டும். அத்­துடன் அர­சாங்கம் தீர்­மா­னித்­துள்­ளதன் பிர­காரம் ஆயிரம் ரூபா சம்­பள அதி­க­ரிப்பு மேற்­கொள்ள கம்­ப­னிக்­கா­ரர்கள் நட­வ­டிக்கை எடுக்­க­வேண்டும். அவ்­வாறு முடி­யா­விட்டால் தோட்­டங்­களை அர­சாங்­கத்­துக்கு ஒப்­ப­டைக்­க­ வேண்டும். அதேபோல் இன்று பல ஏக்கர் காணிகள் பயி­ரி­டப்­ப­டாது காடாக மாறி­யி­ருக்கின்றன. அவ்­வா­றான காணி­களை தோட்ட மக்களுக்கு நிபந்தனையுடன் குத்தகைக்கு வழங்கி அதில் பயிரிட நடவடிக்கை எடுக்க வேண் டும் என்ற பிரேரணையை முன்வைக்கின் றேன் என்றார்.

இதன்போது ஆளும்தரப்பு உறுப்பினர் அநுராத ஜயரத்ன குறிப்பிடுகையில், ஜனா திபதி கோத்தாபய தோட்டத் தொழிலாளர் களின் கஷ்டத்தை உணர்ந்தே ஆயிரம் ரூபா சம்பள அதிகரிப்பை வழங்குவ தாக தெரிவித்திருந்தார். நாட்டின் வருமானத் துக்கு பிரதான காரணமாக இருக்கும் தோட் டத்தொழிலாளர்களின் வாழ்க்கை மிகவும் கஷ்டமான நிலையிலேயே இருக்கின்றது. அதனால் அரசாங்கம் இந்த ஆயிரம் ரூபா சம்பள அதிகரிப்பை மிகவிரைவில் வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தமிழக கடற்தொழிலாளர்களின் அத்துமீறல்களை கண்டித்து யாழில்...

2024-03-19 15:38:30
news-image

பிரபல பாதாள உலக, போதைப்பொருள் கடத்தல்...

2024-03-19 15:28:47
news-image

நானுஓயாவில் கஞ்சா போதைப்பொருளுடன் லொறி சாரதி...

2024-03-19 14:59:13
news-image

கோட்டாவின் நூலை வாசிக்கவில்லை - வாசிக்கும்...

2024-03-19 14:42:35
news-image

இவ்வருடத்தின் இதுவரையான காலப் பகுதியில் 5...

2024-03-19 14:44:49
news-image

தயாசிறி ஜயசேகரவும் கோப் குழுவிலிருந்து விலகினார்!

2024-03-19 14:37:52
news-image

சுங்கத் திணைக்கள அதிகாரிகளின் சட்டப்படி வேலை...

2024-03-19 14:30:11
news-image

ஐஸ் போதைப் பொருளுடன் சந்தேக நபர்கள்...

2024-03-19 14:40:27
news-image

கட்டுநாயக்கவிலிருந்து புறப்பட்ட விமானம் மீண்டும் தரையிறக்கம்!

2024-03-19 14:13:26
news-image

ஹெரோயின் போதைப் பொருளுடன் ஒருவர் கைது

2024-03-19 14:18:01
news-image

பாடப்புத்தகங்கள், சீருடைகள் குறித்து கல்வி அமைச்சு...

2024-03-19 14:57:02
news-image

அவுஸ்ரேலிய பாதுகாப்பு அதிகாரிகள் குழு யாழ்.பல்கலைக்கு...

2024-03-19 14:04:31